அடிபட்ட புலியாக சீறும் யமஹா.... அவமானத்தை துடைக்க இந்தியாவில் செய்யப்போகும் பிரம்மாண்டம் இதுதான்...

அடிபட்ட புலியாக சீறி வரும் யமஹா நிறுவனம், இந்திய மார்க்கெட்டில் பிரம்மாண்டம் நிகழ்த்த சுறுசுறுப்பாக தயாராகி வருகிறது.

அடிபட்ட புலியாக சீறும் யமஹா.... அவமானத்தை துடைக்க இந்தியாவில் செய்யப்போகும் பிரம்மாண்டம் இதுதான்...

ஜப்பானை சேர்ந்த யமஹா நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். சாலைகளில் சீறிப்பாய்ந்து செல்லும் யமஹா மோட்டார் சைக்கிள்களின் தரமே இதற்கு முக்கியமான காரணம். இந்தியாவிலும் பெருவாரியான இளைஞர்களின் இதயங்களை யமஹா நிறுவனம் கொள்ளை கொண்டுள்ளது.

அடிபட்ட புலியாக சீறும் யமஹா.... அவமானத்தை துடைக்க இந்தியாவில் செய்யப்போகும் பிரம்மாண்டம் இதுதான்...

ஆனால் தற்போது இந்தியாவில் யமஹா நிறுவனத்திற்கு சிறிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன், எம்டி15 என்ற பைக்கை யமஹா நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இது ஏற்கனவே சர்வதேச மார்க்கெட்களில் விற்பனை செய்யப்பட்டு வரும் மாடல் ஆகும். இருந்தபோதும் மிக நீண்ட தாமதத்திற்கு பின்தான் யமஹா எம்டி15 பைக் இந்திய மார்க்கெட்டிற்கு வந்தது.

அடிபட்ட புலியாக சீறும் யமஹா.... அவமானத்தை துடைக்க இந்தியாவில் செய்யப்போகும் பிரம்மாண்டம் இதுதான்...

எம்டி15 பைக்கை யமஹா நிறுவனம் குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என அதன் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் நடந்ததோ வேறு. இந்திய மார்க்கெட்டில் யமஹா எம்டி15 பைக்கிற்கு 1.36 லட்ச ரூபாய் எக்ஸ் ஷோரூம் விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் எம்டி15 பைக்கை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

அடிபட்ட புலியாக சீறும் யமஹா.... அவமானத்தை துடைக்க இந்தியாவில் செய்யப்போகும் பிரம்மாண்டம் இதுதான்...

போதாக்குறைக்கு சர்வதேச மார்க்கெட்களில் விற்பனை செய்யப்படும் எம்டி15 மாடலில் இருக்கும் பல்வேறு வசதிகளை, இந்திய மார்க்கெட்டிற்கான மாடலில் யமஹா நிறுவனம் வழங்கவில்லை. எனவே 1.36 லட்ச ரூபாய் என்பது மிக அதிகமான விலை என சமூக வலை தளங்களில், வாடிக்கையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அடிபட்ட புலியாக சீறும் யமஹா.... அவமானத்தை துடைக்க இந்தியாவில் செய்யப்போகும் பிரம்மாண்டம் இதுதான்...

இது 'MT15' அல்ல, 'Empty 15' எனவும் அவர்கள் கிண்டல் அடித்து வருகின்றனர். பைக் ஆர்வலர்கள் மத்தியில் #Empty15 என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகும் அளவிற்கு நிலைமை விபரீதமாகியுள்ளது. இந்திய மார்க்கெட்டில் எம்டி15 பைக்கை விட குறைவான விலையில், அதிக வசதிகளை உள்ளடக்கிய வேறு நல்ல பைக்குகள் கிடைப்பதாகவும் சமூக வலை தளங்களில் கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன.

அடிபட்ட புலியாக சீறும் யமஹா.... அவமானத்தை துடைக்க இந்தியாவில் செய்யப்போகும் பிரம்மாண்டம் இதுதான்...

