சத்தமே இல்லாமல் ராயல் என்பீல்டு பைக்கை வாங்கிய தளபதி விஜய்யின் எதிரி... யார் என தெரியுமா?

விஜய்க்கு வில்லனாக நடித்த பிரபல நடிகர் ஒருவர் ராயல் என்பீல்டு பைக்கை வாங்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ராயல் என்பீல்டு பைக்கை வாங்கிய தளபதி விஜய்யின் எதிரி... யார் என தெரியுமா?

இந்தியாவில் வயது வித்தியாசம் இன்றி அனைத்து தரப்பினரையும் வசீகரித்துள்ள மோட்டார்சைக்கிள் நிறுவனம் ராயல் என்பீல்டு. ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு என்று இந்தியாவில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. சாதாரண வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாது, மிகவும் பிரபலமான திரையுலக நட்சத்திரங்களும் ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களுக்கு ரசிகர்களாக உள்ளனர்.

ராயல் என்பீல்டு பைக்கை வாங்கிய தளபதி விஜய்யின் எதிரி... யார் என தெரியுமா?

அவர்களில் ஜாக்கி ஷெராப்பும் ஒருவர். பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் புதிய ரெட்ரோ மோட்டார்சைக்கிள் ஒன்றை தற்போது வாங்கியுள்ளார். ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி 650 பைக்தான் ஜாக்கி ஷெராப் வீட்டின் புதுவரவு. புனேவை சேர்ந்த பிரம்மா மோட்டார்ஸ் நிறுவனம் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப்பிற்கு ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி 650 பைக்கை டெலிவரி செய்துள்ளது.

ராயல் என்பீல்டு பைக்கை வாங்கிய தளபதி விஜய்யின் எதிரி... யார் என தெரியுமா?

மிஸ்டர் க்ளீன் பெயிண்ட் ஸ்கீமில் ஜாக்கி ஷெராப் ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி 650 பைக்கை வாங்கியுள்ளார். இந்த மிஸ்டர் க்ளீன் பெயிண்ட் ஸ்கீம்தான் ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி 650 பைக்கின் விலை உயர்ந்த ட்ரிம் லெவல் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் புனே ஆன் ரோடு விலை 3.50 லட்ச ரூபாய்.

ராயல் என்பீல்டு பைக்கை வாங்கிய தளபதி விஜய்யின் எதிரி... யார் என தெரியுமா?

அதே சமயம் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மிக மலிவான கஃபே ரேஸர் ஸ்டைல் மோட்டார்சைக்கிள் மாடல்களில் ஒன்றாக ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி 650 திகழ்கிறது. ஸ்டைலான ரெட்ரோ மோட்டார்சைக்கிளை எதிர்பார்ப்பவர்களை, குறிப்பாக வீக் எண்டு ரைடு செல்பவர்களை இலக்காக வைத்து கான்டினென்டல் ஜிடி 650 பைக்கை ராயல் என்பீல்டு களமிறக்கியுள்ளது.

ராயல் என்பீல்டு பைக்கை வாங்கிய தளபதி விஜய்யின் எதிரி... யார் என தெரியுமா?

கான்டினென்டல் ஜிடி 650 மோட்டார்சைக்கிளானது ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிள் உடன் தனது மெக்கானிக்கல் அம்சங்களை பகிர்ந்து கொண்டுள்ளது. 650 ட்வின்ஸ் என குறிப்பிடப்படும் கான்டினென்டல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிள்களை ராயல் என்பீல்டு நிறுவனம் ஒரு ஆண்டுக்கு முன்பாக இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

ராயல் என்பீல்டு பைக்கை வாங்கிய தளபதி விஜய்யின் எதிரி... யார் என தெரியுமா?

இந்த இரண்டு மோட்டார்சைக்கிள்களிலும் புதிதாக உருவாக்கப்பட்ட 647 சிசி, 4 ஸ்ட்ரோக் ட்வின் சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 47 பிஎச்பி பவரையும், 52 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வல்லமை வாய்ந்தது. இதில், 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது. அதே சமயம் ஸ்லிப் அஸிஸ்ட் கிளட்ச் ஸ்டாண்டர்டாக கொடுக்கப்படுகிறது.

ராயல் என்பீல்டு பைக்கை வாங்கிய தளபதி விஜய்யின் எதிரி... யார் என தெரியுமா?

இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட உடனேயே ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 மோட்டார்சைக்கிள்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமடைந்து விட்டன. ராயல் என்பீல்டு நிறுவனம் விலை நிர்ணயத்தை சரியாக மேற்கொண்டதும், அவை விற்பனையில் சாதிக்க உதவின.

ராயல் என்பீல்டு பைக்கை வாங்கிய தளபதி விஜய்யின் எதிரி... யார் என தெரியுமா?

ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 மோட்டார்சைக்கிள்களில் பிஎஸ்6 வெர்ஷன் இன்ஜின் அடுத்த ஆண்டு தொடக்கம் முதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் ராயல் என்பீல்டு நிறுவனம் தனது 350 சிசி பைக்குகளை பிஎஸ்6 விதிகளுக்கு ஏற்ப மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.

ராயல் என்பீல்டு பைக்கை வாங்கிய தளபதி விஜய்யின் எதிரி... யார் என தெரியுமா?

தற்போது கான்டினென்டல் ஜிடி 650 பைக்கை வாங்கியுள்ள பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் தமிழ் திரையுலகிலும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வர தொடங்கியுள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான பிகில் படத்தில் ஜாக்கி ஷெராப்தான் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Bollywood Actor Jackie Shroff Buys Royal Enfield Continental GT 650 Worth Rs.3.50 Lakhs. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X