ஹெல்மெட் வாங்கும் முன்பு இந்த விஷயங்களை எல்லாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்...

உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன மார்க்கெட்களில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. அதன் விளைவாக இரு சக்கர வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்துக்கள் அதிகம் நடைபெறும் நாடுகளில் ஒன்றாகவும் இந்தியா உள்ளது. ஆனால் ஹெல்மெட் பயன்படுத்துவதன் மூலம், டூவீலர் விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும். இரு சக்கர வாகன விபத்துக்களில் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை குறைக்க இதுவே அடிப்படையான வழி. நிரூபிக்கப்பட்ட வழியும் இதுதான்.

ஹெல்மெட் வாங்கும் முன்பு இந்த விஷயங்களை எல்லாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்...

டூவீலர்களை ஓட்டும்போது தேவைப்படும் மிக முக்கியமான பாதுகாப்பு உபகரணம் ஹெல்மெட்தான். இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் கட்டாயமாக்கியுள்ளன. சில மாநிலங்கள், டூவீலர்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவிட்டுள்ளன.

ஹெல்மெட் வாங்கும் முன்பு இந்த விஷயங்களை எல்லாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்...

ஆனால் ஹெல்மெட் அணிந்து கொண்டால் மட்டும் போதுமா? என்றால், நிச்சயம் கிடையாது. ஹெல்மெட் அணிந்து கொண்டு இரு சக்கர வாகனங்களை இயக்கும்போது, பல்வேறு காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. டூவீலரை ஓட்டி கொண்டிருப்பவரின் தலையில் ஹெல்மெட் சரியாக பொருந்தி உள்ளதா? என்பதை உறுதி செய்து கொள்வது மிகவும் முக்கியமானது. அத்துடன் ஹெல்மெட் சரியாக கட்டப்பட்டிருக்க வேண்டும். ஹெல்மெட் தளர்வாக இருந்தால், எளிதாக கழன்று கொண்டு கீழே விழுந்து விடும். ஒரு வேளை நீங்கள் கீழே விழ நேரிட்டால், அப்போது அது உங்களை காக்க தவறிவிடும்.

ஹெல்மெட் வாங்கும் முன்பு இந்த விஷயங்களை எல்லாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்...

வகை, நிறம், கிராபிக்ஸ், டிசைன் மற்றும் பாதுகாப்பு அளவு என்பதை பொறுத்து பல்வேறு ஆப்ஷன்களுடன் ஹெல்மெட்கள் வருகின்றன. என்றாலும், ஃபுல் ஃபேஸ் (Full-face), ஓபன் ஃபேஸ் (Open-face) மற்றும் மாடுலர் (Modular) என ஹெல்மெட்களில் மூன்று முக்கியமான வகைகள்தான் உள்ளன.

ஹெல்மெட் வாங்கும் முன்பு இந்த விஷயங்களை எல்லாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்...

ஃபுல் ஃபேஸ் ஹெல்மெட்களின் பெயரிலேயே அதன் அர்த்தத்தை புரிந்து கொள்ளலாம். ஒட்டுமொத்த தலையையும் இது கவர் செய்யும். மற்ற வகைகளுடன் ஒப்பிட்டால், இருப்பதிலேயே ஃபுல் ஃபேஸ் ஹெல்மெட்கள்தான் மிகவும் பாதுகாப்பானாவை. உலகில் உள்ள மிகச்சிறந்த ஹெல்மெட் நிறுவனங்களும், ஃபுல் ஃபேஸ் ஹெல்மெட்களை விற்பனை செய்கின்றன. அவற்றின் ஸ்டைல் மற்றும் டிசைன் ஆகியவை மட்டுமே சற்றே வேறுபடலாம்.

ஹெல்மெட் வாங்கும் முன்பு இந்த விஷயங்களை எல்லாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்...

அடுத்தது ஓபன் ஃபேஸ் ஹெல்மெட்கள். ஓபன் ஃபேஸ் ஹெல்மெட் என்ற பெயரிலேயே அதன் அர்த்தத்தையும் புரிந்து கொள்ளலாம். இது ரைடரின் தலையை மட்டுமே கவர் செய்யும். ரைடரின் முகத்திற்கு எவ்வித பாதுகாப்பையும் வழங்காது. ஆனால் ரைடர்களுக்கு சிறப்பான கூலிங்கை இது வழங்கும். அத்துடன் விஸுபிலிட்டி சிறப்பாக இருக்கும். அதாவது உங்களால் நன்றாக பார்க்க முடியும். ஆனால் இதர வகை ஹெல்மெட்களுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவான பாதுகாப்பையே வழங்கும்.

