குட் நியூஸ்... பெனெல்லி இம்பீரியல் 400 பைக்கிற்கு முன்பதிவு துவங்கியது!

பெனெல்லி இம்பீரியல் 400 பைக்கிற்கு முன்பதிவு அதிகாரப்பூர்வமாக துவங்கி இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

குட் நியூஸ்... பெனெல்லி இம்பீரியல் 400 பைக்கிற்கு முன்பதிவு துவங்கியது!

ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 மோட்டார்சைக்கிளுக்கு நேர் போட்டியாக புதிய பைக் மாடலை பெனெல்லி நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. கடந்த 2017ம் ஆண்டு முதல் வெளிநாடுகளில் விற்பனையில் இருக்கும் இம்பீரியல் 400 என்ற ரெட்ரோ க்ளாசிக் டிசைன் அம்சங்களுடன் கூடிய பைக் மாடல்தான் இந்தியாவில் களமிறக்கப்பட இருக்கிறது.

குட் நியூஸ்... பெனெல்லி இம்பீரியல் 400 பைக்கிற்கு முன்பதிவு துவங்கியது!

அடுத்த மாதம் 21ந் தேதி இந்த புதிய பெனெல்லி இம்பீரியல் 400 பைக் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இதனை உறுதி செய்யும்விதமாக, இந்த புதிய பைக் மாடலுக்கு தற்போது டீலர்களில் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. பெனெல்லி இந்தியா இணையதளம் மற்றும் டீலர்களில் ரூ.4,000 முன்பணத்துடன் புக்கிங் செய்யப்படுகிறது.

குட் நியூஸ்... பெனெல்லி இம்பீரியல் 400 பைக்கிற்கு முன்பதிவு துவங்கியது!

இந்த புதிய பைக் பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் நவீன தொழில்நுட்ப கலவைகளுடன் கலந்து கட்டிய மாடலாக வருகிறது. வட்ட வடிவிலான ஹெட்லைட், கண்ணீர் துளி வடிவமைப்பில் குறிப்பிடப்படும் எரிபொருள் கலன், ஸ்பிளிட் இருக்கை அமைப்பு, அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை இதனை ரெட்ரோ க்ளாசிக் ரக மாடலாக பரைசாற்றுகிறது.

குட் நியூஸ்... பெனெல்லி இம்பீரியல் 400 பைக்கிற்கு முன்பதிவு துவங்கியது!

இந்த பைக்கில் 12 லிட்டர் கொள்திறன் கொண்ட எரிபொருள் கலன் பொருத்தப்பட்டுள்ளது. முன்புறத்தில் 19 அங்குல ஸ்போக்ஸ் சக்கரமும், பின்புறத்தில் 18 அங்குல ஸ்போக்ஸ் சக்கரமும் உள்ளன. இந்த பைக் 200 கிலோ எடை கொண்டது.

குட் நியூஸ்... பெனெல்லி இம்பீரியல் 400 பைக்கிற்கு முன்பதிவு துவங்கியது!

இந்த பைக்கில் சிங்கிள் சிலிம்டர் கொண்ட 373.5 சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 19.7 பிஎஸ் பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு அம்சத்திற்கு இணையானதாக இருக்கும் என்று தெரிகிறது.

குட் நியூஸ்... பெனெல்லி இம்பீரியல் 400 பைக்கிற்கு முன்பதிவு துவங்கியது!

புதிய பெனெல்லி இம்பீரியல் 400 பைக்கின் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் டியூவல் ஷாக் அப்சார்பர்களும் உள்ளன. முன்சக்கரத்தில் 300 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் இடம்பெற்றுள்ளன. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் வருகிறது.

குட் நியூஸ்... பெனெல்லி இம்பீரியல் 400 பைக்கிற்கு முன்பதிவு துவங்கியது!

ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 மற்றும் ஜாவா 42 மோட்டார்சைக்கிள்களை எதிர்கொள்ளும் விதமாக அதிக அளவிலான உள்நாட்டு பாகங்களுடன் மிக சவாலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவிலிருந்து முக்கிய உதிரிபாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள ஏஎம்டபிள்யூ ஆலையில் ஒருங்கிணைத்து விற்பனை செய்யப்பட இருக்கிறது.

Most Read Articles
மேலும்... #பெனெல்லி #benelli
English summary
Benelli India has announced the commencement of the official bookings for the Imperiale 400 retro motorcycle today.
Story first published: Friday, September 27, 2019, 13:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X