புதிய ஸ்டைலுடன் 2019 பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் பைக் விரைவில் இந்தியாவில் அறிமுகம்!

பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் தனது 2019 பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் பைக்கை இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.

2019 பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர்

பிஎம்டபிள்யூவின் வாகனங்கள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானவை, அதேபோல இந்தியாவிலும் இதன் தயாரிப்புகளுக்கு அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். ஜெர்மனியை தலைமையமாகக் கொண்டு இயங்கி வரும் இந்நிறுவனம் பிஎம்டபிள்யூ மோட்டோராட் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.

சொகுசு கார்களைத் தயாரித்துவரும் இந்த நிறுவனம் 1923ம் ஆண்டில் இருந்து இருசக்கர வகானத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களுக்கு சந்தையில் அதிகளவில் வரவேற்புகள் அளிக்கப்பட்டு வருகின்றது.

2019 பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர்

ஆகையால், இந்த நிறுவனம் இந்தியர்களைக் கவரும் விதமாக நாட்டின் முக்கிய நகரங்களான சென்னை, புதுடெல்லி, மும்பை, பெங்களூரு, புனே, கொல்கத்தா, அஹமதாபாத், ஃபரிதாபாத், குர்காவுன் ஆகிய பகுதிகளில் தனது ஷோரூம்களை நிறுவியுள்ளது.

பிஎம்டபிள்யூ நிறுவனம் 1930 களிலேயே உலகின் அதிவேகமான பைக்கினை அறிமுகப்படுத்தி உள்ளது. அந்த பைக் மணிக்கு 278 கிமீ வேகத்தில் பயணிக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாகும். இந்த நிலையில், பிஎம்டபிள்யூ நிறுவனம் எஸ்1000ஆர்ஆர் என்ற வேர்ல்ட் கிளாஸ் சூப்பர் மாடல் பைக்கை அறிமுகம் செய்தது.

2019 பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர்

இதன் அடுத்த தலைமுறை பைக்கை பிஎம்டபிள்யூ நிறுவனம் கடந்த வருடம் இஐசிஎம்ஏ 2018 மோட்டார்சைக்கிள் வாகன ஷோவின்போது அறிமுகம் செய்தது. இந்த மேம்படுத்தப்பட்ட மாடலானது குறைந்த எடை, அதிக சக்தி மற்றும் ஸ்போர்டி டைப் தோற்றம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டு அப்கிரேட் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இந்த பைக்கின் வரவு அதன் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த பைக்கில் 999சிசி பவர் கொண்ட இன்-லைன்-நான்கு எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 207 குதிரைத்திறனையும், 13,500rpmயையும் வெளிப்படுத்தும் மற்றும் 113Nm டார்க்யூ திறனில் 11,000rpm திறனையும் வெளிப்படுத்தும்.

2019 பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர்

இந்நிலையில், பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் பைக்கினை பிஎம்டபிள்யூ நிறுவனம் 2019ம் ஆண்டுக்கான நார்ம்ஸின்படி உருவாக்கி வருகிறது. இந்த மாடலில் முந்தைய மாடலைக்காட்டிலும் 8 குதிரைத்திறன் கூட்டப்பட்ட பவருடன், மாற்றமில்லாத டார்க்யூ திறனுடன் அப்கிரேட் செய்யப்ட்டு உள்ளது.

மேலும், இதில் மிகப்பெரிய மாற்றமாக பவர் ட்ரெயின் தொழில்நுட்பத்தை கூடுதலாக பிஎம்டபிள்யூ ஷிப்ட்கேம் இணைக்க உள்ளது. இது வேரியபிலான வால்வ் டைமிங் மற்றும் வால்வ் ஸ்டிரோக் உள்ளிட்டவையை சிறப்பானதாக மாற்றியமைக்கும். இதன்மூலம் வாகன ஓட்டிகள் சிறந்த ரைட் அனுபவத்தை அனுபவிக்க முடியும்.

2019 பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர்

மேலும், பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் மாடலில் சிக்ஸ்-ஆக்ஸிஸ் எனப்படும் எலெக்ட்ரானிக் சிஸ்டமும் அப்கிரேட் செய்யப்பட உள்ளது. இது ஏபிஎஸ் மற்றும் டைனமிக் டிராக்ஸன் கன்ட்ரோலை சிறப்பாக இயங்க உதவும். இதையடுத்து, இந்த பைக்கில் மழை, சாலை, டைனமிக் மற்றும் ரேஸ் ஆகிய நான்கு விதமான ரைட் மோட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த மோட்களை 6.5 இன்ச் கொண்ட டிஜிட்டல் திரையைக் கொண்டு இயக்கிக்கொள்ளலாம்.

இதுதவிர, பைக்கின் அதிகபடியான எடையை குறைக்கும் விதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 197கிலோ எடையுள்ள அந்த பைக்கில் தற்போது 11 கிலோ வரைக் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவ்வாறு, அதன் சேஸிஸ் மற்றும் எஞ்ஜின்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

2019 பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர்

இந்த அப்கிரேடே செய்யப்பட்ட 2019 பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் மாடல் பைக் ரூ. 18.5 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
BMW Launch 2019 BMW S1000RR Model Bike Soon In India. Read In Tamil.
Story first published: Wednesday, February 13, 2019, 14:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X