ஹெல்மெட் வாங்கும் முன்பு இந்த விஷயங்களை எல்லாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்...

மூன்றாவது மற்றும் கடைசி வகை மாடுலர் ஹெல்மெட்கள். இதில் உள்ள பிளிப் (Flip) ஆப்ஷன் மூலம், இதனை ஃபுல் பேஸ் ஹெல்மெட்டாகவோ அல்லது ஓபன் ஃபேஸ் ஹெல்மெட்டாகவோ மாற்றி கொள்ள முடியும்.

ஹெல்மெட் வாங்கும் முன்பு இந்த விஷயங்களை எல்லாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்...

பொதுவாக பிளாஸ்டிக் மற்றும் ஃபைபர் கிளாஸ் மூலம்தான் ஹெல்மெட்கள் தயாரிக்கப்படுகின்றன. அதன் உள்பகுதி பாலியெஸ்ட்ரின் ஃபோமால் கவர் செய்யப்பட்டிருக்கும். அதே சமயம் மிகவும் விலை உயர்ந்த ஹெல்மெட்கள், கெவ்லர் அல்லது கார்பன் ஃபைபர் லேயரை பெற்றிருக்கும். இதன் மூலம் ரைடருக்கு சிறப்பான பாதுகாப்பு கிடைக்கும்.

ஹெல்மெட் வாங்கும் முன்பு இந்த விஷயங்களை எல்லாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்...

இந்திய மார்க்கெட்டில் பல்வேறு நிறுவனங்களின் ஹெல்மெட்கள் கிடைக்கின்றன. இந்தியாவை பொறுத்தவரை, ஸ்டீல்பேர்டு, வேகா, எல்எஸ்2, எச்ஜேசி, எஸ்எம்கே, பெல் மற்றும் ஏஜிவி உள்ளிட்ட பிராண்டுகளிடம் இருந்து சிறப்பான ஹெல்மெட்கள் வெளிவருகின்றன. அனைத்து நிறுவனங்களும் மூன்று முக்கியமான வகை ஹெல்மெட்களையும் வழங்குகின்றன. அத்துடன் ஹெல்மெட்களில் தனித்துவமான டிசைன், கிராபிக்ஸ் மற்றும் வண்ணங்கள் ஆகியவையும் வழங்கப்படுகின்றன. இந்த ஹெல்மெட்களின் விலை ஆயிரம் ரூபாயில் இருந்து தொடங்குகிறது. 50 ஆயிரம் ரூபாயில் கூட ஹெல்மெட்கள் கிடைக்கின்றன. இதை விட அதிக விலையிலும் கூட ஹெல்மெட்கள் உள்ளன.

ஹெல்மெட் வாங்கும் முன்பு இந்த விஷயங்களை எல்லாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்...

ஆனால் ஹெல்மெட் மட்டும் போதுமா? என்றால், நிச்சயம் கிடையாது. டூவீலர் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்திருப்பதும் மிகவும் முக்கியமானது. விபத்து போன்ற அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால், ரைடர் மற்றும் டூவீலரை இது பாதுகாக்கும். இந்தியாவில் பல்வேறு நிறுவனங்கள் டூவீலர் இன்சூரன்ஸ் பாலிசிகளை வழங்குகின்றன.

ஹெல்மெட் வாங்கும் முன்பு இந்த விஷயங்களை எல்லாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்...

முன்னதாக ஹெல்மெட்கள் விற்பனைக்கு வருவதற்கு முன்பாக, கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகளில் தேர்ச்சி பெற வேண்டும். பிஐஎஸ் எனப்படும் இந்திய தரநிலைகள் பணியகம் (BIS - Bureau of Indian Standards) மூலமாக, இந்தியா தனக்கென ஹெல்மெட்களுக்கான நெறிமுறைகளை வகுத்துள்ளது. இந்த நெறிமுறைகளுக்கு இணங்கும் ஹெல்மெட்கள், 'ஐஎஸ்ஐ' (ISI) முத்திரையை பெறும். ஐஎஸ்ஐ முத்திரைகளை ஹெல்மெட்களின் பின் பகுதியில் பார்க்க முடியும். இதுதவிர டாட் (DOT) மற்றும் இசிஇ (ECE) போன்ற சர்வதேச தர சான்றிதழ் பெற்ற பிராண்டுகளின் ஹெல்மெட்களும் கூட இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. எப்போதும் தரமான ஹெல்மெட்டை அணிந்து கொண்டு பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள்!

Most Read Articles
English summary
English Summary: Branded Helmets in India — Top Things To Know Before Buying A Helmet. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X