இந்திய மின்சார வாகன சந்தையில் புரட்சியை செய்ய தயாராகும் பஜாஜ் ஸ்கூட்டர்: பெயர் பற்றிய தகவல் கசிவு!

பஜாஜ் நிறுவனத்தின் புதிய ஸ்கூட்டருக்கு வைக்கப்பட உள்ள பெயர் பற்றிய தகவல் கசிந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்திய மின்சார வாகன சந்தையில் புரட்சியை செய்ய தயாராகும் பஜாஜ் ஸ்கூட்டர்: பெயர் பற்றிய தகவல் கசிவு!

இந்தியாவை தலைமையமாகக் கொண்டு இயங்கி வரும் பஜாஜ் நிறுவனம், இருசக்கர வாகன தயாரிப்பை மையமாகக் கொண்டு இயங்கி வருகின்றது.

அதிலும், முக்கியமாக பைக் தயாரிப்பில் மட்டுமே அந்த நிறுவனம் அதிக கவனம் செலுத்தி வருகின்றது. இந்நிலையில், அதன் ஆதிக்கத்தை ஸ்கூட்டர் சந்தை பக்கம் திருப்பும் விதமான முயற்சியில் அண்மைக் காலங்களாக அது ஈடுபட்டு வருகின்றது.

இந்திய மின்சார வாகன சந்தையில் புரட்சியை செய்ய தயாராகும் பஜாஜ் ஸ்கூட்டர்: பெயர் பற்றிய தகவல் கசிவு!

இதற்காக, புதிதாக உருவாக்கப்பட்ட ஸ்கூட்டர் ஒன்றை அந்நிறுவனம், அவ்வப்போது சாலையில் வைத்து சோதனையோட்டம் செய்து வந்தது.

சோதனையோட்டம் செய்யப்பட்ட அந்த ஸ்கூட்டர், மறைக்கப்பட்ட தோற்றத்தில் காணப்பட்டாலும், அதைப் பற்றிய சில சுவாரஷ்ய தகவல்கள் கசிய தொடங்கியுள்ளன.

இந்திய மின்சார வாகன சந்தையில் புரட்சியை செய்ய தயாராகும் பஜாஜ் ஸ்கூட்டர்: பெயர் பற்றிய தகவல் கசிவு!

தற்போது பஜாஜ் நிறுவனம் தயாரித்து வரும் புதிய ஸ்கூட்டர்களை அர்பனைட் என்னும் பிராண்டில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த பிராண்டின்கீழ் எரிபொருள் ஸ்கூட்டர் மட்டுமின்றி மின்சார ஸ்கூட்டர்களையும் அது களமிறக்க உள்ளது.

இந்நிலையில், மிக விரைவில் இந்த புதிய பிராண்டின்கீழ் மின்சார ஸ்கூட்டர் ஒன்றை அந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.

இந்திய மின்சார வாகன சந்தையில் புரட்சியை செய்ய தயாராகும் பஜாஜ் ஸ்கூட்டர்: பெயர் பற்றிய தகவல் கசிவு!

இந்நிகழ்வு வருகின்ற 16ம் நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழை பஜாஜ் நிறுவனம் தற்போது வாகனத்துறைச் சார்ந்த நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்து வருகின்றது. மேலும், இந்நிகழ்விற்கு எம்ஜிஆர் பாணியில் 'நாளை நமது' (ஹமாரா கல்) என்ற பெயரை அது வைத்துள்ளது.

புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுக நிகழ்வில் மத்திய அமைச்சர் நிதின் கலந்துக்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய மின்சார வாகன சந்தையில் புரட்சியை செய்ய தயாராகும் பஜாஜ் ஸ்கூட்டர்: பெயர் பற்றிய தகவல் கசிவு!

பஜாஜ் நிறுவனம் தயார் செய்துள்ள இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், தற்போது இந்தியாவின் சில முக்கிய நகரங்களில் மட்டும் மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு கடுமையான போட்டியைக் கொடுக்கின்ற வகையில் உருவாகியுள்ளது.

அதுமட்டுமின்றி, இந்திய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில், பஜாஜ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்திய மின்சார வாகன சந்தையில் புரட்சியை செய்ய தயாராகும் பஜாஜ் ஸ்கூட்டர்: பெயர் பற்றிய தகவல் கசிவு!

இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை, பஜாஜ் நிறுவனம் எந்த பெயரில் அறிமகும் செய்ய இருக்கின்றது என்ற உறுதியான தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை. இருப்பினும், அந்நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு செடாக் சிக் எலெக்ட்ரிக் (Chetak Chic Electric)என்ற பெயரை பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

MOST READ: மரண பயத்தை காட்டும் இந்த போட்டோக்களை பார்த்த பிறகும் சாலை விதிகளை மீறுவீங்க? கண்டிப்பா மாட்டீங்க

இந்திய மின்சார வாகன சந்தையில் புரட்சியை செய்ய தயாராகும் பஜாஜ் ஸ்கூட்டர்: பெயர் பற்றிய தகவல் கசிவு!

