சேத்தக், ஹஸ்குவர்னா, கேடிஎம் பைக்குகள் ஒரே ஷோரூமில் காட்சியளிக்க உள்ளதா..? சிறப்பு தகவல்!

கேடிஎம், சேத்தக் மற்றும் ஹஸ்குவர்னா ஆகிய பிராண்டுகளில் உள்ள இருசக்கர வாகனங்கள் ஒரே ஷோரூமில் விற்பனைக்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

சேத்தக், ஹஸ்குவர்னா, கேடிஎம் பைக்குகள் ஒரே ஷோரூமில் காட்சியளிக்க உள்ளதா..? சிறப்பு தகவல்!

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் பஜாஜ் நிறுவனம், அதன் தயாரிப்புகளை மட்டுமின்றி கூடுதலாக மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களின் தயாரிப்புகளையும் தன்னுடைய உற்பத்தி ஆலையில் வைத்து தயாரித்து வருகின்றது.

அதுமட்டுமின்றி, நாடு முழுவதும் ஷோரூம்கள் அமைத்து அதன் மேற்பார்வையில் விற்பனையையும் செய்து வருகின்றது.

சேத்தக், ஹஸ்குவர்னா, கேடிஎம் பைக்குகள் ஒரே ஷோரூமில் காட்சியளிக்க உள்ளதா..? சிறப்பு தகவல்!

இந்த நிலையில், கேடிஎம் நிறுவனத்தின் மற்றுமொரு அங்கமாக செயல்பட்டு வரும் ஹஸ்குவர்னா நிறுவனத்தின் இந்திய உரிமையையும் பஜாஜ் பெற்றிருக்கின்றது. ஆகையால், கேடிஎம் நிறுவனத்தின் தயாரிப்புகளுடன் இனி ஹஸ்குவர்னா நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களையும் பஜாஜ் தயாரித்து விற்பனைச் செய்ய இருக்கின்றது.

சேத்தக், ஹஸ்குவர்னா, கேடிஎம் பைக்குகள் ஒரே ஷோரூமில் காட்சியளிக்க உள்ளதா..? சிறப்பு தகவல்!

இந்நிலையில், பஜாஜ் நிறுவனம் தனது பிரிமியம் பிராண்டுகளாக செயல்பட்டு வரும் கேடிஎம், ஹஸ்குவர்னா மற்றும் புதிய சேடக் உள்ளிட்ட வாகனங்களை ஒரே ஷோரூமில் வைத்து விற்பனைச் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்த தகவலை பைக் வேல் ஆங்கில செய்தி தளம் வெளியிட்டுள்ளது.

சேத்தக், ஹஸ்குவர்னா, கேடிஎம் பைக்குகள் ஒரே ஷோரூமில் காட்சியளிக்க உள்ளதா..? சிறப்பு தகவல்!

ஆகையால், இனி கேடிஎம் பைக்குகள் விற்கப்படும் அதே ஷோரூம்களில்தான் புதிய லாஞ்சுகளாக அறிமுகமாகியுள்ள சேடக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் ஹஸ்குவர்னா இருசக்கர வாகனங்கள் ஆகியவை விற்பனைக்குக் கிடைக்க உள்ளன.

இந்த பாணியை நாட்டின் அனைத்து நகரங்களிலும் உள்ள ஷோரூம்களிலும் பஜாஜ் கையாள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சேத்தக், ஹஸ்குவர்னா, கேடிஎம் பைக்குகள் ஒரே ஷோரூமில் காட்சியளிக்க உள்ளதா..? சிறப்பு தகவல்!

எனவே, இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள கேடிஎம் ஷோரூம்களில், அந்த பிராண்டின் இருசக்கரங்களுடன் சேர்த்து புதிய முகங்களின் தரிசனமும் கிடைக்க இருக்கின்றது.

ஆகையால், அனைத்து கேடிஎம் டீலர்களும் புதிய வாகனங்களின் வருகைக்காக தங்களின் ஷோரூம்களை கூடுதல் இட வசதி கொண்டதாக விரிவாக்கம் செய்வதற்கான பணியில் களமிறங்கியுள்ளனர்.

MOST READ: அதிர்ஷ்டசாலிகள் நொய்டா வாசிகள்... வாசல் தேடி வரும் சிறப்பு வசதி.. என்னனு தெரியுமா..?

சேத்தக், ஹஸ்குவர்னா, கேடிஎம் பைக்குகள் ஒரே ஷோரூமில் காட்சியளிக்க உள்ளதா..? சிறப்பு தகவல்!

அதேசமயம், ஒரு சில டீலர்கள் தற்போதைய ஷோரூம்களுக்கு பதிலாக பெரியளவிலான இடவசதிக் கொண்ட ஷோரூம்களுக்கு மாற முயற்சி செய்து வருகின்றனர்.

இந்த பிரத்யேக நடவடிக்கையால், முன்பைக் காட்டிலும் கூடுதலான பலனை அடைய முடியும் என்ற பஜாஜ் நம்பிக்கைக் கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது. மேலும், ஒரே இடத்தில் பல தரப்பட்ட தேர்வை வழங்கும்போது வாடிக்கையாளர்களை எளிதில் கவர முடியும் எனவும் அது நம்புகின்றது.

MOST READ: பக்கா மாஸ்... பிரதமர் மோடிக்கு போட்டியாக மம்தா பானர்ஜி செய்யும் அதிரடி... என்னவென்று தெரியுமா?

சேத்தக், ஹஸ்குவர்னா, கேடிஎம் பைக்குகள் ஒரே ஷோரூமில் காட்சியளிக்க உள்ளதா..? சிறப்பு தகவல்!

இந்த ஷோரூம்கள் இந்திய வாடிக்கையாளர்களுக்கு மிக சிறந்த ஷாப்பிங் அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். மேலும், ஒரு குடும்பம் ஒன்றுக்கு மேற்பட்ட இருசக்கர வாகனங்களுடன் ஷோரூமில் இருந்து வெளியேறுவதர்கான வாய்ப்புகளையும் இது உருவாக்கும்.

MOST READ: வசூல் கிங்காக மாறிய டோல் பூத்துகள்... 2018-19 வரை எத்தனை கோடி வசூல் செய்யப்பட்டது என தெரியுமா..?

சேத்தக், ஹஸ்குவர்னா, கேடிஎம் பைக்குகள் ஒரே ஷோரூமில் காட்சியளிக்க உள்ளதா..? சிறப்பு தகவல்!

அதேசமயம், பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட பிராண்டுகளிலிருந்து வாகனங்களை தேர்வு செய்ய விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல அணுகுமுறையாக இருக்கும். ஆகையால், பஜாஜ் மேற்கொண்டிருக்கும் இந்த நடவடிக்கை நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

English summary
Bajaj To Sell Chetak Husqvarna From KTM Showrooms. Read In Tamil.
Story first published: Saturday, December 7, 2019, 16:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X