9 லட்ச ரூபாய்க்கு கேடிஎம் பைக்கை வாங்கிய பிரபல நடிகர்... யாரென்று உங்களால் கணிக்க முடிகிறதா?

பிரபல நடிகர் ஒருவர் சுமார் 9 லட்ச ரூபாய் மதிப்புள்ள கேடிஎம் பைக்கை வாங்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

9 லட்ச ரூபாய்க்கு கேடிஎம் பைக்கை வாங்கிய பிரபல நடிகர்... யாரென்று தெரியுமா?

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பைக்குகளில் ஒன்று கேடிஎம் 790 ட்யூக் (KTM 790 Duke). கேடிஎம் ட்யூக் 790 பைக்கிற்கு கடந்த ஜூன் மாதம் இந்திய வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்தனர். 30 ஆயிரம் ரூபாய் என்ற முன்பணத்துடன் இந்த மோட்டார்சைக்கிள் மாடலுக்கு புக்கிங் ஏற்கப்பட்டது.

9 லட்ச ரூபாய்க்கு கேடிஎம் பைக்கை வாங்கிய பிரபல நடிகர்... யாரென்று தெரியுமா?

ஆனால் கேடிஎம் ட்யூக் 790 பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதை கேடிஎம் நிறுவனம் ஒரு சில காரணங்களால் தள்ளி வைத்தது. இதனால் முன்பதிவு செய்திருந்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றமடைந்தனர். எனினும் இந்தியாவில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்படும்போது, இந்த மோட்டார்சைக்கிள் பல முறை கேமரா கண்களில் தென்பட்டது.

9 லட்ச ரூபாய்க்கு கேடிஎம் பைக்கை வாங்கிய பிரபல நடிகர்... யாரென்று தெரியுமா?

இறுதியாக கர்நாடக மாநிலத்தில் உள்ள பார்க்கிங் லாட் ஒன்றில், கேடிஎம் ட்யூக் 790 பைக்கின் தரிசனம் கிடைத்தது. அப்போது அந்த பைக்கில் சாரி கார்டும் இருந்தது. இதன் மூலம் இந்த பைக் இந்திய மார்க்கெட்டிற்கானதுதான் என்பது தெரியவந்தது. இந்த சூழலில் கடந்த செப்டம்பர் 23ம் தேதியன்று கேடிஎம் ட்யூக் 790 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

9 லட்ச ரூபாய்க்கு கேடிஎம் பைக்கை வாங்கிய பிரபல நடிகர்... யாரென்று தெரியுமா?

இதன் எக்ஸ் ஷோரூம் விலை 8.64 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கேடிஎம் ட்யூக் 790 பைக் ஒரு வழியாக இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்த சூழலில் கேடிஎம் ட்யூக் 790 பைக்கின் டெலிவரியும் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

9 லட்ச ரூபாய்க்கு கேடிஎம் பைக்கை வாங்கிய பிரபல நடிகர்... யாரென்று தெரியுமா?

மும்பையில் முதல் கேடிஎம் ட்யூக் 790 பைக் பாலிவுட் நடிகர் டினோ மோரியாவிற்கு (Dino Morea) டெலிவரி செய்யப்பட்டுள்ளது. கேடிஎம் நிறுவனம் ட்யூக் 790 பைக்கை முதற்கட்டமாக இந்தியாவின் 9 நகரங்களில் மட்டுமே விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. அவை பின்வருமாறு: மும்பை, புனே, சூரத், டெல்லி, கொல்கத்தா, கவுகாத்தி, பெங்களூர், ஐதராபாத் மற்றும் சென்னை.

MOST READ: ஆச்சரியமா இருக்கே... இரவு 10 மணிக்கு மேல் கார் கதவை படாரென மூட கூடாது... ஏன் தெரியுமா?

9 லட்ச ரூபாய்க்கு கேடிஎம் பைக்கை வாங்கிய பிரபல நடிகர்... யாரென்று தெரியுமா?

கேடிஎம் ட்யூக் 790 மோட்டார்சைக்கிள், புதிதாக உருவாக்கப்பட்ட 799 சிசி எல்சி8 லிக்யூட் கூல்டு பேரலல்-ட்வின் இன்ஜினை பெற்றுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 106 பிஎஸ் பவர் மற்றும் 87 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. இந்த பைக்கில் 6 ஸ்பீடு கியர் பாக்ஸை கேடிஎம் நிறுவனம் வழங்கியுள்ளது.

MOST READ: பிரதமருக்கே இல்லாத அதிகாரத்தை பயன்படுத்தி வாலாட்டிய போலீஸ் இன்ஸ்பெக்டர்... நண்பர்களுடன் அட்டகாசம்

9 லட்ச ரூபாய்க்கு கேடிஎம் பைக்கை வாங்கிய பிரபல நடிகர்... யாரென்று தெரியுமா?

கேடிஎம் ட்யூக் 790 மோட்டார்சைக்கிள் மாடலில், ஸ்போர்ட், ஸ்ட்ரீட், ரெய்ன் மற்றும் ட்ராக் என மொத்தம் நான்கு ரைடிங் மோடுகள் உள்ளன. தனது இளைய உடன்பிறப்பான ட்யூக் 390 பைக்குடன், ட்யூக் 790 மோட்டார்சைக்கிள் டிசைன் மொழியை பகிர்ந்து கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MOST READ: ஆபத்தில் உதவிய ஜீப்: போலீஸார் செய்த நன்றி கடனால் உரிமையாளர் அதிர்ச்சி!

9 லட்ச ரூபாய்க்கு கேடிஎம் பைக்கை வாங்கிய பிரபல நடிகர்... யாரென்று தெரியுமா?

இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள கேடிஎம் ட்யூக் 790 பைக்கில், டிராக்ஸன் கண்ட்ரோல், க்யிக் ஷிப்டர், மோட்டார் ஸ்லிப் ரெகுலேஷன் மற்றும் கார்னரிங் ஏபிஎஸ் உடன் மோட்டார்சைக்கிள் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.

Image Courtesy: Mohit Ahuja/Facebook

Most Read Articles

மேலும்... #கேடிஎம் #ktm
English summary
Bollywood Actor Dino Morea Buys KTM 790 Duke. Read in Tamil
Story first published: Thursday, October 3, 2019, 19:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X