பிஎம்டபிள்யூ ஜி 310ஆர், ஜி 310ஜிஎஸ் பைக்குகளுக்கு வருட இறுதி நாட்களுக்கான சலுகைகள் அறிவிப்பு...

ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமான பிஎம்டபிள்யூ மோட்டோராட் தனது பிரபல மாடல் பைக்குகளான ஜி 310ஆர் மற்றும் ஜி 310ஜிஎஸ் பைக்குகளுக்கு 2019 வருடத்தின் இறுதி நாட்களுக்கான சலுகைகளை அறிவித்துள்ளது. இதனை விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

பிஎம்டபிள்யூ ஜி 310ஆர், ஜி 310ஜிஎஸ் பைக்குகளுக்கு வருட இறுதி நாட்களுக்கான சலுகைகள் அறிவிப்பு...

மேற்கூறப்பட்ட இரு பிஎம்டபிள்யூ பைக்குகளும் தற்சமயம் இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.2.99 லட்சத்தில் இருந்து ரூ.3.49 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவ்விரு பைக்குகளும் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகையினால் ரூ.1 லட்சம் வரை தள்ளிபடியை பெறுகின்றன.

பிஎம்டபிள்யூ ஜி 310ஆர், ஜி 310ஜிஎஸ் பைக்குகளுக்கு வருட இறுதி நாட்களுக்கான சலுகைகள் அறிவிப்பு...

இந்த சலுகையில், ஒரு வருடத்திற்கான இன்சூரன்ஸ், இலவச சாலை வரி, இலவச பதிவு மற்றும் பொருளாதார லோன்களுக்கு குறைந்த மாத தவணை உள்ளிட்டவை அடங்கும். இவை மட்டுமின்றி, பிஎம்டபிள்யூ நிறுவனம் இவ்விரு பைக் மாடல்களுக்கும் மூன்று வருட, எல்லையற்ற கிலோமீட்டர் உத்தரவாதத்தையும் வழங்கியுள்ளது.

பிஎம்டபிள்யூ ஜி 310ஆர், ஜி 310ஜிஎஸ் பைக்குகளுக்கு வருட இறுதி நாட்களுக்கான சலுகைகள் அறிவிப்பு...

பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் மற்றும் ஜி 310ஜிஎஸ் பைக்குகளை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இவ்விரு பைக்குகளிலும் ஒரே 313சிசி, லிக்யூடு, சிங்கிள்-சிலிண்டர், நான்கு-ஸ்ட்ரோக் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 34 பிஎச்பி பவரையும் 28.4 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.

பிஎம்டபிள்யூ ஜி 310ஆர், ஜி 310ஜிஎஸ் பைக்குகளுக்கு வருட இறுதி நாட்களுக்கான சலுகைகள் அறிவிப்பு...

இரு மோட்டார்சைக்கிள்களிலும் ட்ரான்ஸ்மிஷனாக 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. சஸ்பென்ஷன் மற்றும் ப்ரேக்கிங் அமைப்பாக முன்புறத்தில் 41 மிமீ அப்சைட்-டவுன் ஃபோர்க்ஸ் மற்றும் 300மிமீ டிஸ்க்கும், பின்புறத்தில் மோனோ-ஷாக் மற்றும் 240மிமீ டிஸ்க்கும் கொடுக்கப்பட்டுள்ளன. நிலையாக ட்யூல்-சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் அமைப்பும் வழங்கப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ ஜி 310ஆர், ஜி 310ஜிஎஸ் பைக்குகளுக்கு வருட இறுதி நாட்களுக்கான சலுகைகள் அறிவிப்பு...

பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் பைக்கிற்கு போட்டி மாடல்களாக சந்தையில் கேடிஎம் ட்யூக்390, பஜாஜ் டாமினார் 400, யமஹா ஒய்இசட்எஃப் ஆர்3, கவாஸாகி நிஞ்சா 300 மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி 310ஆர் பைக்குகளும், ஜி 310ஜிஎஸ் பைக்கிற்கு போட்டியாக ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன், கவாஸாகி வெர்ஸஸ்-எக்ஸ் 300 பைக்குகள் உள்ளன. விரைவில் அறிமுகமாகவுள்ள கேடிஎம் 390 அட்வென்ஜர் பைக்கும் பிஎம்டபிள்யூ ஜி 310ஜிஎஸ் பைக்குடன் போட்டியிடவுள்ளது.

பிஎம்டபிள்யூ ஜி 310ஆர், ஜி 310ஜிஎஸ் பைக்குகளுக்கு வருட இறுதி நாட்களுக்கான சலுகைகள் அறிவிப்பு...

ஜி 310ஆர் பைக்கானது, டிவிஎஸ் மோட்டார் கம்பெனியுடன் இணைந்து பிஎம்டபிள்யூ நிறுவனம் தயாரித்த முதல், மாடர்ன், சப்-500சிசி பைக்காகும். இதனால் டிவிஎஸ் அப்பாச்சி 310ஆர்ஆர் பைக்கில் பொருத்தப்பட்டுள்ள என்ஜின் அமைப்பும் தான் ஜி 310ஆர் பைக்கிலும் கொடுக்கப்பட்டுள்ளது. ஓசூரில் உள்ள டிவிஎஸ் நிறுவனத்தின் தொழிற்சாலையில் தான் இந்த பைக்குகளின் தயாரிப்பு மற்றும் அசெம்பிள் வேலைகள் நடைபெற்றாலும், இந்த பைக்குகளுக்கான டிசைன் அமைப்பை பிஎம்டபிள்யூ நிறுவனம் தான் உருவாக்கியது.

பிஎம்டபிள்யூ ஜி 310ஆர், ஜி 310ஜிஎஸ் பைக்குகளுக்கு வருட இறுதி நாட்களுக்கான சலுகைகள் அறிவிப்பு...

இந்த டிசம்பர் மாதத்திற்கு இந்நிறுவனத்தில் இருந்து வெளிவந்துள்ள இந்த சலுகைகள் அறிவிப்பு நாம் எதிர்பார்த்தது தான். இந்நிறுவனத்தின் இந்த இரு பைக்குகளின் ஆரம்ப நிலை வேரியண்ட்டை வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த 1 லட்ச ரூபாய் மதிப்பிலான சலுகை நல்ல செய்தியே ஆகும்.

Most Read Articles
English summary
BMW G 310 R, G 310 GS: Year-End Benefits Of Up To Rs 1 Lakh
Story first published: Monday, December 23, 2019, 20:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X