உள்நாட்டு சந்தையில் தயாரான 'பேட் ஆர்இ' இ-ஸ்கூட்டர்: மலிவான விலையில் அறிமுகம்...!

இந்தியாவில் உள்ள ராஜஸ்தான் மாநிலத்தை மையமாகக் கொண்டு இயங்கும் 'பேட் ஆர்இ', அதன் முதல் இ-ஸ்கூட்டரை, மலிவான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

உள்நாட்டு சந்தையில் தயாரான பேட்ஆர்இ இ-ஸ்கூட்டர்: மலிவான விலையில் அறிமுகம்...!

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் பகுதியை மையமாகக் கொண்டு இயங்கும் மின் வாகன உற்பத்தி நிறுவனமான 'பேட் ஆர்இ' (BattRE), புதிய இ-ஸ்கூட்டர் ஒன்றை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதுவே, இந்த நிறுவனத்தின் மூலம் விற்பனைக்கு களமிறங்கும் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும்.

உள்நாட்டு சந்தையில் தயாரான பேட்ஆர்இ இ-ஸ்கூட்டர்: மலிவான விலையில் அறிமுகம்...!

ஆர்இ என பெயரிடப்பட்டுள்ள இந்த இ-ஸ்கூட்டரை, அந்த நிறுவனம் ரூ. 63.555 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைச் செய்ய முடிவு செய்துள்ளது.

அதேசமயம், இந்த 'பேட் ஆர்இ' எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் உள்ள சில முக்கிய நகரங்களில் மட்டுமே தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

உள்நாட்டு சந்தையில் தயாரான பேட்ஆர்இ இ-ஸ்கூட்டர்: மலிவான விலையில் அறிமுகம்...!

மலிவான விலையில், உயர் தர எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதே தங்கள் நிறுவனத்தின் முக்கிய இலக்கு என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையிலேயே, அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட 'பேட் ஆர்இ' என்ற இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை குறைவான விலையில் அறிமுகம் செய்திருப்பாத அது தெரிவித்துள்ளது.

உள்நாட்டு சந்தையில் தயாரான பேட்ஆர்இ இ-ஸ்கூட்டர்: மலிவான விலையில் அறிமுகம்...!

மேலும், இந்த நிறுவனம் ஐஓடி (Internet of Things) எனப்படும், மொபைல் போனுடன், கனெக்ட் செய்யும் தொழில்நுட்பம் பொருந்திய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த அம்சத்தின் மூலம், ஸ்மார்ட்போனை, ஸ்கூட்டருடன் இணைத்து பல்வேறு தகவல்களை, அதன் திரை மூலமாகவே அறிந்துகொள்ள இந்த வசதி உதவும்.

உள்நாட்டு சந்தையில் தயாரான பேட்ஆர்இ இ-ஸ்கூட்டர்: மலிவான விலையில் அறிமுகம்...!

தற்போது விற்பனைக்கு அறிமுகமாகியிருக்கும், இந்த புதிய 'பேட் ஆர்இ' எலக்ட்ரிக் ஸ்கூட்டரில், சிறப்பான திறனை வெளிப்படுத்துவதற்காக 250வாட் திறன் கொண்ட பிடிஎல்சி மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது, மணிக்கு அதிகபட்சமாக 25 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது. இதற்கு சக்தியை வழங்கும் விதமாக 48v சக்தி வெளிப்படுத்தும் 30Ah லித்தியம் அயன் பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு சந்தையில் தயாரான பேட்ஆர்இ இ-ஸ்கூட்டர்: மலிவான விலையில் அறிமுகம்...!

இதனை முழுமையாக சார்ஜ் செய்தால், 90 கிமீ தூரம் வரை பயணிக்கலாம். அதேசமயம், இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் சிறப்பான சஸ்பென்ஷனுக்காக, ஹைட்ராலிக் சாக் அப்சார்பர் இரு முனைகளில் வழங்கப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் மொத்த எடையும் வெறும் 65 கிலோவாக உள்ளது. ஆகையால், இதனை கையாள்வது மிக எளிதாக இருக்கும்.

உள்நாட்டு சந்தையில் தயாரான பேட்ஆர்இ இ-ஸ்கூட்டர்: மலிவான விலையில் அறிமுகம்...!

மேலும், இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பாதுகாப்பு வசதியாக, முன் மற்றும் பின்பக்க வீல்களுக்கு டிஸ்க் பிரேக் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன், ட்யூப் லெஸ் டயருடன் கூடிய அலாய் வீல் இதில் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் முகப்பு பகுதியில், வட்ட வடிவிலான எல்இடி ஹெட்லேம்ப் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பிரத்யேகமாக இதன் சைட் இன்டிகேட்டர் மின் விளக்குகள், ஹேண்டில் பாருக்கு கீழாக பொருத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு சந்தையில் தயாரான பேட்ஆர்இ இ-ஸ்கூட்டர்: மலிவான விலையில் அறிமுகம்...!

இதைத்தொடர்ந்து, தொழில்நுட்ப அம்சங்களாக இந்த புதிய இ-ஸ்கூட்டரில், எல்சிடி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் வழங்கப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்த அனைத்த தகவலையும் நமக்கு வழங்கும். அதாவது, இ-ஸ்கூட்டரின் வேகம், பேட்டரி அளவு, சார்ஜிங் அளவு, வெப்ப நிலை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை வழங்கக்கூடியது.

உள்நாட்டு சந்தையில் தயாரான பேட்ஆர்இ இ-ஸ்கூட்டர்: மலிவான விலையில் அறிமுகம்...!

எல்சிடி திரைக்கு முன்பாக கப் போன்ற அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இது, எல்சிடி திரை வழங்கும் அனைத்து தகவலையும் எளிதில் காணக் கூடிய வகையில், அதாவது, வெளிச்சத்திலிருந்து தகவல்கள் மறைப்பதைத் தவிர்க்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன், இந்த எலக்ட்ரிக் ஸகூட்டரை சாவி இல்லாமலே ஸ்டார்ட் செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு சந்தையில் தயாரான பேட்ஆர்இ இ-ஸ்கூட்டர்: மலிவான விலையில் அறிமுகம்...!

மேலும், திருட்டில் இருந்து காத்துக்கொள்ளும் தொழில்நுட்பம் (Anti-theft alarm), ரிவர்ஸ் அசிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த எலக்ட்ரிக் பைக்கில் வழங்கப்பட்டுள்ளன. இந்த 'பேட் ஆர்இ' எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஏற்கனவே இந்தியச் சந்தையில் விற்பனையில் இருக்கும், ஃப்ளாஷ் எல்ஐ மற்றும் ஆப்டிமா எல்ஐ உள்ளிட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன் போட்டியைச் சந்திக்க உள்ளது.

Most Read Articles
English summary
BattRE Electric Scooter Officially Launched. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X