பெனெல்லி இம்பீரியல் 400 பைக்கின் டெலிவிரி துவங்கும் தேதி அறிவிப்பு!

ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 மாடலுக்கு போட்டியாக வந்துள்ள புதிய பெனெல்லி இம்பீரியல் 400 பைக்கின் டெலிவிரி பணிகள் துவங்கும் தேதி விபரம் வெளியாகி இருக்கிறது.

பெனெல்லி இம்பீரியல் 400 பைக்கின் டெலிவிரி துவங்கும் தேதி அறிவிப்பு!

இந்தியாவில் இரண்டாவது இன்னிங்சை துவங்கி இருக்கும் பெனெல்லி நிறுவனம் தொடர்ந்து புதிய மாடல்களை களமிறக்கி அதிரடி காட்டி வருகிறது. அண்மையில் லியோன்சினோ 500 மற்றும் 250 சிசி மாடல்களை விற்பனைக்கு கொண்டு வந்த அந்நிறுவனம் தற்போது பழமையை போற்றும் க்ளாசிக் ரகத்திலான புதிய இம்பீரியல் 400 பைக்கை நேற்று களமிறக்கியது.

பெனெல்லி இம்பீரியல் 400 பைக்கின் டெலிவிரி துவங்கும் தேதி அறிவிப்பு!

ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 மோட்டார்சைக்கிளுக்கு நேர் போட்டியாக கருதப்படும் இந்த மாடல் மிக சரியான விலையில் சிறந்த அம்சங்களுடன் வந்துள்ளது. ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 மாடல் ரூ.1.54 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படும் நிலையில், இந்த புதிய பைக் ரூ.1.69 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் களமிறக்கப்பட்டுள்ளது.

பெனெல்லி இம்பீரியல் 400 பைக்கின் டெலிவிரி துவங்கும் தேதி அறிவிப்பு!

கடந்த மாதம் 27ந் தேதி இந்த புதிய பைக்கிற்கு பெனெல்லி நிறுவனம் முன்பதிவை துவங்கியது. இந்த நிலையில், இதுவரை 500 பேர் இந்த பைக்கை முன்பதிவு செய்துள்ளதாக பெனெல்லி தெரிவித்துள்ளது. இது சிறப்பான துவக்கமாகவே கருதப்படுகிறது.

பெனெல்லி இம்பீரியல் 400 பைக்கின் டெலிவிரி துவங்கும் தேதி அறிவிப்பு!

1950ம் ஆண்டு காலக்கட்டத்தில் பெனெல்லி நிறுவனம் தயாரித்த இம்பீரியல் பைக்கின் அடிப்படையிலான டிசைன் அம்சங்களுடன் நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த புதிய பைக் மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிக அளவில் க்ரோம் பாகங்கள், வட்ட வடிவ ஹெட்லைட் ஹவுசிங், ஸ்போக்ஸ் வீல்கள் ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாக உள்ளன.

பெனெல்லி இம்பீரியல் 400 பைக்கின் டெலிவிரி துவங்கும் தேதி அறிவிப்பு!

இந்த பைக்கில் சிங்கள் சிலிண்டர் கொண்ட 374 சிசி எஞ்சின் இடம்பெற்றுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 20.7 பிஎச்பி பவரையும், 29 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

பெனெல்லி இம்பீரியல் 400 பைக்கின் டெலிவிரி துவங்கும் தேதி அறிவிப்பு!

பெனெல்லி பைக்கில் முன்புறத்தில் 41 மிமீ நீள டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய ஸ்பிரிங் ஷாக் அப்சார்பர்களும் உள்ளன. அதேபோன்று, முன்சக்கரத்தில் 300 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் இடம்பெற்றுள்ளன. இந்த பைக்கில் இரண்டு சக்கரங்களுக்குமான டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது.

பெனெல்லி இம்பீரியல் 400 பைக்கின் டெலிவிரி துவங்கும் தேதி அறிவிப்பு!

இந்த பைக்கிற்கு 3 ஆண்டுகளுக்கான வரம்பில்லா கிலோமீட்டர்களுக்கான வாரண்டியும், இரண்டு ஆண்டுகளுக்கு கட்டணமில்லா பராமரிப்பு திட்டமும் வழங்கப்படுகிறது. மேலும், ஆண்டு பராமரிப்புத் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெனெல்லி இம்பீரியல் 400 பைக்கின் டெலிவிரி துவங்கும் தேதி அறிவிப்பு!

புதிய பெனெல்லி பைக்கிற்கு இதுவரை 500 பேர் முன்பதிவு செய்துள்ள நிலையில், வரும் 27ந் தேதி தீபாவளி பண்டிகை முதல் டெலிலிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.4,000 முன்பணத்துடன் இந்த பைக்கிற்கு முன்பதிவு ஏற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #பெனெல்லி #benelli
English summary
Italian bike maker, Benelli has revealed the deliveries of the Imperiale 400 are scheduled to start from Diwali onwards, across all the exclusive Benelli showrooms in India.
Story first published: Wednesday, October 23, 2019, 16:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X