அட்டகாசமான ஸ்டைலில் இரு விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ பைக்குகள் அறிமுகம்... அடேங்கப்பா இவ்ளோ விலையா?

பிஎம்டபிள்யூ நிறுவனம், இரு விலையுயர்ந்த பைக்குகளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் சொகுசு வசதிகள்குறித்த சுவாரஷ்ய தகவலை இந்த பதிவில் காணலாம்.

அட்டகாசமான ஸ்டைலில் இரு விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ பைக்குகள் அறிமுகம்... விலை எவ்வளவு தெரிஞ்சா வாயை பிளந்துடுவீங்க!

சொகுசு கார் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பிஎம்டபிள்யூ நிறுவனம், பிஎம்டபிள்யூ மோட்டாராட் என்ற பெயரில் பிரிமியம் மற்றும் ஸ்போர்ட்ஸ் ரகத்திலான இருசக்கர வாகனங்களை தயாரித்து வருகின்றது.

அந்தவகையில், புத்தம் புதிய மாடல்களான பிஎம்டபிள்யூ ஆர் 1250 ஆர் மற்றும் பிஎம்டபிள்யூ ஆர் 1250 ஆர்டி ஆகிய இரு மாடல் பைக்குகளை மோட்டாராட் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

அட்டகாசமான ஸ்டைலில் இரு விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ பைக்குகள் அறிமுகம்... விலை எவ்வளவு தெரிஞ்சா வாயை பிளந்துடுவீங்க!

தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இவ்விரு மோட்டார்சைக்கிள்களுக்குமான புக்கிங்கினை பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான டீலர்கள் தொடங்கியுள்ளனர்.

இதில், பிஎம்டபிள்யூ ஆர் 1250 ஆர் பைக்கிற்கு ரூ. 15.25 லட்சம் என்ற விலையும், பிஎம்டபிள்யூ ஆர் 1250 ஆர்டி பைக்கிற்கு ரூ. 22.50 லட்சம் என்ற விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

அட்டகாசமான ஸ்டைலில் இரு விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ பைக்குகள் அறிமுகம்... விலை எவ்வளவு தெரிஞ்சா வாயை பிளந்துடுவீங்க!

பிஎம்டபிள்யூவின் இவ்விரு பைக்குகளும் பல்வேறு பிரிமியம் ரகத்திலான வசதிகளைக் கொண்டவாறு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில், பிஎம்டபிள்யூ ஆர் 1250 ஆர் பைக் பிளாக் ஸ்டார்ம் மெட்டாலிக் நிறத்தில் கிடைக்கின்றது.

அட்டகாசமான ஸ்டைலில் இரு விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ பைக்குகள் அறிமுகம்... விலை எவ்வளவு தெரிஞ்சா வாயை பிளந்துடுவீங்க!

தொடர்ந்து, இந்த பைக்கின் ஸ்டைல் அனைவரையும் கவரும் வகையில் ரோட்ஸ்டர் தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப வகையில், இதன் சில காம்பனென்டுகளுக்கு பொல்லுக்ஸ் மெட்டாலிக் மேட் நிறம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், இந்த பைக் கருப்பு, மெட்டாலிக் நிறத்தில் மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கின்றது.

அட்டகாசமான ஸ்டைலில் இரு விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ பைக்குகள் அறிமுகம்... விலை எவ்வளவு தெரிஞ்சா வாயை பிளந்துடுவீங்க!

இதேபோன்று, பல்வேறு வசதிகளுடன் பிஎம்டபிள்யூ ஆர் 1250 ஆர்டி மாடலும் காட்சியளிக்கின்றது. ஆனால், இது இரு விதமான நிற தேர்வில் விற்பனைக்கு கிடைக்கும். அந்தவகையில், 719 ப்ளூ பேனட் மெட்டாலிக்/ 719 ஸ்பார்க்கிளிங் ஸ்டார்ம் மெட்டாலிக் வண்ண தேர்வில் கிடைக்க இருக்கின்றது.

அட்டகாசமான ஸ்டைலில் இரு விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ பைக்குகள் அறிமுகம்... விலை எவ்வளவு தெரிஞ்சா வாயை பிளந்துடுவீங்க!

தொடர்ந்து, ஒரு சில உடற்கூறுகளை தனித்துவம் செய்து காட்டும் வகையில் பிரத்யேக நிறம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், ஹேண்டில் பாரின் முனை பகுதி மற்றும் வின்ட் ஷீல்ட் பகுதிக்கு குரோம் ஃபினிஷ் கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இருக்கைக்கு பழுப்பு நிறம் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கையின் காரணமாக பிஎம்டபிள்யூ ஆர் 1250 ஆர்டி பைக் மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிக்கின்றது.

