இந்தியாவில் தற்போதைக்கு விற்பனைக்கு கிடைக்கும் பிஎஸ்6 பைக்குகள் இவைதான்...

இந்தியாவில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் புதிய மாசு உமிழ்வு விதி நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. சில மாதங்களுக்கு முன் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட இந்த விதியால் அனைத்து நிறுவனங்களும் தங்களது தயாரிப்புகளை பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக தயாரித்து வருகின்றன.

அவற்றில் சில வாகனங்கள் இப்போதே அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில் பெரும்பான்மையான வாகனங்கள் அடுத்த வருடத்தில் அறிமுகமாகவுள்ளன. இவ்வாறு பிஎஸ்6 தரத்தில் அறிமுகமாகி விற்பனை செய்யப்பட்டு வருகின்ற ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார்சைக்கிள்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் தற்போதைக்கு விற்பனைக்கு கிடைக்கும் பிஎஸ்6 பைக்குகள் இவைதான்...

ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்6

இந்தியாவில் பிஎஸ்6 தரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் இரு சக்கர வாகனமாக ஹோண்டா ஆக்டிவா 125 விளங்குகிறது. சில மாதங்களுக்கு பின்பு அறிமுகமான இந்த பிஎஸ்6 ஸ்கூட்டர் ரூ.67,400-ல் இருந்து ரூ.74,990 வரை இந்திய எக்ஸ்ஷோரூமில் விற்கப்பட்டு வருகிறது. ஹோண்டா எஃப்ஐ ஃப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த ஆக்டிவாவின் எரிபொருள் திறன் பிஎஸ்6 மாற்றத்தால் 10-13 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஹோண்டா நிறுவனம் கூறியுள்ளது.

இந்தியாவில் தற்போதைக்கு விற்பனைக்கு கிடைக்கும் பிஎஸ்6 பைக்குகள் இவைதான்...

மேலும் இந்த ஸ்கூட்டரில் ஐடியல் ஸ்டாப் புதிதாக பொருத்தப்பட்டுள்ளதால், ஸ்கூட்டர் ட்ராபிக் மற்றும் இதர இடங்களில் நிற்கும்போது தானாக என்ஜின் ஆஃப் ஆகிவிடும். இந்த ஸ்கூட்டரின் என்ஜின் உள்ளிட்ட இதர பாகங்கள் குறித்த முழுமையான தகவலை அறிய கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.

இந்தியாவில் தற்போதைக்கு விற்பனைக்கு கிடைக்கும் பிஎஸ்6 பைக்குகள் இவைதான்...

டிவிஎஸ் ஜூபிடர் கிளாசிக் பிஎஸ்6

டிவிஎஸ் நிறுவனத்தில் இருந்து சில தினங்களுக்கு முன்பு தான் பிஎஸ்6-க்கு இணக்கமாக110சிசி என்ஜினுடன் ஜூபிடர் ஸ்கூட்டரின் கிளாசிக் வேரியண்ட் அறிமுகமானது. இடி-எஃப்ஐ தொழிற்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டரின் விலை இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.67,911ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆக்டிவாவை போல் இந்த ஸ்கூட்டரும் பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்தப்பட்டுள்ளதால் எரிபொருளின் திறன் 15 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிவிஎஸ் நிறுவனம் கூறியுள்ளது.

இந்தியாவில் தற்போதைக்கு விற்பனைக்கு கிடைக்கும் பிஎஸ்6 பைக்குகள் இவைதான்...

ஜூபிடரின் இந்த பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்பட்ட கிளாசிக் வேரியண்ட் பயணம் செய்வதற்கு சவுகரியமாகவும் எரிபொருளில் சிக்கனமாகவும் இருக்கும் என டிவிஎஸ் நிறுவனத்தின் முதன்மை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இந்த பைக் குறித்து மேலும் தெரிந்துகொள்ள கீழேயுள்ள லிங்கை உபயோகிக்கலாம்.

இந்தியாவில் தற்போதைக்கு விற்பனைக்கு கிடைக்கும் பிஎஸ்6 பைக்குகள் இவைதான்...

ஹீரோ ஸ்பிளென்டர் ஐ-ஸ்மார்ட் பிஎஸ்6

பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்பட்ட ஸ்பிளென்டர் ஐ-ஸ்மார்ட் பைக்கை இந்த மாத துவக்கத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. ஃப்யுல் இன்ஜெக்‌ஷனுடன் அறிமுகமான இந்த பைக் ரூ.64,900 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பிஎஸ்6 மாற்றத்தால் வெளிப்புற ஃப்ரேம் தோற்றத்தில் சில அப்டேட்களை கொண்டுள்ள இந்த பைக்கிலும் ஐடியல் ஸ்டார்ட் ஸ்டாப் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போதைக்கு விற்பனைக்கு கிடைக்கும் பிஎஸ்6 பைக்குகள் இவைதான்...

