அதிரடி ஆட்டம்போட களமிறங்கிவிட்டது பிஎம்டபிள்யூவின் புதிய பவர்ஃபுல் பைக்.. விலை மற்றும் சிறப்பு தகவல்

பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்குறித்த கூடுதல் சிறப்பு தகவலை இந்த பதிவில் காணலாம்.

அதிரடி ஆட்டம்போட களமிறங்கிவிட்டது பிஎம்டபிள்யூவின் புதிய பவர்ஃபுல் பைக்... விலை மற்றும் முழு தகவல் உள்ளே!

பிஎம்டபிள்யூ நிறுவனம், கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற இஐசிஎம்ஏ வாகன கண்காட்சியில் பிஎம்டபிள்யு எஸ்1000 ஆர்ஆர் என்ற புதிய ரக மாடலை அறிமுகம் செய்திருந்தது. இந்த பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு செய்யும் விதமாக, தலைநகர் டெல்லியில் நடைபெற்ற காலா நிகழ்ச்சியில் அந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் அறிமுகத்தின்போது பாலிவுட் திரைப்பட நடிகர் ஷாகித் கபூர் கலந்துக்கொண்டுள்ளார்.

அதிரடி ஆட்டம்போட களமிறங்கிவிட்டது பிஎம்டபிள்யூவின் புதிய பவர்ஃபுல் பைக்... விலை மற்றும் முழு தகவல் உள்ளே!

பிஎம்டபிள்யூ நிறுவனம், பிஎம்டபிள்யூ மோட்டாராட் என்ற பெயரில் அதன் பைக்குகளை உலகில் அனைத்து நாடுகளிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றது. இந்த நிறுவனத்திற்கு கடந்த 2018ம் ஆண்டு இந்தியாவில் சிறப்பான ஆண்டாக மாறியிருந்தது. ஏனென்றால், கடந்த ஆண்டில் ஒட்டுமொத்தமாக அந்த நிறுவனம், ஆயிரத்திற்கும் மேற்பட்ட யூனிட்களை விற்பனைக்கு அறிமுகம் செய்திருந்தது. அதில், அதிகம் விற்பனையாகும் மாடல்களாக ஜி310ஆர் மற்றும் ஜி310ஜிஎஸ் ஆகிய மாடல் பைக்குகள் இருக்கின்றன.

அதிரடி ஆட்டம்போட களமிறங்கிவிட்டது பிஎம்டபிள்யூவின் புதிய பவர்ஃபுல் பைக்... விலை மற்றும் முழு தகவல் உள்ளே!

இவை, மிக மலிவு விலை கொண்ட மாடலாக இருப்பதே இதற்கு முக்கியமாக காரணமாக இருக்கின்றது. இந்த பைக்குகள் ஒவ்வொரு மாத்திற்கும் குறைந்தது 150 யூனிட்களையாவது விற்றுவிடும். அந்த வகையில்தான், இந்த புதிய உச்சத்தை பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் பெற்றுள்ளது.

அதிரடி ஆட்டம்போட களமிறங்கிவிட்டது பிஎம்டபிள்யூவின் புதிய பவர்ஃபுல் பைக்... விலை மற்றும் முழு தகவல் உள்ளே!

தற்போது விற்பனைக்கு அறிமுகமாகியுள்ள 2019 பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் பைக், புதிய கூறுகளை (Component) பெற்றுள்ளது. அந்தவகையில், பைக்கின் திறனுக்காக கூடுதல் சிறப்பம்சங்கள் மற்றும் எடைக்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிரடி ஆட்டம்போட களமிறங்கிவிட்டது பிஎம்டபிள்யூவின் புதிய பவர்ஃபுல் பைக்... விலை மற்றும் முழு தகவல் உள்ளே!

முழுக்க முழுக்க அழகுப்படுத்தப்பட்ட முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பைக் மூன்று விதமான வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கின்றது. அந்தவகையில், ஸ்டாண்டர்டு, ப்ரோ மற்றும் ப்ரோ எம் ஸ்போர்ட் ஆகிய மூன்று விதமான வேரியண்ட்களில் களமிறக்கப்பட்டுள்ளது. இதில், ஸ்டாண்டர்டு வேரியண்டிற்கு ரூ. 18.50 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, ப்ரோ வேரியண்டிற்கு ரூ. 20.95 லட்சமும், ப்ரோ எம் ஸ்போர்ட் வேரியண்டிற்கு ரூ. 22.95 லட்சம் என்ற விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதிரடி ஆட்டம்போட களமிறங்கிவிட்டது பிஎம்டபிள்யூவின் புதிய பவர்ஃபுல் பைக்... விலை மற்றும் முழு தகவல் உள்ளே!

பலவிதமான அப்டேட்டுகளைப் பெற்றிருக்கும் இந்த பைக்கில் குறிப்பாக அழுகபடுத்துதலுக்கு பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆகையால், முன்னதாக இருந்த வடிவமைப்பைக் காட்டிலும், இந்த புதிய மாடல் கூடுதல் ஷார்ப் மற்றும் அக்ரசீவான டிசைனைப் பெற்றிருக்கின்றது. அந்தவகையில், 2019 பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் பைக்கின் முகப்பு பைக்கிற்கு மிகவும் கவர்ச்சியான வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதிரடி ஆட்டம்போட களமிறங்கிவிட்டது பிஎம்டபிள்யூவின் புதிய பவர்ஃபுல் பைக்... விலை மற்றும் முழு தகவல் உள்ளே!

