புதிய விதிகளால் உயர்ந்த விலை - அதிர்ச்சியில் பல்சர் ரசிகர்கள்: விலை குறித்த முழு பட்டியல்!

புதிய பாதுகாப்பு மற்றும் மாசு கட்டுப்பாட்டு விதிகளால் பல்சரின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

புதிய விதிகளால் உயர்ந்த விலை - அதிர்ச்சியில் பல்சர் ரசிகர்கள்: விலை குறித்த முழு பட்டியல்!

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் பஜாஜ் நிறுவனம், பட்ஜெட் விலையில் கூடுதல் வசதிகளைக் கொண்ட வாகனங்களை விற்பனைச் செய்து வருகிறது. முக்கியமாக இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.

தற்போது, நான்கு சக்கர வாகன தயாரிப்பில் களமிறங்கும் விதமாக, க்யூட் என்ற குவாட்ரி சைக்கிளை பஜாஜ் நிறுவனம் அண்மையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

புதிய விதிகளால் உயர்ந்த விலை - அதிர்ச்சியில் பல்சர் ரசிகர்கள்: விலை குறித்த முழு பட்டியல்!

பஜாஜ் நிறுவனத்தின் தயாரிப்பு என்றாலே இந்தியர்கள் மத்தியில் ஓர் நல்ல மதிப்பு உண்டு. அந்தவகையில், இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த டிஸ்கவர், சிடி100, பல்சர், டோமினார் ஆகிய பைக்குகள் மிகவும் பிரபலமானவை.

புதிய விதிகளால் உயர்ந்த விலை - அதிர்ச்சியில் பல்சர் ரசிகர்கள்: விலை குறித்த முழு பட்டியல்!

இதில், பல்சர் பைக்கிற்குதான் அதிகளவில் ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இந்த நிறுவனம் பல்வேறு இருசக்கரங்களை சந்தையில் அறிமுகம் செய்து வந்தாலும், பல்சருக்கு என தனி மவுசு உண்டு. ஆகையால், பஜாஜ் நிறுவனத்தின் சூப்பர் ஸ்டாராக இந்த பல்சர் பார்க்கப்படுகிறது.

புதிய விதிகளால் உயர்ந்த விலை - அதிர்ச்சியில் பல்சர் ரசிகர்கள்: விலை குறித்த முழு பட்டியல்!

இந்த மோட்டார்சைக்கிளை பஜாஜ் நிறுவனம் கடந்த 2001ம் ஆண்டில் தான் முதல் முறையாக விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அன்றிலிருந்து இன்று வரை இந்த பைக்தான் ராஜாவாக இருந்து வருகிறது. அதாவது, கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக பல்சர் மாடல் பைக்குகள் இந்திய சாலையை கலக்கி வருகின்றன. மேலும், இன்றளவு வரை இந்த மோட்டார்சைக்கிளின் மீதான மோகம் இந்திய இளைஞர்களிடம் இருந்து குறைந்தபாடில்லை.

புதிய விதிகளால் உயர்ந்த விலை - அதிர்ச்சியில் பல்சர் ரசிகர்கள்: விலை குறித்த முழு பட்டியல்!

இதன் காரணமாகவே பஜாஜ் நிறுவனம் அவ்வப்போது பல்சர் வரிசையில் பல்வேறு புதிய அப்கிரேட் செய்யப்பட்ட மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. அவ்வாறு, பல்சர் வரிசையில் இதுவரை 8 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

புதிய விதிகளால் உயர்ந்த விலை - அதிர்ச்சியில் பல்சர் ரசிகர்கள்: விலை குறித்த முழு பட்டியல்!

தற்போது, இந்த புதிய மாடல்களை புதிய பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப தயார்படுத்தும் பணியில் பஜாஜ் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், பல்சரின் வரிசையில் ஏபிஎஸ் எனப்படும் ஆன்டிலாக் பிரேக்கிங் வசதியை சேர்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புதிய விதிகளால் உயர்ந்த விலை - அதிர்ச்சியில் பல்சர் ரசிகர்கள்: விலை குறித்த முழு பட்டியல்!

இதில் அண்மையில் சில மாடல்கள் ஏபிஎஸ் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டன. பல்சர் வரிசையில் செய்யப்பட்ட இந்த மாற்றத்தால், அதன் விலையிலும் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த தகவலை பட்டியலாக கீழே காணலாம்.

புதிய விதிகளால் உயர்ந்த விலை - அதிர்ச்சியில் பல்சர் ரசிகர்கள்: விலை குறித்த முழு பட்டியல்!
  • பஜாஜ் பல்சர் 150 ஸ்டாண்டர்ட் ஏபிஎஸ் வசதியுடன் ரூ. 84,461 (ஏபிஎஸ் அல்லாமல் ரூ. 77,050)
    • பஜாஜ் பல்சர் 150 ட்வின் டிஸ்க் ஏபிஎஸ் வசதியுடன் ரூ. 88,339 (ஏபிஎஸ் அல்லாமல் ரூ. 81,043)
      • பஜாஜ் பல்சர் 150 நியான் ஏபிஎஸ் வசதியுடன் ரூ. 68,339 (ஏபிஎஸ் அல்லாமல் ரூ. 65,248)
        • பஜாஜ் பல்சர் என்எல்160 ஏபிஎஸ் வசதியுடன் ரூ. 92,790 (ஏபிஎஸ் அல்லாமல் ரூ. 85,939)
          • பஜாஜ் பல்சர் 180 எச்எஃப் நியான் ஏபிஎஸ் வசதியுடன் ரூ. 94,790 (ஏபிஎஸ் அல்லாமல் ரூ. 87,251)
            • பஜாஜ் பல்சர் என்எஸ்200 ஏபிஎஸ் வசதியுடன் ரூ. 1,12,557 லட்சம் (ஏபிஎஸ் அல்லாமல் ரூ. 1,00,557 லட்சம்)
              • பஜாஜ் பல்சர் 200எஃப் ஏபிஎஸ் வசதியுடன் ரூ. 1,06,529 லட்சம் (ஏபிஎஸ் அல்லாமல் ரூ. 98,945)
                • பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 ரூ. 1,39,635 லட்சம்
                • புதிய விதிகளால் உயர்ந்த விலை - அதிர்ச்சியில் பல்சர் ரசிகர்கள்: விலை குறித்த முழு பட்டியல்!

                  இவையனைத்தும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையாகும். இந்த கணிசமான விலையுயர்வானது புதிய பாதுகாப்பு விதி மற்றும் மாசுகட்டுப்பாட்டு விதியால் ஏற்பட்ட மாற்றமாக இருக்கிறது. இந்த மாற்றங்கள் நம்முடைய பயணத்தையும், சுற்றுப்புறச் சூழலையும் சிறப்பானதாக வைத்துக்கொள்ள உதவும்.

source: bikewale

Most Read Articles
மேலும்... #bajaj auto
English summary
Bajaj Pulsar ABS Series Price List. Read In Tamil.
Story first published: Thursday, April 25, 2019, 16:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X