சொன்னதை செய்யும் பெனெல்லி... இந்தியாவில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் இம்பீரியல் 400...

பெனெல்லி இம்பீரியல் 400 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சொன்னதை செய்யும் பெனெல்லி... இந்தியாவில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் இம்பீரியல் 400...

பெனெல்லி நிறுவனத்தின் இம்பீரியல் 400 (Benelli Imperiale 400) மோட்டார்சைக்கிள் கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற எக்மா (EICMA) மோட்டார் ஷோ நிகழ்ச்சியில் முதல் முறையாக காட்சிக்கு வைக்கப்பட்டது. இதன்பின் உலகின் கவனத்தை, குறிப்பாக இந்திய சமூகத்தின் கவனத்தை பெனெல்லி இம்பீரியல் 400 ஈர்த்தது.

சொன்னதை செய்யும் பெனெல்லி... இந்தியாவில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் இம்பீரியல் 400...

எனவே இந்தியாவிலும் இந்த மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என பெனெல்லி நிறுவனம் உடனடியாக அறிவிப்பு வெளியிட்டது. இந்த சூழலில் பெனெல்லி இம்பீரியல் 400 மோட்டார்சைக்கிள் தற்போது இந்தியாவில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்திய மார்க்கெட்டிற்கான பெனெல்லி இம்பீரியல் 400 மோட்டார்சைக்கிள் புனே அருகே சோதனை செய்யப்படும் ஸ்பை படம் தற்போது வெளியாகியுள்ளது.

சொன்னதை செய்யும் பெனெல்லி... இந்தியாவில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் இம்பீரியல் 400...

இதனை வைத்து பார்க்கையில் சர்வதேச மார்க்கெட்களில் விற்பனை செய்யப்படும் மாடலை போலவேதான் இந்திய மார்க்கெட்டிற்கான மாடலும் உள்ளது. இந்த பைக் அதே கோல்டன் ஹைலைட்ஸ் உடன் கூடிய கருப்பு வண்ணத்தைதான் பெற்றுள்ளது. இதுதவிர பாடி பேனல்கள், இருக்கைகள், டெயில் லைட்ஸ் மற்றும் வீல்ஸ் என அனைத்துமே சர்வதேச மார்க்கெட் மாடலை போலவேதான் உள்ளது.

சொன்னதை செய்யும் பெனெல்லி... இந்தியாவில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் இம்பீரியல் 400...

மிரர்ஸ், டர்ன் இன்டிகேட்டர்கள் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகியவையும் கூட மாற்றப்படவில்லை. சாரி கார்டை (Saree Guard) சேர்த்திருப்பது மட்டுமே தோற்றத்தில் ஒரே ஒரு மாற்றமாக தென்படுகிறது. இதுகுறித்து ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டுள்ளது. பெனெல்லி இம்பீரியல் 400 மோட்டார்சைக்கிள் யூரோ IV விதிகளுக்கு இணையான தரத்துடன்தான் வெளியிடப்பட்டது.

சொன்னதை செய்யும் பெனெல்லி... இந்தியாவில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் இம்பீரியல் 400...

ஆனால் பெனெல்லி நிறுவனம் தற்போது பிஎஸ்-VI மாசு உமிழ்வு விதிகளுக்கு இணையான இன்ஜினை டெவலப் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. தற்போதைய மோட்டார்சைக்கிளில் 373.5 சிசி, சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

சொன்னதை செய்யும் பெனெல்லி... இந்தியாவில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் இம்பீரியல் 400...

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 5,500 ஆர்பிஎம்மில் 19.4 எச்பி பவரையும், 3,500 ஆர்பிஎம்மில் 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்த கூடியது. இதன் முன் பகுதியில் 41 மிமீ டெலஸ்கோபிக் போர்க்குகளும், பின் பகுதியில் ட்வின் ஷாக் அப்சார்பர்களும் வழங்கப்பட்டுள்ளன.

சொன்னதை செய்யும் பெனெல்லி... இந்தியாவில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் இம்பீரியல் 400...

பிரேக்கிங்கை பொறுத்த வரை, முன் பகுதியில் 300 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளன. அத்துடன் ஏபிஎஸ் எனப்படும் ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் ஸ்டாண்டர்டாக வழங்கப்படும்.

சொன்னதை செய்யும் பெனெல்லி... இந்தியாவில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் இம்பீரியல் 400...

பெனெல்லி இம்பீரியல் 400 மோட்டார்சைக்கிள் இந்திய மார்க்கெட்டில் 2020ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்திய அறிமுகம் எப்போது என்பது தொடர்பாக உறுதியான தகவல் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.

Most Read Articles
மேலும்... #பெனெல்லி #benelli
English summary
Benelli Imperiale 400 Spotted In India — Launching 2020. Read in Tamil
Story first published: Saturday, May 18, 2019, 18:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X