அட்டகாசமான ஸ்டைலில் இரு விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ பைக்குகள் அறிமுகம்... விலை எவ்வளவு தெரிஞ்சா வாயை பிளந்துடுவீங்க!

இரு பைக்குகளும் ஒன்றிற்கு ஒன்று தோற்றத்தில் வித்தியாசமானதாக காட்சியளித்தாலும், இவ்விரு பைக்குகளின் சிறப்பம்சங்களில் சில ஒரே மாதிரியானதாக காட்சியளிக்கின்றன. அந்தவகையில், முன்பக்க ஸ்பாய்லர், கோல்டன் பிரேக் காலிபர்கள், ரேடியேட்டர் கவர் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டேங்க் கவர் உள்ளிட்டவை ஒரே மாதிரியானதாக காணப்படுகின்றது.

அட்டகாசமான ஸ்டைலில் இரு விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ பைக்குகள் அறிமுகம்... விலை எவ்வளவு தெரிஞ்சா வாயை பிளந்துடுவீங்க!

இதேபோன்று, இவ்விரு பைக்குகளின் எஞ்ஜினும் ஒரே திறன் கொண்டதாக உள்ளது. அவ்வாறு, இவ்விரு பைக்குகளிலும் 1254 சிசி திறனிலான 2 சிலிண்டர் இன்-லைன் பாக்ஸர் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 100kW (136எச்பி) சக்தியையும், 143 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகின்றது.

அட்டகாசமான ஸ்டைலில் இரு விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ பைக்குகள் அறிமுகம்... விலை எவ்வளவு தெரிஞ்சா வாயை பிளந்துடுவீங்க!

மேலும், பிஎம்டபிள்யூ ஆர் 1250 ஆர் மற்றும் பிஎம்டபிள்யூ ஆர் 1250 ஆர்டி ஆகிய இரு பைக்குகளும் இரு விதமான ரைடிங் மோடில் கிடைக்கின்றது. தொடர்ந்து, பாதுகாப்பு வசதிக்காக ஆட்டோமேட்டிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் எனப்படும் ஏஎஸ்சி சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன், கூடுதலாக ஏபிஎஸ் பிரேக்கிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

அட்டகாசமான ஸ்டைலில் இரு விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ பைக்குகள் அறிமுகம்... விலை எவ்வளவு தெரிஞ்சா வாயை பிளந்துடுவீங்க!

அதேசமயம், பிஎம்டபிள்யூ ஆர்டி பைக்கில் சில தனிப்பட்ட தொழில்நுட்ப வசதிகள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், சீட் ஹீட்டிங், சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், டயர் பிரஷ்ஷர் கன்ட்ரோல் மற்றும் ஆன்டி தெஃப்ட் அலாரம் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன், டைனமிக் இஎஸ்ஏ, ஜிபிஎஸ், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் கீ லெஸ் ரைட் உள்ளிட்ட வசதிகளும் இந்த பைக்கில் இடம்பெற்றிருக்கின்றது.

அட்டகாசமான ஸ்டைலில் இரு விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ பைக்குகள் அறிமுகம்... விலை எவ்வளவு தெரிஞ்சா வாயை பிளந்துடுவீங்க!

இதேபோல, பிஎம்டபிள்யூ ஆர் 1250 ஆர் பைக்கிலும் சில தனிப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில், சிறப்பம்சமாக 6.5 இன்ச் அளவிலான வண்ணத் திரைக்கொண்ட டிஎஃப்டி திரை கொடுக்கப்பட்டுள்ளது. இது ரைடருக்கு தேவையான பல்வேறு தகவல்களை வழங்க உதவும். மேலும், இதில் இடம்பெற்றுள்ள ப்ளூடூத் வசதி, செல்போனுடன் இணைக்க உதவும்.

அட்டகாசமான ஸ்டைலில் இரு விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ பைக்குகள் அறிமுகம்... விலை எவ்வளவு தெரிஞ்சா வாயை பிளந்துடுவீங்க!

அவ்வாறு, அதனை இணைத்த பின்னர் செல்போனுக்கு வரும் அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி போன்றவற்றை பைக்கின் திரையிலேயே காண முடியும். இதேபோன்ற திறன் கொண்ட திரை பிஎம்டபிள்யூ ஆர்டி பைக்கிலும் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால், அது 5.7 இன்ச்சில் உள்ளது. தொடர்ந்து, இவ்விரு பைக்குகளிலும் சிறப்பு வசதியாக ஹில் ஸ்டார்ட் கன்ட்ரோல் செட் அப் வழங்கப்பட்டுள்ளது. இது சரிவான பாதையில் செல்வதற்கு உதவும்.

Most Read Articles
English summary
BMW Motorrad R 1250 R And R 1250 RT Motorcycles Launched In India: Prices Start At Rs 15.95 Lakh. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X