மேலும் இந்த பைக்கின் என்ஜினும் 10 சதவீதம் கூடுதலாக டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. அதேபோல் சஸ்பென்ஷன் மற்றும் வீல்பேஸ்களிலும் கூடுதல் அளவுகளில் அறிமுகமாகியுள்ள இந்த பிஎஸ்6 பைக்கை பற்றி விரிவாக தெரிந்துகொள்ள கீழேயுள்ள லிங்கை அழுத்தவும்.

இந்தியாவில் தற்போதைக்கு விற்பனைக்கு கிடைக்கும் பிஎஸ்6 பைக்குகள் இவைதான்...

யமஹா எஃப்இசட் பிஎஸ்6 மற்றும் எஃப்இசட் எஸ் பிஎஸ்6

இந்தியாவில் பிஎஸ்6 தரத்தில் அறிமுகம் செய்யப்பட்ட முதல் மோட்டார்சைக்கிள்களாக விளங்கும் யமஹா நிறுவனத்தின் எஃப்இசட் மற்றும் எஃப்இசட் எஸ் பைக்குகள் இந்திய எக்ஸ்ஷோரூமில் முறையே ரூ.96,680 மற்றும் ரூ.98,680-க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

இந்தியாவில் தற்போதைக்கு விற்பனைக்கு கிடைக்கும் பிஎஸ்6 பைக்குகள் இவைதான்...

முழுவதும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், எல்இடி ஹெட்லைட்ஸ், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் என பல புதிய தொழிற்நுட்பங்களை இந்த பிஎஸ்6 பைக்குகளில் பொருத்தியுள்ள யமஹா நிறுவனம் இவ்விரு பைக்குகளிலும் அதே 149சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜினை பிஎஸ்4 பைக்குகளில் இருந்து தொடர்ந்துள்ளது. இந்த பிஎஸ்6 பைக்குகள் குறித்த முழுமையாக அறிய கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.

இந்தியாவில் தற்போதைக்கு விற்பனைக்கு கிடைக்கும் பிஎஸ்6 பைக்குகள் இவைதான்...

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பிஎஸ்6 மற்றும் ஆர்டிஆர் 200 4வி பிஎஸ்6

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் ஜூபிடர் பைக்குடன் சில நாட்களுக்கு முன்பு தான் இந்த அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி மற்றும் ஆர்டிஆர் 200 4வி பைக்குகளை அறிமுகப்படுத்தியிருந்தது. ஃப்யுல் இன்ஜெக்‌ஷன் தொழிற்நுட்பத்தை இந்த இரு பைக்குகளிலும் பயன்படுத்தியுள்ள இந்நிறுவனம் இவற்றின் இந்திய எக்ஸ்ஷோரூம் விலைகளை முறையே ரூ.1.03 லட்சம் மற்றும் ரூ.1.24 லட்சம் என நிர்ணயித்துள்ளது. இவ்விரு பைக்குகளின் இந்திய அறிமுகம் குறித்து அறிய கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தலாம்.

இந்தியாவில் தற்போதைக்கு விற்பனைக்கு கிடைக்கும் பிஎஸ்6 பைக்குகள் இவைதான்...

ஜாவா பெராக் பிஎஸ்6

ஜாவா நிறுவனத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய சந்தையில் அறிமுகமான மோட்டார்சைக்கிளாக ஜாவா பெராக் பிஎஸ்6 மாடல் விளங்குகிறது. வட்ட வடிவிலான ஹெட்லைட்ஸ், ட்வின்-எக்ஸாஸ்ட், பார்-எண்ட் மிரர்ஸ், சிங்கிள் சீட் மற்றும் பைக்கிற்கு மிகவும் அடிப்பகுதியில் பொருத்தப்பட்ட இண்டிக்கேட்டர் என பல சிறப்பம்சங்களை கொண்டுள்ள இந்த பிஎஸ்6 பைக் 343சிசி என்ஜினுடன் இயங்கவுள்ளது. இதன் விலை குறித்த தகவல்களை அறிய கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தலாம்.

இந்தியாவில் தற்போதைக்கு விற்பனைக்கு கிடைக்கும் பிஎஸ்6 பைக்குகள் இவைதான்...

இவற்றை தவிர இந்திய ஆட்டோமொபைல் துறையில் கேடிஎம், ராயல் எண்ட்பீல்டு போன்ற மேலும் சில நிறுவனங்களும் விரைவில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்தவுள்ளன. இவற்றின் விலைகள் எவ்வாறு மாற்றமடையவுள்ளன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Most Read Articles
மேலும்... #ஆட்டோ #auto news
English summary
List Of BS6 Compliant Two-Wheelers In India
Story first published: Thursday, November 28, 2019, 20:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X