ஹீரோ ஸ்பிளென்டர் பைக்குகே இந்த நிலைமையா...செப்டம்பரில் விற்பனையான டாப்-10 பைக்குகள் இதோ...

இருசக்கர வாகனங்களின் மந்தமான விற்பனை நிலை கடந்த செப்டம்பர் மாதத்திலும் தொடர்ந்துள்ளது. இதை தான் வெளியாகியுள்ள அதிகளவில் விற்பனையான டாப் 10 பைக்குகளின் லிஸ்ட்டும் தெள்ள தெளிவாக காட்டுகிறது.

ஹீரோ ஸ்பிளென்டர் பைக்குகே இந்த நிலைமையா...செப்டம்பரில் விற்பனையான டாப்-10 பைக்குகள் இதோ...

இந்த டாப்-10 லிஸ்ட்டில் வழக்கம் போல ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பல இடங்களை தனக்குரியதாக்கியுள்ளது. இந்நிறுவனத்தின் பிரபல மாடல் பைக் ஹீரோ ஸ்பிளென்டர், 2018 செப்டம்பரை விட 40 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்திருந்தாலும் இந்த செப்டம்பர் மாத விற்பனையில் 2,44,667 யூனிட் விற்பனையுடன் முதலிடத்தை பிடித்துள்ளது.

ஹீரோ ஸ்பிளென்டர் பைக்குகே இந்த நிலைமையா...செப்டம்பரில் விற்பனையான டாப்-10 பைக்குகள் இதோ...

இதற்கு அடுத்த இடத்தில் இதே நிறுவனத்தின் மற்றொரு மாடலான ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் 1.95 லட்சம் யூனிட் விற்பனையுடன் உள்ளது. 2,01,240 யூனிட்கள் கடந்த ஆண்டு செப்டம்பரில் விற்பனையான இந்த பைக்கின் கடந்த மாத யூனிட் விற்பனை சிறிதளவில் தான் குறைந்துள்ளது.

ஹீரோ ஸ்பிளென்டர் பைக்குகே இந்த நிலைமையா...செப்டம்பரில் விற்பனையான டாப்-10 பைக்குகள் இதோ...

இத்தகைய மந்த நிலையிலும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தை விட ஹோண்டா சிபி ஷைன் 10 சதவீத விற்பனை வளர்ச்சியுடன் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. இந்த லிஸ்ட்டில் கடந்த ஆண்டு செப்டம்பரை விட இந்த செப்டம்ரில் கூடுதலாக விற்பனையான ஒரே பைக்காக இருக்கும் ஹோண்டா சிபி ஷைன் 88,893 யூனிட் விற்பனையை கடந்த மாதத்தில் பதிவு செய்துள்ளது. இப்பைக்கின் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்ட மாடல் விரைவில் வெளியாகவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்கள் கீழேயுள்ள லிங்கில் உள்ளன...

ஹீரோ ஸ்பிளென்டர் பைக்குகே இந்த நிலைமையா...செப்டம்பரில் விற்பனையான டாப்-10 பைக்குகள் இதோ...

பஜாஜ் நிறுவனத்தில் இருந்து கடந்த மாதத்தில் சிறந்த முறையில் விற்பனையான பைக்காக விளங்கும் பஜாஜ் பல்சர் 68,068 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. 89,374 யூனிட்கள் விற்பனையான 2018 செப்டம்பரை விட இது சுமார் 23.8 சதவீதம் குறைவு என்றாலும் இந்த பைக் தான் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. பல்சரின் புதிய 125சிசி வேரியண்ட்டை பஜாஜ் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹீரோ ஸ்பிளென்டர் பைக்குகே இந்த நிலைமையா...செப்டம்பரில் விற்பனையான டாப்-10 பைக்குகள் இதோ...

ஹீரோ கிளாமர் இந்த லிஸ்ட்டில் 5வது இடத்தில் உள்ளது. 125சிசி-ல் விற்பனையாகி வரும் இப்பைக் 62,016 யூனிட்கள் விற்பனையாகி கடந்த ஆண்டை விட 25 சதவீத விற்பனை வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

ஹீரோ ஸ்பிளென்டர் பைக்குகே இந்த நிலைமையா...செப்டம்பரில் விற்பனையான டாப்-10 பைக்குகள் இதோ...

6வது இடத்தில் பஜாஜ் சிடி100 பைக் 51,778 யூனிட்கள் விற்பனையாகி 42 சதவீத விற்பனை வீழ்ச்சியுடனும், 7வது இடத்தில் 43,978 யூனிட்கள் விற்பனையில் 34 சதவீத விற்பனை வீழ்ச்சியுடன் பஜாஜ் பிளாட்டினா பைக்கும் உள்ளன. இந்த லிஸ்ட்டை பொறுத்த வரை 2018 செப்டம்பரை விட அதிக விற்பனை வீழ்ச்சியை(57.2%) சந்தித்த பைக் மாடலாக ஹீரோ பேஷன் 40,672 யூனிட் விற்பனையுடன் எட்டாவது இடத்தில் உள்ளது.

ஹீரோ ஸ்பிளென்டர் பைக்குகே இந்த நிலைமையா...செப்டம்பரில் விற்பனையான டாப்-10 பைக்குகள் இதோ...

இதற்கு அடுத்த கடைசி இரு இடங்களில் 29,889 யூனிட் விற்பனையுடன் டிவிஎஸ் அப்பாச்சி (அனைத்து வேரியண்ட்களையும் சேர்த்து), 29,376 யூனிட் விற்பனையுடன் ராயல் எண்ட்பீல்டு கிளாசிக்350 மாடல் பைக்குகள் உள்ளன. இந்த டாப்-10 லிஸ்ட்டை பொறுத்த வரை மொத்தமாக கடந்த செப்டம்பர் மாதத்தில் 8,54,430 யூனிட் பைக்குகள் விற்பனையாகியுள்ளன. இது 10,90,973 விற்பனையான 2018 செப்டம்பரை காட்டிலும் 21.68 சதவீதம் குறைவாகும்.

ஹீரோ ஸ்பிளென்டர் பைக்குகே இந்த நிலைமையா...செப்டம்பரில் விற்பனையான டாப்-10 பைக்குகள் இதோ...

ஆனால் இந்த விற்பனை வீழ்ச்சி எல்லாம் கடந்த மாதம் வரை மட்டுமே. ஏனெனில் இந்த மாதத்தில் வரவிருகின்ற தீபாவளி பண்டிக்கையை முன்னிட்டு பல நிறுவனங்கள் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவித்துள்ளன. இதனால் இந்த மாத விற்பனையாகும் பைக்குகளின் யூனிட் எண்ணிக்கை கண்டிப்பாக உயரும். மேலும் இந்த சலுகைகள், தொடர்ந்து நீடித்துவரும் விற்பனை மந்த நிலையையும் போக்கும் என்றே கருதப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #sales
English summary
Top Selling Bikes India September Table Code. Hero Splendor leads
Story first published: Monday, October 21, 2019, 15:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X