லடாக்கின் கரடு முரடான சாலையில் சிக்கிய பஜாஜ் பல்சர்... உதவி கரம் நீட்டிய இராணுவ வீரர்... வீடியோ!

இமயமலை சாகச பயணத்தின்போது மேலே முன்னேறிச் செல்ல முடியாமல் சிக்கி தவித்த பஜாஜ் பல்சர் பைக்கிற்கு இந்திய இராணுவ வீரர்கள் உதவி கரம் நீட்டியுள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

லடாக்கின் கரடு முரடான சாலையில் சிக்கிய பஜாஜ் பல்சர்... இக்கட்டான சூழலில் உதவிக் கரம் நீட்டிய இராணுவ வீரர்... வீடியோ!

சாகச மற்றும் வாகன ஆர்வலர்களுக்கு மிகவும் விருப்பமான இடங்களில் ஒன்றாக இமயமலை இருக்கின்றது. இங்கு ஒவ்வொரு ஆண்டும், ஏராளமான பைக்கர்கள் வந்து செல்லும் வழக்கத்தை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர்.

இங்குள்ள மலைச் சிகரங்கள் தெவிட்டாத, கண்களுக்கு குளிர்ச்சியான காட்சியளிக்கும் வகையில் இருப்பதே இதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.

லடாக்கின் கரடு முரடான சாலையில் சிக்கிய பஜாஜ் பல்சர்... இக்கட்டான சூழலில் உதவிக் கரம் நீட்டிய இராணுவ வீரர்... வீடியோ!

இமயமலை மலைத்தொடரில் வாகனங்களில் சவாரி செய்வது பூங்காவில் நடை பழகுவதைப் போன்று இருப்பதில்லை. அவை, மிகவும் ஆபத்தான மற்றும் அதிக சவால்களைக் கொண்ட பாதையாக இருக்கின்றன.

லடாக்கின் கரடு முரடான சாலையில் சிக்கிய பஜாஜ் பல்சர்... இக்கட்டான சூழலில் உதவிக் கரம் நீட்டிய இராணுவ வீரர்... வீடியோ!

உண்மையில், ஒரு சில நேரங்களில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை உணராத முடியாத அளவிலான சிக்கல்களை அந்த பாதைகள் ஏற்படுத்துவிடும்.

இதனை வெளிப்படுத்துகின்ற வகையில் ஓர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதனை, ஃபுட்லூஸ் தேவ் என்ற யுடியூப் தளம் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

இமயமலையில் சாகசம் பயணம் மேற்கொள்ளும் வகையில் இரு இளைஞர்கள் பைக்கில் சென்றனர். அதில், ஒருவரின் கையில் ஜாவா 42 பைக்கும், மற்றொருவரிடம் பஜாஜ் பல்சர் ஆர்எஸ் 200 பைக்கும் இருந்துள்ளது. இதில், பல்சர் பைக் மட்டும் மலையின் கரடு முரடான பாதையில் முன்னேற முடியாமல் சிக்கிக் கொண்டது.

அப்போது, அவ்வழியாக வந்த இந்திய இராணுவ வீரர்கள் சிலர், பைக் மேற்கொண்டு செல்லும் வகையில் உதவி செய்துள்ளனர்.

லடாக்கின் கரடு முரடான சாலையில் சிக்கிய பஜாஜ் பல்சர்... இக்கட்டான சூழலில் உதவிக் கரம் நீட்டிய இராணுவ வீரர்... வீடியோ!

இமயமலையின் குறுக்காக சவாரி செய்ய விரும்பிய அவ்விரு பைக்கர்களும் லடாக் வழியாக பயணித்துள்ளனர். டெல்லியில் இருந்து புறப்பட்ட இவ்விருவர்களும், முன்பாக இமாச்சல பிரதேசத்தின் சாக் பாஸ் என்ற பகுதிக்குச் சென்றுள்ளனர்.

இங்கிருந்து குறுகிய நேரத்தில் இமயமலையை சென்றடையும் விதமாக லடாக் பாதையைத் தேர்வு செய்தனர்.

லடாக்கின் கரடு முரடான சாலையில் சிக்கிய பஜாஜ் பல்சர்... இக்கட்டான சூழலில் உதவிக் கரம் நீட்டிய இராணுவ வீரர்... வீடியோ!

அவ்வாறு, அந்த பாதையில் செல்லும்போதே சிக்கலைச் சந்தித்துள்ளனர். அந்த பயணத்தை அவர்கள் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே பல இன்னல்களை அவர்கள் இருவரும் சந்தித்ததாக தெரிகின்றது.

