இந்திய பைக் சந்தையை கலக்க வரும் பஜாஜ்-டிரையம்ப் கூட்டணி... போட்டி நிறுவனங்கள் கலக்கம்!

இந்தியாவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான பஜாஜ் தனது வியாபரத்தை அதிகரிக்கும் விதமாக சர்வதேச பைக் தயாரிப்பு நிறுவனம் டிரையம்ப் உடன் இணைந்துள்ளது.

இந்திய பைக் சந்தையை கலக்க வரும் பஜாஜ்-டிரையம்ப் கூட்டணி... போட்டி நிறுவனங்கள் கலக்கம்!

நாட்டின் மிகப்பெரிய பைக் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ், டிரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனத்துடன் இணைந்து மிட்-கேபாசிட்டி மோட்டார் சைக்கிளை அடுத்த ஆண்டு வெளியிட உள்ளது. கடந்த 2017ம் ஆண்டு இந்த இரு நிறுவனங்களும் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இதனை செய்ய உள்ளன.

இந்திய பைக் சந்தையை கலக்க வரும் பஜாஜ்-டிரையம்ப் கூட்டணி... போட்டி நிறுவனங்கள் கலக்கம்!

மக்களின் தேவையை அறிந்து அதற்கேற்ப வாகனங்களை தயாரிப்பதில் பஜாஜ் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் பஜாஜ் தயாரித்த அனைத்து வாகனங்களும் மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளன.

அதில் மிகப்பெரிய ஹிட் அடித்த பைக் தான் பல்சர்.

இந்திய பைக் சந்தையை கலக்க வரும் பஜாஜ்-டிரையம்ப் கூட்டணி... போட்டி நிறுவனங்கள் கலக்கம்!

இது இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற மாடல். இந்த பைக்கை வைத்து படம் கூட தயாரிக்கப்பட்டது, நாம் அறிந்த ஒன்று. அந்த அளவிற்கு பஜாஜ் பல்சர் பிரசித்து பெற்றது.

இந்திய பைக் சந்தையை கலக்க வரும் பஜாஜ்-டிரையம்ப் கூட்டணி... போட்டி நிறுவனங்கள் கலக்கம்!

இதைத்தொடர்ந்து, பல்சரின் விற்பனையை முறியடிக்கும் வகையில் பல பைக்குகள் மார்கெட்டில் வளம் வந்தன. அவ்வாறு வந்த கேடிஎம் டியூக், ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் உள்ளிட்டவை பல்சரின் விற்பனைக்கு கடுமையான போட்டியை அளித்தன.

இந்திய பைக் சந்தையை கலக்க வரும் பஜாஜ்-டிரையம்ப் கூட்டணி... போட்டி நிறுவனங்கள் கலக்கம்!

இதன்காரணமாக பல்சர் விற்பனை சற்று பின்வாங்கியது. இந்த வீழ்ச்சியை சமன் செய்ய பஜாஜ் டோமினார் களமிறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது சர்வதேச பைக் தயாரிப்பு நிறுவனமான டிரையம்ப் உடன் இணைந்து பைக் தயாரிக்க பஜாஜ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்திய பைக் சந்தையை கலக்க வரும் பஜாஜ்-டிரையம்ப் கூட்டணி... போட்டி நிறுவனங்கள் கலக்கம்!

அதன்படி, அடுத்த ஆண்டிற்குள் மிட்-கேபாசிட்டி மோட்டார் சைக்கிளை இந்த இரு நிறுவனங்களும் தயாரிக்க உள்ளன. இதற்காக இந்நிறுவனங்கள், போட்டித்தன்மை, தரம், விநியோகம், பிராண்ட் நிலை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றின் பங்களிப்புகளுடன் செயல்பட உள்ளன.

இந்திய பைக் சந்தையை கலக்க வரும் பஜாஜ்-டிரையம்ப் கூட்டணி... போட்டி நிறுவனங்கள் கலக்கம்!

பஜாஜ் சாகான் ஆலையில் தயாரிக்கப்படும் இந்த மோட்டார் சைக்கிளுக்கு, டிரையம்ப் நிறுவனம் பொறியியல் பணிகளை மேற்கொள்ள உள்ளது. மேலும், இந்த பைக்கில் 500 சிசி பவருள்ள எஞ்ஜின் பொருத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய பைக் சந்தையை கலக்க வரும் பஜாஜ்-டிரையம்ப் கூட்டணி... போட்டி நிறுவனங்கள் கலக்கம்!

இதையடுத்து, பிரீமியம் மோட்டார் சைக்கிள் இடத்தை அதிகரித்து, பஜாஜ் விற்பனையை உள்நாட்டில் அதிகரிக்கவும், அதன் போட்டியாளர்களுக்கு கடுமையான சவாலைக்கொடுக்கவும் குறைந்த விலையில், அதிநவீன மாடல் பைக் வெளியிடப்பட உள்ளன.

இந்திய பைக் சந்தையை கலக்க வரும் பஜாஜ்-டிரையம்ப் கூட்டணி... போட்டி நிறுவனங்கள் கலக்கம்!

மேலும், ஏற்கனவே வளர்ந்த நாடுகளில் உள்ள டிரையம்ப் நிறுவனத்தின் R & D நிபுணத்துவத்தை பயன்படுத்தி பஜாஜ் வாகனங்களை வெளிநாடுகளில் புரமோட் செய்ய உள்ளது. இதைத்தொடர்ந்து, இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய ஏற்றுமதியாளராகவும் பஜாஜ் நிறுவனத்தை உருவாக்க டிரையம்ப் திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Bajaj Triumph Partnership Could Launch First Bike on Coming Year. Read In Tamil.
Story first published: Tuesday, January 29, 2019, 16:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X