ஹார்லி டேவிட்சனின் க்ரூஸர் ரக பைக்கை விரட்டியடிக்க போகும் பிஎம்டபிள்யூ பைக் இதுதான்...!

ஹார்லிடேவிட்சன் நிறுவனத்தின் க்ரூஸர் ரக பைக்கிற்கு போட்டியாக இருக்கும் விதத்தில் பிஎம்டபிள்யூ மோட்டாராட் நிறுவனம், புதிய ஆர்18 எனப்படும் க்ரூஸர் ரக கான்செப்ட் மாடலை முதல் முறையாக அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஹார்லி டேவிட்சனின் க்ரூஸர் ரக பைக்கை விரட்டியடிக்க போகும் பிஎம்டபிள்யூ பைக் இதுதான்... பைக்கின் ஸ்பெஷல் புகைப்படம்...!

ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கமாக விளங்கி வரும் இத்தாலி நாட்டில் டி எலிகன்சா வில்லா டி எஸ்டே எனப்படும் வாகனங்களுக்கான கண்காட்சி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பிஎம்டபிள்யூ நிறுவனம், அதன் புதிய கான்செப்ட் ரகத்திலான ஆர்18 மாடலை முதல் முறையாக வெளியுலகிற்கு அறிமுகம் செய்துள்ளது.

ஹார்லி டேவிட்சனின் க்ரூஸர் ரக பைக்கை விரட்டியடிக்க போகும் பிஎம்டபிள்யூ பைக் இதுதான்... பைக்கின் ஸ்பெஷல் புகைப்படம்...!

இந்த கான்செப்ட் மாடலை அந்த நிறுவனம், ஆர்5 எனப்படும் 1939ம் ஆண்டுகளில் மிகவும் பிரலமாக இருந்த க்ரூஸர் பைக்கின் தோற்றத்தில் உருவாக்கியுள்ளது. இந்த புதிய மோட்டார்சைக்கிளுக்கு மிகவும் போல்டான டிசைன் தாத்பரியங்களை பிஎம்டபிள்யூ நிறுவனம் வழங்கியுள்ளது.

ஹார்லி டேவிட்சனின் க்ரூஸர் ரக பைக்கை விரட்டியடிக்க போகும் பிஎம்டபிள்யூ பைக் இதுதான்... பைக்கின் ஸ்பெஷல் புகைப்படம்...!

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இந்த புதிய க்ரூஸர் ரக பைக்கின் உற்பத்தியானது வருகின்ற 2020ம் ஆண்டில் துவங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஆர்5 மாடலில் தயார் செய்யப்பட்டிருக்கும் ஆர்18 க்ரூஸர் பைக்கிற்கு, டியர் ட்ராப் அமைப்பிலான ஃப்யூவல் டேங்க் வழங்கப்பட்டுள்ளது.

ஹார்லி டேவிட்சனின் க்ரூஸர் ரக பைக்கை விரட்டியடிக்க போகும் பிஎம்டபிள்யூ பைக் இதுதான்... பைக்கின் ஸ்பெஷல் புகைப்படம்...!

இது, அந்த பைக்கிற்கு முழுக்க முழுக்க ரெட்ரோ டிசைன் லுக்கை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும், பயணிகளின் சொகுசான பயண அனுபவத்திற்காக கான்டிலிவர் சஸ்பென்ஷன் மற்றும் ஓபன் ஷேப்ட் டிரைவ் இணைக்கப்பட உள்ளது.

ஹார்லி டேவிட்சனின் க்ரூஸர் ரக பைக்கை விரட்டியடிக்க போகும் பிஎம்டபிள்யூ பைக் இதுதான்... பைக்கின் ஸ்பெஷல் புகைப்படம்...!

இத்துடன், 21 இன்சிலான வீல் முன்பக்கத்திற்கும், 18 இன்ச் அளவிலான வீல் பின்பக்கத்திலும் வழங்கப்பட இருக்கின்றது. மேலும், இந்த வீல்களில் மெட்ஸெல்லர் எனப்படும் டயர்கள் இணைக்கப்பட உள்ளன. இது பைக்கிற்கு செக்யூர் ஸ்டேன்ஸையும், மிக கச்சிதமான பேலன்ஸையும் வழங்கும்.

ஹார்லி டேவிட்சனின் க்ரூஸர் ரக பைக்கை விரட்டியடிக்க போகும் பிஎம்டபிள்யூ பைக் இதுதான்... பைக்கின் ஸ்பெஷல் புகைப்படம்...!