இதில், பஜாஜ் பல்சர் ஆர்எஸ் 200 பைக் மட்டும் அதிகளவில் சவாலைச் சந்திக்க நேர்ந்துள்ளது. அந்தவகையில், பிடிமானம் இல்லாத கரடுமுரடான பாதையில் பயணிக்க சற்றே பஜாஜ் பல்சர் திணறியுள்ளது.

லடாக்கின் கரடு முரடான சாலையில் சிக்கிய பஜாஜ் பல்சர்... இக்கட்டான சூழலில் உதவிக் கரம் நீட்டிய இராணுவ வீரர்... வீடியோ!

மேலும், மலைப் பாதை உயரமாக இருந்ததன் காரணத்தால் அந்த பைக்கால் சீறான இழுவை வேகத்தை அளிக்க முடியவில்லை. இதனால் அந்த பைக் முன்னேற முடியாமல் நீண்ட நேரமாக தவித்துள்ளது. ஆகையால், ஜாவா 42 பைக்கை வைத்திருந்த இளைஞரும், பஜாஜ் பல்சருக்கு உதவி புரிய களமிறங்குகின்றார்.

லடாக்கின் கரடு முரடான சாலையில் சிக்கிய பஜாஜ் பல்சர்... இக்கட்டான சூழலில் உதவிக் கரம் நீட்டிய இராணுவ வீரர்... வீடியோ!

இருப்பினும், மலைப் பாதை மிகவும் மோசமாக இருந்ததன் காரணத்தால் அவர்களால் சிக்கலை சமாளிக்க முடியவில்லை.

அப்போது, இந்திய இராணுவத்தைச் சேர்ந்த வீரர்கள் குழுவாகச் சென்றுள்ளனர். அதில், ஒரு வீரர் மட்டும் தாமாக முன்வந்து இளைஞர்களுக்கு உதவி புரிகின்றார். வீரர் மற்றும் ஜாவா 42 வாகன ஓட்டி ஆகிய இருவரும் இணைந்து பல்சர் பைக்கை ஒரு தள்ளில் மீட்டு விடுகின்றனர்.

லடாக்கின் கரடு முரடான சாலையில் சிக்கிய பஜாஜ் பல்சர்... இக்கட்டான சூழலில் உதவிக் கரம் நீட்டிய இராணுவ வீரர்... வீடியோ!

பின்னர், நீண்ட நேர போராட்டத்திற்கு பின் பைக் அங்கிருந்து முன்னேறி சென்றது. இதையடுத்து, அவர்கள் இருவரும் அந்த வீரருக்கு நன்றியைத் தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்படுகின்றனர்.

லடாக்கின் கரடு முரடான சாலையில் சிக்கிய பஜாஜ் பல்சர்... இக்கட்டான சூழலில் உதவிக் கரம் நீட்டிய இராணுவ வீரர்... வீடியோ!

பொதுவாக இமயமலை போன்ற கரடு முரடான சாலையில் பயணிக்க ஆஃப் ரோடு வாகனங்களை மிகவும் சிறந்ததாக இருக்கும். இந்தியாவில் ஆஃப் பயணங்களுக்கென தனியாக பிரத்யேக வசதியைக் கொண்ட பைக்குகள் ஏராளமாக கிடைக்கின்றன.

லடாக்கின் கரடு முரடான சாலையில் சிக்கிய பஜாஜ் பல்சர்... இக்கட்டான சூழலில் உதவிக் கரம் நீட்டிய இராணுவ வீரர்... வீடியோ!

அண்மையில் ஹீரோ நிறுவனம், ஆஃப் ரோடு பயணத்திற்கான மலிவு விலை எக்ஸ்-பல்ஸ் பைக்கை அறிமுகம் செய்திருந்தது. இதேபோன்று, ராயல் என்பீல்டு நிறுவனம் பிரிமியம் வசதியுடன் இமாலயன் என்ற ஆஃப் ரோடு பைக்கை இந்தியாவில் விற்பனைச் செய்து வருகின்றது.

லடாக்கின் கரடு முரடான சாலையில் சிக்கிய பஜாஜ் பல்சர்... இக்கட்டான சூழலில் உதவிக் கரம் நீட்டிய இராணுவ வீரர்... வீடியோ!

இந்த பைக்குகள் ஆஃப் ரோடு மட்டுமின்றி அனைத்துவிதமான சாலைகளிலும் பயணிக்க உகந்ததாக இருக்கும். ஆனால், பல்சர் போன்ற ஸ்போர்ட்ஸ் ஸ்டைலிலான பைக்குகள் கரடுமுரடான நிலப்பரப்பில் எந்தவித பயனையும் அளிக்காது. மாறாக, மேலே பார்த்ததைப் போன்று இக்கட்டான சூழ்நிலையைதான் அளிக்கும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Bajaj Pulsar RS 200 Stuck In Ladakh Pushed By Army Man. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X