இறங்கி அடிக்கப்போகும் பெனெல்லி... விலை குறைவான 2 புதிய மாடல்களை களமிறக்குகிறது!

இந்தியாவில் இரண்டாவது இன்னிங்சை துவங்கி இருக்கும் பெனெல்லி நிறுவனம் வர்த்தக வளர்ச்சிக்கான திட்டங்களில் மிக தீவிரமாக செயல்படுத்த துவங்கி இருக்கிறது. அதன்படி, இரண்டு புதிய மாடல்களை விரைவில் களமிறக்க திட்டமிட்டுள்ளது.

இறங்கி அடிக்கப்போகும் பெனெல்லி... விலை குறைவான 2 புதிய மாடல்களை களமிறக்குகிறது!

ஏற்கனவே இந்தியாவில் விற்பனையில் வைக்கப்பட்டு இருக்கும் டிஆர்கே502 மற்று்ம் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட லியோன்சினோ 500 ஆகிய மாடல்களின் 250 சிசி மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய பெனெல்லி முடிவு செய்துள்ளது.

இறங்கி அடிக்கப்போகும் பெனெல்லி... விலை குறைவான 2 புதிய மாடல்களை களமிறக்குகிறது!

இந்த மாடல்கள் விலை குறைவான பெனெல்லி பைக்குகளாக வருவதால் அதிக ஆவல் எழுந்துள்ளது. முதலில் பெனெல்லி டிஆர்கே 251 பைக்கின் விபரங்களையும், அடுத்து பெனெல்லி லியோன்சினோ 250 மாடலின் விபரங்களையும் பார்க்கலாம்.

இறங்கி அடிக்கப்போகும் பெனெல்லி... விலை குறைவான 2 புதிய மாடல்களை களமிறக்குகிறது!

பெனெல்லி டிஆர்கே251

கடந்த 2017ம் ஆண்டு இத்தாலியில் நடந்த ஐக்மா மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் பெனெல்லி டிஆர்கே 251 பைக் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பைக்கின் ஸ்டைலிங் டிஆர்கே 502 பைக்கை ஒத்திருக்கிறது. ஆனால், சற்று அடக்கமான வடிவத்தை பெற்றுள்ளது.

இறங்கி அடிக்கப்போகும் பெனெல்லி... விலை குறைவான 2 புதிய மாடல்களை களமிறக்குகிறது!

இந்த பைக்கில் இருக்கும் 249 சிசி எஞ்சின் அதிகபட்சமாக 25.8 பிஎச்பி பவரையும், 21.2 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த பைக்கில் ட்ரெல்லிஸ் ஃப்ரேம் பொருத்தப்பட்டு இருக்கிறது. முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளன.

இறங்கி அடிக்கப்போகும் பெனெல்லி... விலை குறைவான 2 புதிய மாடல்களை களமிறக்குகிறது!

அதேபோன்று, முன்சக்கரத்தில் 280 மிமீ சிங்கிள் டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றிருக்கும். இந்த பைக்கில் 17 அங்குல அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பைக் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கிற்கு போட்டியாக நிலைநிறுத்தப்படும்.

இறங்கி அடிக்கப்போகும் பெனெல்லி... விலை குறைவான 2 புதிய மாடல்களை களமிறக்குகிறது!

லியோன்சினோ 250

அண்மையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட பெனெல்லி லியோன்சினோ 500 பைக்கின் விலை குறைவான மாடலாக இந்த 250 சிசி மாடல் வர இருக்கிறது. இந்த பைக் ஸ்க்ராம்ப்ளர் ரகத்திலான மாடலாக வர இருக்கிறது.

இறங்கி அடிக்கப்போகும் பெனெல்லி... விலை குறைவான 2 புதிய மாடல்களை களமிறக்குகிறது!

இந்த பைக்கிலும் 249 சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்யூடு கூல்டு எஞ்சின் பயன்படுத்ததப்பட்டு இருக்கும். இந்த எஞ்சினும் 25.8 எச்பி பவரையும், 21.2 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த மோட்டார்சைக்கிளுக்கு நேரடி போட்டியாளர்கள் இல்லை. இருப்பினும், 250 சிசி ரக மாடல்களுடன் போட்டி போடும்.

இறங்கி அடிக்கப்போகும் பெனெல்லி... விலை குறைவான 2 புதிய மாடல்களை களமிறக்குகிறது!

அறிமுக விபரம்

இந்த ஆண்டு இறுதியில் இந்த இரண்டு புதிய பைக் மாடல்களையும் இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு பெனெல்லி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது நிச்சயம் 250 ரக பிரிமீயம் பைக் மார்க்கெட்டில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Autocarindia

Most Read Articles
மேலும்... #பெனெல்லி #benelli
English summary
Benelli India is planning to launch a few 250cc models in India by the end of the year.
Story first published: Tuesday, August 13, 2019, 11:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X