நாளை அறிமுகமாக இருக்கும் பிஎம்டபிள்யுவின் புதிய பைக்... கவாஸாகி நிஞ்சா மாடலுக்கு போட்டி இதுதான்!

பிஎம்டபிள்யூ நிறுவனம், டுகாட்டி பனிகேல், கவாஸாகி நிஞ்சா உள்ளிட்ட பைக்குகளுக்கு போட்டியாக அதன் எஸ்1000ஆர்ஆர் பைக்கை அப்கிரேட் செய்துள்ளது. இந்த பைக் நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

நாளை அறிமுகமாக இருக்கும் பிஎம்டபிள்யுவின் புதிய பைக்... டுகாட்டி பனிகேல், கவாஸாகி நிஞ்சா பைக்குகளுக்கு போட்டி இதுதான்...

உலகின் புகழ்வாய்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பிஎம்டபிள்யூ, பிஎம்டபிள்யூ மோட்டாராட் என்ற பெயரில் அதநவீன இருசக்கர வாகனங்களைத் தயாரித்து வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அந்தவகையில், இந்த நிறுவனத்தின் பல்வேறு அதிநவீன மற்றும் சக்திவாய்ந்த இருசக்கர வாகனங்கள் ஏற்கனவே இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கப்பட்டுள்ளன.

நாளை அறிமுகமாக இருக்கும் பிஎம்டபிள்யுவின் புதிய பைக்... டுகாட்டி பனிகேல், கவாஸாகி நிஞ்சா பைக்குகளுக்கு போட்டி இதுதான்...

அந்தவகையில், புதிய 2019 பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் பைக் இந்தியாவில் நாளை விற்பனைக்கு களமிறக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்ட நிலையில், தற்போது அந்த பைக் அறிமுகவாதற்கான அனைத்து வேலைப்பாடுகளும் முடிவுற்றுள்ளன. ஆகையால், நாளை இந்த பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் பைக் இந்தியர்களின் பயன்பாட்டிற்காக களமிறங்க இருக்கின்றது.

நாளை அறிமுகமாக இருக்கும் பிஎம்டபிள்யுவின் புதிய பைக்... டுகாட்டி பனிகேல், கவாஸாகி நிஞ்சா பைக்குகளுக்கு போட்டி இதுதான்...

இந்த மோட்டார்சைக்கிளை பிஎம்டபிள்யூ நிறுவனம் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற இஐசிஎம்ஏ வாகன கண்காட்சியில் முதல்முறையாக அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், தற்போது அறிமுகமாக இருக்கும் பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் பைக், பல்வேறு அப்டேட்டுகளைப் பெற்ற புதிய மாடலாக அறிமுகமாக இருக்கின்றது.

நாளை அறிமுகமாக இருக்கும் பிஎம்டபிள்யுவின் புதிய பைக்... டுகாட்டி பனிகேல், கவாஸாகி நிஞ்சா பைக்குகளுக்கு போட்டி இதுதான்...

அந்தவகையில், புதிய நவீன அம்சங்கள், அதிக திறனை வெளிப்படுத்தும் எஞ்ஜின் மற்றும் குறைக்கப்பட்ட எடை உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளை அடங்கிய மாடலாக அது களமிறங்க காத்திருக்கின்றது.

நாளை அறிமுகமாக இருக்கும் பிஎம்டபிள்யுவின் புதிய பைக்... டுகாட்டி பனிகேல், கவாஸாகி நிஞ்சா பைக்குகளுக்கு போட்டி இதுதான்...

இந்த பைக்கின் டிசைன் குறித்து பார்ப்போமேயானால், முன்னதாக பொருத்தப்பட்டிருந்த அசிமெட்ரிக்கல் ஹெட்லேம்ப் நீக்கப்பட்டு, புத்தம் புதிய ஸ்லீக் ரகத்திலான எல்இடி புரொஜக்டர் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், பைக்கின் சிறப்பான உடல் கட்டமைப்பிற்காக ட்ரெல்லிஸ் சப் ஃபிரேமுடன், புதிய அலுமினியம் ட்வின்-ஸ்பேர் ஃப்ரேம்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோன்று, அதன் சேஸிஸ் அமைப்பில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாளை அறிமுகமாக இருக்கும் பிஎம்டபிள்யுவின் புதிய பைக்... டுகாட்டி பனிகேல், கவாஸாகி நிஞ்சா பைக்குகளுக்கு போட்டி இதுதான்...

