இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு.. உச்சகட்ட மகிழ்ச்சியில் மக்கள்

இந்தியாவிற்கே முன் உதாரணமான அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதனால் மக்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.

இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு.. உச்சகட்ட மகிழ்ச்சியில் மக்கள்

சர்வதேச அளவில் சாலை விபத்துக்கள் காரணமாக அதிக உயிர்களை பறி கொடுக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயமே. இங்கு சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே வருவது அதிர்ச்சியையும், கவலையையும் ஒரு சேர ஏற்படுத்துகிறது.

இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு.. உச்சகட்ட மகிழ்ச்சியில் மக்கள்

இதில், ஆறுதல் அடைந்து கொள்ள வேண்டிய செய்தி என்னவென்றால், இந்த விஷயத்தில் தமிழகத்தின் நிலை மட்டும் சமீப காலமாக முன்னேற்றம் அடைந்து வருவதுதான். தமிழகத்தில் கடந்த 2017ம் ஆண்டில், சாலை விபத்துக்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,157. ஆனால் இந்த எண்ணிக்கையானது கடந்த 2018ம் ஆண்டில் 12,216ஆக குறைந்துள்ளது.

இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு.. உச்சகட்ட மகிழ்ச்சியில் மக்கள்

அதாவது தமிழகத்தில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 24.4 சதவீதம் என்கிற அளவிற்கு குறைந்துள்ளது. தமிழக அரசின் கீழ் செயல்படும் போக்குவரத்து, காவல், நெடுஞ்சாலை மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளின் கூட்டு முயற்சி காரணமாகவே இங்கு சாலை விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு.. உச்சகட்ட மகிழ்ச்சியில் மக்கள்

இருந்தபோதும் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை இன்னும் குறைக்க தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக தமிழக அரசின் போக்குவரத்து துறை இந்த விஷயத்தில் முனைப்புடன் பணியாற்றி கொண்டுள்ளது. இந்த சூழலில் தமிழக போக்குவரத்து துறை கமிஷனர் தற்போது அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு.. உச்சகட்ட மகிழ்ச்சியில் மக்கள்

இதன்படி புதிய இரு சக்கர வாகனங்களை வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஹெல்மெட் வழங்கப்பட வேண்டும். இரு சக்கர வாகன உற்பத்தியாளர் அல்லது டீலர்கள் மூலம் புதிய ஹெல்மெட் வாடிக்கையாளர்களின் கைகளுக்கு சென்று சேர வேண்டும். இதனை அந்தந்த பகுதி ஆர்டிஓக்கள் (RTO) உறுதி செய்ய வேண்டும்.

இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு.. உச்சகட்ட மகிழ்ச்சியில் மக்கள்

அத்துடன் வாடிக்கையாளர்களுக்கு ஹெல்மெட் சப்ளை செய்யப்படுவது தொடர்பான அறிக்கையை போக்குவரத்து துறை கமிஷனரின் அலுவலகத்தில் ஆர்டிஓக்கள் ஒவ்வொரு மாதமும் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். போக்குவரத்து துறை கமிஷனரின் இந்த அதிரடி உத்தரவு இரு சக்கர வாகனங்களை வாங்குபவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு.. உச்சகட்ட மகிழ்ச்சியில் மக்கள்

பொதுவாக சாலை விபத்துக்களால் அதிகம் பாதிக்கப்படுவது இரு சக்கர வாகன ஓட்டிகள்தான் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. எனவேதான் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாகவே புதிய டூவீலர்களுக்கு ஹெல்மெட் என்ற அறிவிப்பும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு.. உச்சகட்ட மகிழ்ச்சியில் மக்கள்

முன்னதாக புதிய இரு சக்கர வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ஹெல்மெட் வழங்கப்பட வேண்டும் என மத்திய மோட்டார் வாகன சட்டத்தின் விதி 138 (4) (f) 1989 கூறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஹெல்மெட்டை இரு சக்கர வாகனத்தின் உற்பத்தியாளர்கள் வழங்க வேண்டும். அத்துடன் பிஐஎஸ் (BIS - Bureau of Indian Standards) பரிந்துரைகளுக்கு ஏற்ப அந்த ஹெல்மெட் இருக்க வேண்டும்.

இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு.. உச்சகட்ட மகிழ்ச்சியில் மக்கள்

எனவேதான் புதிய இரு சக்கர வாகனங்களை வாங்கும்போது வாடிக்கையாளர்களுக்கு ஹெல்மெட் சப்ளை செய்யப்பட வேண்டும் என்பதை தமிழக போக்குவரத்து துறை கட்டாயமாக்கியுள்ளது. இதன் காரணமாக சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்கள் மற்றும் படுகாயம் அடைபவர்களின் எண்ணிக்கை குறையும் என்பது உறுதி.

இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு.. உச்சகட்ட மகிழ்ச்சியில் மக்கள்

இதன் காரணமாக பொது மக்கள் மத்தியிலும் இந்த அறிவிப்பு பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. பொது மக்கள் மட்டுமல்லாது, டூவீலர் ஹெல்மெட் உற்பத்தியாளர்கள் சங்கமும் (Two-Wheeler Helmet Manufacturers Association) இந்த அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவித்துள்ளது. ஹெல்மெட் உயிர்களை காக்கும் என்பதால், தமிழக அரசின் இந்த முயற்சி இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும் எனவும் டூவீலர் ஹெல்மெட் உற்பத்தியாளர்கள் சங்கம் பாராட்டியுள்ளது.

இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு.. உச்சகட்ட மகிழ்ச்சியில் மக்கள்

தமிழக அரசின் அறிவிப்பு காரணமாக இனி நல்ல தரமான மற்றும் பிஐஎஸ் தரச்சான்று பெற்ற ஹெல்மெட்களை இரு சக்கர வாகன ஓட்டிகள் பயன்படுத்துவார்கள். இதன் மூலம் போலி ஐஎஸ்ஐ (ISI) ஹெல்மெட்களை, இரு சக்கர வாகன ஓட்டிகள் வாங்குவதும் குறையும். போலி ஐஎஸ்ஐ முத்திரையுடன் கூடிய தரம் இல்லாத ஹெல்மெட்கள் சாலையோர கடைகளில் இன்றளவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு.. உச்சகட்ட மகிழ்ச்சியில் மக்கள்

லோக்கல் மார்க்கெட்களிலும் அவை கிடைக்கின்றன. அவற்றின் விலை குறைவு என்பதால், இரு சக்கர வாகன ஓட்டிகளை எளிதில் கவர்ந்து விடுகின்றன. ஆனால் விபத்து நடைபெறும் சமயங்களில் அவை உதவி செய்யாது. இத்தகைய தரமற்ற ஹெல்மெட்களை அணிவதும், அணியாமல் இருப்பதும் கிட்டத்தட்ட ஒன்றுதான். இதுபோன்ற பிரச்னைகளுக்கும் தமிழக போக்குவரத்து துறையின் அறிவிப்பு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு.. உச்சகட்ட மகிழ்ச்சியில் மக்கள்

முன்னதாக புதிய இரு சக்கர வாகனங்களுடன் வாடிக்கையாளர்களுக்கு ஹெல்மெட் சப்ளை செய்யப்பட வேண்டும் என்ற சட்டம் இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் கடுமையாக பின்பற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதனை முறையாக அமலுக்கு கொண்டு வர தமிழக அரசு முனைந்திருப்பது பாராட்டப்பட வேண்டிய ஒரு விஷயமே.

Source: News 18

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
English summary
BIS Helmets Mandatory For New Two Wheelers In Tamil Nadu
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X