பைக்கின் இருக்கை அமைப்பானது, ஒருவர் மட்டுமே அமர்ந்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த க்ரூஸர் ரக பைக்கை ரோட்ரோ லுக்கில் காட்டுவதற்கேற்ப வட்டவடிவிலான ஹெட்லேம்ப் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன், பைக்கிற்கு நவீன லுக்கை வழங்கும் வகையில் கிராஃபிக்ஸ்களும் ஒட்டப்பட்டுள்ளன. இதுபோன்ற காரணங்களால், இந்த க்ரூஸர் ரக பைக் ரெட்ரோ லுக்கில், மாடர்ன் அம்சத்தைப் பெற்ற பைக்காக காட்சியளிக்கின்றது.

ஹார்லி டேவிட்சனின் க்ரூஸர் ரக பைக்கை விரட்டியடிக்க போகும் பிஎம்டபிள்யூ பைக் இதுதான்... பைக்கின் ஸ்பெஷல் புகைப்படம்...!

மேலும், பைக்கின் சிறந்த லுக்கிற்காக கிளாசிக் பெயிண்ட் ஸ்கீம் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு, பைக்கின் முன் பக்க ஃபோர்க் மற்றும் பெட்ரோல் டேங்கிற்கு வெள்ளை நிறத்திலா லைன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோன்ற குறிப்பட்ட அளவு கலர் காம்பினேஷனில் இந்த பைக் உருவாக இருக்கின்றது.

ஹார்லி டேவிட்சனின் க்ரூஸர் ரக பைக்கை விரட்டியடிக்க போகும் பிஎம்டபிள்யூ பைக் இதுதான்... பைக்கின் ஸ்பெஷல் புகைப்படம்...!

ஆர்18 பைக்கின் அதீத திறனுக்காக பிஎம்டபிள்யூ நிறுவனம், 1.8 லிட்டர் 2 சிலிண்டர் பாக்ஸர் எஞ்ஜினைப் பொருத்த உள்ளது. இந்த எஞ்ஜின் பிரத்யேகமாக ஏர் மற்றும் ஆயில் கூல்டு அம்சத்தைப் பெற்றதாக இருக்கின்றது. ஆனால், இந்த பைக்கின் பவர் மற்றும் டார்க் குறித்த தகவலை அந்த நிறுவனம் வெளியிடவில்லை. இந்த எஞ்ஜினில் மேலும் பிரத்யேகமாக சோலக்ஸ்ஸ ட்யூவல் கார்புரேட்டர் ப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் இணைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹார்லி டேவிட்சனின் க்ரூஸர் ரக பைக்கை விரட்டியடிக்க போகும் பிஎம்டபிள்யூ பைக் இதுதான்... பைக்கின் ஸ்பெஷல் புகைப்படம்...!

பிஎம்டபிள்யூ நிறுவனம், இதே மோட்டார் எஞ்ஜின் ஆப்ஷனில் இதுவரை மூன்று கான்செப்ட் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. அதுவும் கடந்த 6 மாதங்களுக்கு உள்ளாகவே. அந்த வகையில்தான், தற்போது இந்த புதிய மாடல் ஆர்18 பைக் கான்செப்ட் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக் பாரம்பரிய லுக்கைப் பெற்றிருந்தாலும், தற்போதைய நவீன யுகத்திற்கு பல்வேறு அம்சங்களைப் பெற்றதாக இருக்கின்றது.

ஹார்லி டேவிட்சனின் க்ரூஸர் ரக பைக்கை விரட்டியடிக்க போகும் பிஎம்டபிள்யூ பைக் இதுதான்... பைக்கின் ஸ்பெஷல் புகைப்படம்...!

அந்தவகையில், பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஆர்18 கான்செப்ட் மாடலில் மினிமல் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டிசைன்கள் நடப்பு காலகட்டத்திற்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளது. இந்த கான்செப்ட் மாடலின் உற்பத்தி வருகின்ற 2020ம் ஆண்டில் தொடங்கப்படும் என கூறப்படுகிறது.

ஹார்லி டேவிட்சனின் க்ரூஸர் ரக பைக்கை விரட்டியடிக்க போகும் பிஎம்டபிள்யூ பைக் இதுதான்... பைக்கின் ஸ்பெஷல் புகைப்படம்...!

அவ்வாறு, இந்த பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இந்த க்ரூஸர் ரக பைக் விற்பனைக்கு வந்தால் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்திற்கும், ட்ரையம்ப் மற்றும் இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனங்களின் பைக்குகளிடையே போட்டியைச் சந்திக்கும். மேலும், உற்பத்தி தொடக்கத்திற்கு பின்னரே இந்திய வருகை குறித்த தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது.

Most Read Articles
English summary
BMW Showcased New Concept R18 Motorcycle In Italy. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X