இப்படிப்பட்ட சூழலில், விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், எம்டி-03 (Yamaha MT-03) பைக்கை இந்திய மார்க்கெட்டில் களமிறக்க சுறுசுறுப்பாக தயாராகி வருகிறது யமஹா நிறுவனம். எம்டி-03 ஸ்ட்ரீட் ஃபைட்டர் (Street Fighter) பைக்கை, நடப்பாண்டின் மத்தியில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய யமஹா நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடிபட்ட புலியாக சீறும் யமஹா.... அவமானத்தை துடைக்க இந்தியாவில் செய்யப்போகும் பிரம்மாண்டம் இதுதான்...

முன்னதாக 2018ம் ஆண்டின் பண்டிகை காலத்தில் யமஹா எம்டி-03 பைக் இந்திய மார்க்கெட்டில் களமிறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. எனினும் நடப்பாண்டின் மத்தியில் இந்திய மார்க்கெட்டிற்கு எம்டி-03 பைக் வந்து விடும் என்ற தகவல் சில யமஹா நிறுவன டீலர்கள் மூலமாக தற்போது தெரியவந்துள்ளது.

அடிபட்ட புலியாக சீறும் யமஹா.... அவமானத்தை துடைக்க இந்தியாவில் செய்யப்போகும் பிரம்மாண்டம் இதுதான்...

இது யமஹா ஆர்3 பைக்கின் நேக்கட் வெர்ஷன் (Naked Version) ஆகும். இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் ஆனவுடன், பிஎம்டபிள்யூ ஜி310ஆர் (BMW G310R) மற்றும் பெனெல்லி டிஎன்டி 300 (Benelli TNT 300) உள்ளிட்ட பைக் மாடல்களுடன் யமஹா எம்டி-03 போட்டியிடும். 2019 யமஹா எம்டி-03 பைக்கானது, தனது பெரும்பாலான பாகங்களை யமஹா ஆர்3 பைக்குடன் பகிர்ந்து கொள்கிறது.

அடிபட்ட புலியாக சீறும் யமஹா.... அவமானத்தை துடைக்க இந்தியாவில் செய்யப்போகும் பிரம்மாண்டம் இதுதான்...

புதிய மாடல் ஆர்3 பைக்கை போலவே, எம்டி-03 பைக்கிலும் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் ஸ்டாண்டர்டாக வழங்கப்படவுள்ளது. யமஹா எம்டி-03 பைக்கில், 321 சிசி, லிக்யூட் கூல்டு மற்றும் ப்யூயல் இன்ஜெக்டட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 10,750 ஆர்பிஎம்மில் 42 ஹெச்பி பவரையும், 9,000 ஆர்பிஎம்மில் 29.6 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தி சாலைகளில் சீறிப்பாய்ந்து செல்லும் வல்லமை வாய்ந்தது.

அடிபட்ட புலியாக சீறும் யமஹா.... அவமானத்தை துடைக்க இந்தியாவில் செய்யப்போகும் பிரம்மாண்டம் இதுதான்...

இதில், 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதன் எடை வெறும் 168 கிலோ மட்டுமே. இதன்மூலம் இது மிகச்சிறந்த பெர்ஃபார்மென்ஸ் பைக்காக திகழ்கிறது. யமஹா எம்டி-03 பைக்கின் 2019 மாடல் 3.25 லட்ச ரூபாய் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக யமஹா நிறுவனம் தற்போது வரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

அடிபட்ட புலியாக சீறும் யமஹா.... அவமானத்தை துடைக்க இந்தியாவில் செய்யப்போகும் பிரம்மாண்டம் இதுதான்...

இந்திய மார்க்கெட்டில் தற்போது இந்த செக்மெண்ட்டில் சிங்கிள் சிலிண்டர் மோட்டார் சைக்கிள்கள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ஆனால் யமஹா எம்டி-03 பைக் 2 சிலிண்டர்களை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அடிபட்ட புலியாக சீறும் யமஹா.... அவமானத்தை துடைக்க இந்தியாவில் செய்யப்போகும் பிரம்மாண்டம் இதுதான்...

யமஹா எம்டி-03 பைக்கின் இதர டெக்னிக்கல் அம்சங்கள்:

இருக்கை உயரம்- 780 மிமீ

க்ரவுண்ட் க்ளியரன்ஸ்- 160 மிமீ

எரிபொருள் டேங்க் கொள்ளளவு- 14 லிட்டர்கள்

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
BMW G310R, Benelli TNT 300 Rival Yamaha MT-03 India Launch Will Be Soon: Expected Price. Read in Tamil
Story first published: Wednesday, March 20, 2019, 20:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X