செடாக் என்ற பெயரில் ஏற்கனவே பஜாஜ் நிறுவனம் ஸ்கூட்டர்களை விற்பனைச் செய்து வந்தது குறிப்பிடத்தகுந்தது. இது, அந்நிறுவனத்தின் வெற்றிகரமான மாடலாக இருந்தது. ஆகையால், செடாக் என்ற பெயரையே பஜாஜ் நிறுவனம் பயன்படுத்த அதிகம் வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பஜாஜ் நிறுவனத்தின் இந்த ஸ்கூட்டர்கள் நடப்பாண்டின் ஆரம்பத்திலேயே அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் பரவி வந்தன. இருப்பினும், ஒரு சில காரணங்களால் அது தள்ளிப்போடப்பட்டு வந்தது.

MOST READ: ரூ.1.72 லட்சம் விலையில் லிமிடேட் எடிசன் பைக்கை அறிமுகம் செய்தது ஜாவா மோட்டார்ஸ் நிறுவனம்..

இந்திய மின்சார வாகன சந்தையில் புரட்சியை செய்ய தயாராகும் பஜாஜ் ஸ்கூட்டர்: பெயர் பற்றிய தகவல் கசிவு!

அதேசமயம், ஆரம்பத்தில் சோதனையோட்டம் ஈடுபடுத்தப்பட்ட சில ஸ்கூட்டர்கள் ஐசி எஞ்ஜின் மற்றும் சைலென்சர்களைப் பொருத்தியவாறு காணப்பட்டது. ஆகையால், பஜாஜ் அர்பனைட் பிராண்டில் விரைவில் எரிபொருள் எஞ்ஜின் கொண்ட ஸ்கூட்டரும் களமிறக்கப்படும் என எதிர்பார்க்க்படுகின்றது. ஆனால், முதலில் மின்சார ஸ்கூட்டரே அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

MOST READ: திறன் வாய்ந்த பேட்டரியுடன் புதிய டிகோர் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்!

இந்திய மின்சார வாகன சந்தையில் புரட்சியை செய்ய தயாராகும் பஜாஜ் ஸ்கூட்டர்: பெயர் பற்றிய தகவல் கசிவு!

அந்த ஸ்கூட்டர் வெஸ்பா ஸ்கூட்டர்களைப் போலவே, பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டிருப்பது தெரிகின்றது. அந்தவகையில், புதிய பஜாஜ் ஸ்கூட்டர் வட்ட வடிவிலான ஹெட்லைட், கண்ணாடி மற்றும் உடல் தோற்றத்தைப் பெற்றிருக்கின்றது. இதனை, முன்னதாக வெளியாகிய ஸ்பை படங்கள் உறுதி செய்கின்றன.

இந்திய மின்சார வாகன சந்தையில் புரட்சியை செய்ய தயாராகும் பஜாஜ் ஸ்கூட்டர்: பெயர் பற்றிய தகவல் கசிவு!

தொடர்ந்து, இதுவரை வெளியான ஸ்பை படங்களின்படி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், அலாய் வீல்கள், முன்புறத்தில் டிஸ்க் பிரேக் வசதி மற்றும் யுஎஸ்பி சார்ஜர் உள்ளிட்ட வசதிகளை இந்த ஸ்கூட்டர் பெற்றிருக்கும் என தெரிகின்றது.

நகர்ப்புற பயன்பாட்டை மையமாகக் கொண்டு இந்த ஸ்கூட்டர் தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசின் ஃபேம்-2 திட்டத்தின்கீழ் மானிய வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்திய மின்சார வாகன சந்தையில் புரட்சியை செய்ய தயாராகும் பஜாஜ் ஸ்கூட்டர்: பெயர் பற்றிய தகவல் கசிவு!

மேலும், பஜாஜ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு பிரத்யேக மொபைல் போன் அப்ளிகேஷன் மற்றும் கூடுதலாக சில தொழில்நுட்ப வசதிகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், அவைகுறித்த அதிகாரப்பூர்வான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. எனவே, வருகின்ற 16ம் தேதி அவையனைத்தும் வெளியிடப்படும் என்ற ஆவலில் வாகன விரும்பிகள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Most Read Articles

English summary
Bajaj Registered Chetak Chic Electric Name For New Electric Scooter. Read In Tamil.
Story first published: Thursday, October 10, 2019, 12:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X