பஜாஜ் ஆர்எஸ்200 பைக்கின் ட்யூல்-சேனல் வேரியண்ட் விரைவில் இந்தியாவில் அறிமுகம்..விலை எவ்வளவு தெரியுமா

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மிக விரைவில் பல்சர் ஆர்எஸ்200 பைக்கின் ட்யூல்-சேன்ல் ஏபிஎஸ் வேரியண்ட்டை இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதனால் இந்த புதிய வேரியண்ட்டை தயாரிக்கும் பணியில் மிகவும் மும்முரமாக பஜாஜ் நிறுவனம் ஈடுப்பட்டு வருகிறது.

பஜாஜ் ஆர்எஸ்200 பைக்கின் ட்யூல்-சேனல் வேரியண்ட் விரைவில் இந்தியாவில் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.1,43,016ல் இருந்து விற்பனை செய்யப்படவுள்ள இந்த பைக், பல்சர் ஆர்எஸ்200 பைக்கின் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் வேரியண்ட்டை விட 1,402 ரூபாய் விலை அதிகமாகும். மேலும் இந்த ஒரு வேரியண்ட்டை மட்டும் இப்போதைக்கு பஜாஜ் நிறுவனம் பிஎஸ்6 தரத்தில் தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பஜாஜ் ஆர்எஸ்200 பைக்கின் ட்யூல்-சேனல் வேரியண்ட் விரைவில் இந்தியாவில் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

199.5சிசி சிங்கிள்-சிலிண்டர், லிக்யூடு-கூல்டு, 4-வால்வு, ஃப்யுல்-இன்ஜெக்டட், டிரிபிள் ஸ்பார்க், டிடிஎஸ்-ஐ என்ஜினுடன் விற்பனையாகி வரும் பல்சர் ஆர்எஸ்200 பைக் அதிகப்பட்சமாக 9,750 ஆர்பிஎம்-ல் 24.5 பிஎச்பி பவரையும் 8,000 ஆர்பிஎம்-ல் 18.6 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இந்த பைக்கின் அதிகப்பட்ச வேகம் 140.8 kmph ஆகும். பிஎஸ்6-க்கு இணக்கமான பல்சர் ஆர்எஸ்200 பைக்குகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து விற்பனைக்கு வரவுள்ளன.

பஜாஜ் ஆர்எஸ்200 பைக்கின் ட்யூல்-சேனல் வேரியண்ட் விரைவில் இந்தியாவில் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

மற்றப்படி, முந்தைய வேரியண்ட்டில் இருந்த இயந்திர பாகங்கள் தான் இந்த ட்யூல்-சேனல் ஏபிஎஸ் வேரியண்ட்டிலும் தொடரவுள்ளன. முன் சக்கரத்தில் கன்வென்ஷ்னல் டெலிஸ்கோப் ஃபோர்க்ஸ், பின் சக்கரத்தில் மோனோ-ஷாக் போன்றவையும் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் வேரியண்ட்டில் இருந்து அப்படியே இந்த வேரியண்ட்டிற்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பஜாஜ் ஆர்எஸ்200 பைக்கின் ட்யூல்-சேனல் வேரியண்ட் விரைவில் இந்தியாவில் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

டிஸ்க் ப்ரேக், பெடல் வடிவில் முன்புறத்தில் 300 மிமீ-லும் பின்புறத்தில் 230 மிமீ-லும் ஆர்எஸ்200 பைக்கின் இந்த புதிய வேரியண்ட்டில் கொடுக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பிற்கு ட்யூல்-சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் உள்ளது. இந்த பைக் பற்றிய தகவல்கள் ஒருபுறம் இருக்க, சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் வேரியண்ட்டின் தயாரிப்பு அடுத்த வருடம் வரை இருக்குமா என்ற கவலை ஆர்எஸ் பைக் பிரியர்கள் இடையே உருவாகியுள்ளது.

பஜாஜ் ஆர்எஸ்200 பைக்கின் ட்யூல்-சேனல் வேரியண்ட் விரைவில் இந்தியாவில் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

நமக்கு தெரிந்தவரை பல்சர் ஆர்எஸ்200 பைக்கின் சிங்கிள்-சேனல் வேரியண்ட்டின் தயாரிப்பு அடுத்த ஆண்டு முதல் நிறுத்தப்படவே அதிக வாய்ப்பு உள்ளது. ஏனெனில் விற்பனை தொடர்ந்து சரிவை கண்டுவந்த பல்சர் 125 பைக்கின் ட்ரம் வேரியண்ட்டை சத்தமேயின்றி பஜாஜ் நிறுவனம் சமீபத்தில் நிறுத்தியுள்ளது.

பஜாஜ் ஆர்எஸ்200 பைக்கின் ட்யூல்-சேனல் வேரியண்ட் விரைவில் இந்தியாவில் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

இதனால் பல்சர் 125 பைக் நியான் நிற தேர்வில் மட்டும் தான் டீலர்ஷிப்களிடம் தற்போதைக்கு கிடைக்கிறது. பஜாஜ் நிறுவனத்தின் இந்த பல்சர் 125 ட்ரம் வேரியண்ட்டின் தயாரிப்பு நிறுத்தம் குறித்த முழுமையான தகவல்களை கீழேயுள்ள லிங்க் மூலம் அறிந்து கொள்ளலாம்.

பஜாஜ் ஆர்எஸ்200 பைக்கின் ட்யூல்-சேனல் வேரியண்ட் விரைவில் இந்தியாவில் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

மீண்டும் ஆர்எஸ்200 பைக்கின் புதிய வேரியண்ட் பக்கம் வருவோம். பகல்நேரத்திலும் ஒளிரக்கூடிய எல்இடி ட்வின்-பேட் ப்ரோஜெக்டர் ஹெட்லைட்ஸ், எல்இடி டெயில்லைட், க்ளிப்-ஆன் ஹேண்ட்பார்ஸ் மற்றும் இரண்டாக பிளவுப்பட்ட இருக்கை போன்ற அமைப்புகளுடன் பல்சர் ஆர்எஸ்200 பைக் விற்பனையாகி வருகிறது. அதிக வளைவுகளை கொண்ட வெளிப்புற ப்ரேம்களுடன் உள்ள இந்த பைக், ரேசிங் ரெட், ரேசிங் ப்ளூ மற்றும் க்ராபைட் ப்ளாக் என மூன்று பளிச்சிடும் நிற தேர்வுகளில் விற்பனைக்கு கிடைக்கிறது.

Most Read Articles
மேலும்... #bajaj auto
English summary
Bajaj Pulsar RS200 dual-channel ABS to be launched soon - Report
Story first published: Friday, November 29, 2019, 18:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X