அந்தவகையில், காம்பேக்டான டைமென்ஷன் மற்றும் ஸ்லீக்கர் ரகத்தில் அழகுப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, நவீனதொழில்நுட்ப வசதிகளாக, அனைத்து வண்ணங்களையும் உள்ளடக்கிய டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், ப்ளூடூத் கனெக்டிவிட்டி வசதியுடன் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், டைனமிக் ட்ராக்சன் கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஷிஃப்ட் அசிஸ்ட் ப்ரோ மற்றும் அட்ஜெஸ்டபிள் எஞ்ஜின் பிரேக்கிங் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

நாளை அறிமுகமாக இருக்கும் பிஎம்டபிள்யுவின் புதிய பைக்... டுகாட்டி பனிகேல், கவாஸாகி நிஞ்சா பைக்குகளுக்கு போட்டி இதுதான்...

பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் பைக்கின் டிசைன் மற்றும் தொழில்நுட்பத்தைப் போன்றே அந்த பைக்கின் எஞ்ஜினும் புதிதாக இருக்கின்றது. அந்தவகையில், புதிதாக உருவாக்கப்பட்ட 999சிசி திறன் கொண்ட இன்லைன்-4 எஞ்ஜின் பொருத்தப்பட உள்ளது. இந்த எஞ்ஜினில் பிஎம்டபிள்யூவின் ஷிஃப்ட்கேம் டெக்னாலஜி இணைக்கப்பட்டுள்ளது. இது, முந்தைய மாடலைக் காட்டிலும் அதிக சக்தி மற்றும் திறனை வெளிப்படுத்த உதவும்.

நாளை அறிமுகமாக இருக்கும் பிஎம்டபிள்யுவின் புதிய பைக்... டுகாட்டி பனிகேல், கவாஸாகி நிஞ்சா பைக்குகளுக்கு போட்டி இதுதான்...

அந்தவகையில், 204 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனை இந்த எஞ்ஜின் பெற்றிருக்கின்றது. இத்துடன், 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இந்த எஞ்ஜினுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், ரோட், ரெயின், டைனமிக் மற்றும் ரேஸ் ஆகிய நான்கு ரைடிங் மோட்களும் இதில் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, முந்தைய மாடல் எஸ்1000ஆர்ஆர் பைக்கைக் காட்டிலும் தற்போதைய புதிய மாடல் 11 கிலோ குறைவாக இருக்கின்றது.

நாளை அறிமுகமாக இருக்கும் பிஎம்டபிள்யுவின் புதிய பைக்... டுகாட்டி பனிகேல், கவாஸாகி நிஞ்சா பைக்குகளுக்கு போட்டி இதுதான்...

இந்த எடைக் குறைப்பானது, குறைவான எடைக் கொண்ட பாகங்கள் மூலம் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் பாதுகாப்பு அம்சமாக, பழைய ஹேயஸ் பிரேக்குகள் ரீபிளேஸ் செய்யப்பட்டுள்ளது. மேலும், அதற்கு பதிலாக, ப்ரெம்போ யூனிட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன், சிறப்பான சஸ்பென்ஷனுக்காக மர்ஸோச்சி சஸ்பென்ஷன்கள் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது விற்பனையில் இருக்கும் இந்த பைக், ரூ. 18.05 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகின்றது.

நாளை அறிமுகமாக இருக்கும் பிஎம்டபிள்யுவின் புதிய பைக்... டுகாட்டி பனிகேல், கவாஸாகி நிஞ்சா பைக்குகளுக்கு போட்டி இதுதான்...

ஆனால், புதிய 2019 பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் பைக் இதைக்காட்டிலும் சற்று அதிகமான விலையைக் கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுககின்றது. அதேசமயம், இந்த பைக் ஏற்கனவே இந்தியாவில் விற்பனையில் இருக்கும் யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்1, டுகாட்டி பனிகேல் வி4, கவாஸாகி நிஞ்சா இசட்எக்ஸ்-10ஆர்ஆர், அப்ரில்லா ஆர்எஸ்வி4 ஆர்ஆர் மற்றும் சுஸுகி ஜிஎஸ்எக்ஸ் ஆர்1000 உள்ளிட்ட மாடல்களுடன் கடுமையான போட்டியைச் சந்திக்க இருக்கின்றது.

Most Read Articles
English summary
2019 BMW S 1000 RR India-Launch Tomorrow — To Rival The Ducati Panigale V4. Read In Tamil.
Story first published: Wednesday, June 26, 2019, 16:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X