பஜாஜ் பல்சர் பைக் விலை உயர்கின்றதா...? அதுவும் இத்தனை சதவீதமா!!!

பஜாஜ் நிறுவனத்தின் புகழ்வாய்ந்த பைக்குகளில் ஒன்றான பல்சர் மாடலின் விலை உயரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான காரணம் மற்றும் எத்தனை சதவீதம் உயரவிருக்கின்றது என்ற தகவலை இந்த பதிவில் காணலாம்.

பஜாஜ் பல்சர் பைக் விலை உயர்கின்றதா...? அதுவும் இத்தனை சதவீதமா!!!

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் பஜாஜ் நிறுவனத்தின் புகழ்பெற்ற பைக்குகளில் ஒன்றாக பல்சர் இருக்கின்றது. இது, அந்நிறுவனத்தின் புகழ்பெற்ற மாடலாக இருப்பது மட்டுமின்றி இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பைக்குகளிலும் ஒன்றாக இருக்கின்றது.

பஜாஜ் பல்சர் பைக் விலை உயர்கின்றதா...? அதுவும் இத்தனை சதவீதமா!!!

இதனை உறுதிப்படுத்தும் வகையில், இதன் ஜுலை மாத விற்பனை நிலவரம் இருக்கின்றது. அந்தவகையில், கடந்த ஜுலை மாத இருசக்கர வாகனங்களின் விற்பனைப் பட்டியலில் பஜாஜ் பல்சர் பைக் அதிகம் விற்பனையாகும் பைக்குகளில் 5ம் இடத்தைப் பிடித்திருந்தது.

பஜாஜ் பல்சர் பைக் விலை உயர்கின்றதா...? அதுவும் இத்தனை சதவீதமா!!!

பஜாஜ் நிறுவனம், பல்சர் வரிசையில் ஆறு மாடல்களை விற்பனைச் செய்து வருகின்றது. அதில், விலைக் குறைந்த மாடலாக பல்சர்125 இருக்கின்றது. இதன் விலை ரூ. 66 ஆயிரம் ஆகும். இதேபோன்று, அதிக விலைக் கொண்ட மாடலாக பல்சர் ஆர்எஸ்200 மாடல் இருக்கின்றது. இதன் விலை ரூ. 1,40,237 ஆகும்.

இவையனைத்தும், பிஎஸ்-4 தரத்திலான எஞ்ஜினைக் கொண்ட பல்சர் பைக்குகளின் விலையாகும்.

பஜாஜ் பல்சர் பைக் விலை உயர்கின்றதா...? அதுவும் இத்தனை சதவீதமா!!!

இந்த தரத்திலான எஞ்ஜினைக் கொண்ட வாகனங்களை வருகின்ற 2020ம் ஆண்டு ஏப்ரலம் மாதம்முதல் விற்பனைச் செய்ய தடைவிதிக்கப்பட உள்ளது. ஆகையால், பஜாஜ் நிறுவனம் அதன் அனைத்து பல்சர் மாடல் பைக்குகளை பிஎஸ்-6 தரத்திற்கு உயர்த்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.

இதனால், பல்சர் பைக்குகளின் விலை 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பஜாஜ் பல்சர் பைக் விலை உயர்கின்றதா...? அதுவும் இத்தனை சதவீதமா!!!

முன்னதாக, உற்பத்தி செலவு உயர்வின் காரணமாக கடந்த ஜுலை மாதம் கணிசமான விலையுயர்வு பல்சர் வரிசையில் விற்பனையாகும் பைக்குகளுக்கு விதிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, புதிதாக விலையுயர்வைப் பெற்று விற்பனைக்கு வரவிருக்கும் பல்சர் பைக்குகள் 2020ம் ஆண்டிலேயே சந்தையில் கிடைக்க உள்ளது.

பஜாஜ் பல்சர் பைக் விலை உயர்கின்றதா...? அதுவும் இத்தனை சதவீதமா!!!

தற்போது, பஜாஜ் நிறுவனம் பிஎஸ்-6 தர சான்றிற்காக காத்திருப்பதாக கூறப்படுகின்றது. ஆகையால், அராய் அமைப்பிடம் இருந்து இந்த சான்று பெற்ற பின்னர், பஜாஜ் நிறுவனம் பல்சர் வரிசையில் உள்ள பைக்குகளை பிஎஸ்-6 தரத்திற்கு உயர்த்தும் என தெரிகின்றது.

பஜாஜ் பல்சர் பைக் விலை உயர்கின்றதா...? அதுவும் இத்தனை சதவீதமா!!!

இத்துடன், பல்சர் வரிசையில் ப்யூவல் இன்ஜெக்சன் திறன் கொண்ட எஞ்ஜினையும் அது அறிமுகம் செய்ய உள்ளது. மேலும், கூடுதலாக சில மதிப்புகூட்டப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட உள்ளன.

ஆனால், இதன் எஞ்ஜினின் சக்தி அதிகரிக்கப்படுமா என்ற தகவல் வெளியாகவில்லை. பஜாஜ் நிறுவனத்தைப் போன்றே, மற்ற வாகன தயாரிப்பு நிறுவனங்களும் பிஎஸ்-6 தரத்திற்கு வாகனங்களை உயர்த்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

பஜாஜ் பல்சர் பைக் விலை உயர்கின்றதா...? அதுவும் இத்தனை சதவீதமா!!!

அந்தவகையில், புதிய பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்தில் அப்கிரேட் செய்யப்பட்ட முதல் ஸ்கூட்டரை ஹோண்டா நிறுவனம் இன்று அறிமுகம் செய்கின்றது. இத்தகைய சிறப்பை அந்நிறுவனத்தின் ஆக்டிவாதான் பெற்றிருக்கின்றது.

பஜாஜ் பல்சர் பைக் விலை உயர்கின்றதா...? அதுவும் இத்தனை சதவீதமா!!!

இந்த ஸ்கூட்டரில் சிறப்பு தொழில்நுட்ப வசதியாக, ஃப்யூவல் இன்ஜெக்சன் மற்றும் ஹோண்டாவின் ஸ்மார்ட் பவர் சிஸ்டம் நிறுவப்பட்டுள்ளது. இது, எரிபொருளை குறைவாக பயன்படுத்துவதுடன், உராய்வு மற்றும் கூடுதல் திறனை வெளிப்படுத்தும் சக்தியை எஞ்ஜினுக்கு வழங்கும்.

Most Read Articles
மேலும்... #bajaj auto
English summary
Bajaj Pulsar Will Get Price Increase. Read In Tamil.
Story first published: Wednesday, September 11, 2019, 12:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X