அதில், இரு எல்இடி புரொஜக்டர் ஹெட்லேம்ப், பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் கிராஃபிக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, பைக்கின் சிறப்பான கட்டுமானத்திற்காக அலுமினியம் ட்வின் ஸ்பர் சேஸிஸ் மற்றும் ட்ரெல்லிஸ் சப்-ஃப்ரேம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன், தொழில்நுட்ப அம்சமாக அனைத்து வண்ணங்களையும் கொண்ட டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் கனசோல், ப்ளூடுத் மற்றும் நேவிகேஷன் வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது.

அதிரடி ஆட்டம்போட களமிறங்கிவிட்டது பிஎம்டபிள்யூவின் புதிய பவர்ஃபுல் பைக்... விலை மற்றும் முழு தகவல் உள்ளே!

தொடர்ந்து பாதுகாப்பு வசதியாக, டைனமிக் டிராக்சன் கன்ட்ரோல், ஷிஃப்ட் அசிஸ்ட் மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. மற்றும் பிரேக்கிங் வசதியில் பழைய பிரெம்போ பிரேக்குகளுக்கு பதிலாக 2019 மாடல் ஸ்போர்ட்ஸ் ஹேயஸ் பிரேக்ஸ் வழங்கப்பட உள்ளது. தொடர்ந்து சிறப்பான சஸ்பென்ஷனுக்காக மர்ஸோச்சி சஸ்பென்ஷன்கள் இணைக்கப்பட்டுள்ளன. இது, வாகன ஓட்டிக்கு சிறப்பான ரைடிங் அனுபவத்தை வழங்கும்.

அதிரடி ஆட்டம்போட களமிறங்கிவிட்டது பிஎம்டபிள்யூவின் புதிய பவர்ஃபுல் பைக்... விலை மற்றும் முழு தகவல் உள்ளே!

மேலும், இந்த பைக்கில் எலக்ட்ரானிக் அப்டேட்டுகளும் செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில், 6 ஆக்ஸிஸ் அமைப்பு கொண்ட கார்னரிங் ஏபிஎஸ் மற்றும் டைனமிக் டிராக்சன் கன்ட்ரோல் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இத்துடன், பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் பைக்கில் சிறப்பான நான்க ரைடிங் மோட்கள் இணைக்கப்பட்டுள்ளன. ரெயின், ரோட், டைனமிக் மற்றும் ரேஸ் உள்ளிட்ட மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை, அதனதன் பெயருக்கேற்ப பலனை வழங்க இருக்கின்றது.

அதிரடி ஆட்டம்போட களமிறங்கிவிட்டது பிஎம்டபிள்யூவின் புதிய பவர்ஃபுல் பைக்... விலை மற்றும் முழு தகவல் உள்ளே!

இந்த பைக்கில் அதீதி திறனை வெளிப்படுத்தும் வகையில், இலகுவான எடைக் கொண்ட 999சிசி திறன் கொண்ட, இன்லைன், 4 சிலிண்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில், பிஎம்சி ஷிஃப்ட்கேம் தொழில்நுட்பம் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. ஆகையால், இந்த எஞ்ஜின் 13,500 ஆர்பிஎம்மில் 204 பிஎச்பி பவரையும், 11,000 ஆர்பிஎம்மில் 113 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இத்துடன் இந்த எஞ்ஜினில் 6 ஸ்பீடு கான்ஸ்டன்ட் மெஷ் கியர்பாக்ஸ், அப்/டவுண் குயிக் ஷிஃப்டர் திறனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

அதிரடி ஆட்டம்போட களமிறங்கிவிட்டது பிஎம்டபிள்யூவின் புதிய பவர்ஃபுல் பைக்... விலை மற்றும் முழு தகவல் உள்ளே!

இந்த லைட் எஞ்ஜினால், முந்த மாடலைக்காட்டிலும் 11 கிலோ எடைக் குறைக்கப்பட்டுள்ளது. தற்போதைய விற்பனையில் இருக்கும் எஸ்1000ஆர்ஆர் பைக் 197 கிலோவாக இருக்கின்றது. இந்த பைக் ஏற்கனவே இந்தியாவில் விற்பனையில் இருக்கும் யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்1, டுகாட்டி பனிகேல் வி4, கவாஸாகி நிஞ்சா இசட்எக்ஸ்-10ஆர்ஆர், அப்ரில்லா ஆர்எஸ்வி4 ஆர்ஆர் மற்றும் சுஸுகி ஜிஎஸ்எக்ஸ் ஆர்1000 உள்ளிட்ட மாடல்களுடன் கடுமையான போட்டியைச் சந்திக்க இருக்கின்றது.

Most Read Articles
English summary
2019 BMW S 1000 RR Launched In India — Prices Start At Rs 18.50 Lakh. Read In Tamil.
Story first published: Thursday, June 27, 2019, 17:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X