அடுத்த அதிர்ச்சி... வரலாற்று சிறப்புமிக்க பைக்கின் உற்பத்தியை நிறுத்தப்போகிறதா பஜாஜ்...?

பல்வேறு வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பஜாஜ் நிறுவனம் தனது வரலாற்று சிறப்புமிக்க மோட்டார் சைக்கிளின் உற்பத்தியை முடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த அதிர்ச்சி... வரலாற்று சிறப்புமிக்க பைக்கின் உற்பத்தியை நிறுத்தப்போகிறதா பஜாஜ்...?

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம், பல்வேறு விதமான வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றது. இந்த நிறுவனம் கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பஜாஜ் வி15 என்ற புதிய மாடல் மோட்டார்சைக்கிளை இருசக்கர வாகனச் சந்தையில் அறிமுகம் செய்தது. அறிமுகம் செய்யப்பட்ட புதிதில் இந்த மோட்டார்சைக்கிள் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்படி, அறிமுகமான முதல் வாரத்திலேயே இந்த பைக் சுமார் 20 ஆயிரம் புக்கிங்களைப் பெற்றது.

அடுத்த அதிர்ச்சி... வரலாற்று சிறப்புமிக்க பைக்கின் உற்பத்தியை நிறுத்தப்போகிறதா பஜாஜ்...?

இதைத்தொடர்ந்து, அறிமுகமான இரண்டு மாதங்களில் இந்தியாவிலேயே அதிகம் விற்பனையான பைக் என்ற சிறப்பையும் பெற்றது. இதற்கு காரணம் பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிளானது, இந்தியாவின் ஐஎன்எஸ் விக்ராந்த் என்ற போர் கப்பலின் பாகங்களில் இருந்து தயாரிக்கப்பட்டது. ஐஎன்எஸ் விக்ராந்த் தான் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட முழு முதல் போர் விமானம் தாங்கி கப்பல் ஆகும். மேலும், 1971ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரின்போது இந்த கப்பல் மிகப்பெரிய பங்காற்றியதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த அதிர்ச்சி... வரலாற்று சிறப்புமிக்க பைக்கின் உற்பத்தியை நிறுத்தப்போகிறதா பஜாஜ்...?

இதன்காரணமாக, விமான தாங்கி போர் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த்திற்கு மரியாதைச் செலுத்தும் விதமாக, அதன் உதரிபாகங்களைக் கொண்டு பஜாஜ் வி15 மோட்டார் சைக்கிள் தயாரிப்பதாக பஜாஜ் நிறுவனம் அறிவித்திருந்தது. இதன் அறிவிப்பாலேயே பலர் இதன்மீது ஈர்ப்பு கொண்டனர். மேலும், பஜாஜ் வி15-ன் விலையும் அதிகம் விற்பனையாக காரணமாக இருந்தது. ஏனென்றால், 150சிசி திறன் மோட்டார் சைக்கிளை, பஜாஜ் நிறுவனம் 62 ஆயிரம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைச் செய்தது.

அடுத்த அதிர்ச்சி... வரலாற்று சிறப்புமிக்க பைக்கின் உற்பத்தியை நிறுத்தப்போகிறதா பஜாஜ்...?

பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள், அபாரமான வெற்றி அடைந்ததையடுத்து, வி15 மோட்டார்சைக்கிள் அடிப்படையில், பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பல்வேறு புதிய மோட்டர்சைக்கிள்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டது. இத்தகைய சிறப்பை உடைய இந்த மோட்டார் சைக்கிளின் விற்பனையானது சமீபகாலமாக தொடர் சரிவையேக் கண்டு வருகிறது. மேலும், சந்தையில் அதிகரித்துவரும் போட்டியின் காரணமாகவும் இதன் விற்பனை மந்த நிலையை அடையக் காரணமாக உள்ளது.

இதுபோன்ற காரணங்களால் பஜாஜ் நிறுவனம் வி15 பைக்கின் உற்பத்தியை கை விடவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த நிறுவனம் வி12 பைக்கின் உற்பத்தியை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தொடர் சரிவைக் கண்டுவரும் பஜாஜ் வி15 மோட்டார் சைக்கிள் உற்பத்தியையும் பஜாஜ் நிறுவனம் நிறுத்த இருப்பதாக முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Most Read Articles
மேலும்... #bajaj auto
English summary
Bajaj Might Discontinue Production Of The V15: Here’s Why It Makes Sense. Read In Tamil.
Story first published: Saturday, March 9, 2019, 18:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X