இதுவரை இல்லாத அளவு புக்கிங்குகளை குவித்த பிஎம்டபிள்யூ ஜி310 பைக்குகள்!

பண்டிகை காலத்தின்போது இதுவரை இல்லாத அளவுக்கு புக்கிங்குகளை பிஎம்டபிள்யூ ஜி310 பைக்குகள் குவித்து அசர வைத்துள்ளன. கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

இதுவரை இல்லாத அளவு புக்கிங்குகளை குவித்த பிஎம்டபிள்யூ ஜி310 பைக்குகள்!

பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்தின் விலை குறைவான பைக் மாடல்களாக ஜி310ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் ஆகிய இரண்டு பைக்குகளும் விற்பனையில் இருக்கின்றன. பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் பைக் நேக்கட் ரக மாடலாகவும், ஜி310 ஜிஎஸ் அட்வென்ச்சர் வகை மாடலாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதுவரை இல்லாத அளவு புக்கிங்குகளை குவித்த பிஎம்டபிள்யூ ஜி310 பைக்குகள்!

இந்த நிலையில், இந்தியாவில் பிஎம்டபிள்யூ பைக் கனவுடன் இருப்பவர்களுக்கு இந்த இரண்டு மாடல்களும் சிறந்த சாய்ஸாக இருந்து வருகின்றன. இந்த நிலையில், நவராத்திரி, தீபாவளி பண்டிகை காலக்கட்டத்தில் இந்த இரண்டு பைக்குகளுக்கும் இதுவரை இல்லாத அளவு புக்கிங்குகள் கிடைத்துள்ளன.

இதுவரை இல்லாத அளவு புக்கிங்குகளை குவித்த பிஎம்டபிள்யூ ஜி310 பைக்குகள்!

அதாவது, இரண்டு பைக்குகளும் இணைந்து 600க்கும் மேற்பட்ட புக்கிங்குகளை இந்த பண்டிகை காலத்தில் பெற்றுள்ளன. இந்த ஆரம்ப ரக பிரிமீயம் பைக்குகளுக்கு கிடைத்த வரவேற்பு பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்திற்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

இதுவரை இல்லாத அளவு புக்கிங்குகளை குவித்த பிஎம்டபிள்யூ ஜி310 பைக்குகள்!

இந்த பைக்குகளில் 313 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் உள்ளது. அதிகபட்சமாக 34 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஜி310 ஆர் பைக் மணிக்கு 145 கிமீ வேகம் வரையிலும், ஜி310 ஜிஎஸ் பைக் மணிக்கு 143 கிமீ வேகம் வரையிலும் செல்லும் திறனை பெற்றிருக்கின்றன.

இதுவரை இல்லாத அளவு புக்கிங்குகளை குவித்த பிஎம்டபிள்யூ ஜி310 பைக்குகள்!

நாடு முழுவதும் உள்ள 16 நகரங்களில் 23 டீலர்களுடன் பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் இந்தியாவில் வர்த்தகத்தை செயல்படுத்தி வருகிறது. பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் பைக் ரூ.2.99 லட்சத்திலும், ஜி310 ஜிஎஸ் பைக் ரூ.3.49 லட்சத்திலும் அறிமுகம் செய்யப்பட்டன.

இதுவரை இல்லாத அளவு புக்கிங்குகளை குவித்த பிஎம்டபிள்யூ ஜி310 பைக்குகள்!

பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் ஆகிய இரண்டு பைக்குகளையும் டிவிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து பிஎம்டபிள்யூ தயாரித்தது. ஜெர்மனியின் மூனிச் நகரிலுள்ள பிஎம்டபிள்யூ மோட்டோராட் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் உருவாக்கப்பட்டு, ஓசூரில் உள்ள டிவிஎஸ் நிறுவனத்தின் ஆலையில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன.

Most Read Articles
English summary
BMW Motorrad has garnered more than 600 bookings for G310 twins in India duing festive season.
Story first published: Thursday, November 7, 2019, 16:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X