கேக்கும்போதே கண்ண கட்டுதே... பிஎஸ்-6 விதிகளால் டிவிஎஸ் டூவீலர்கள் விலை எவ்வளவு உயர்கிறது தெரியுமா?

பிஎஸ்-6 விதிகள் காரணமாக, டிவிஎஸ் நிறுவன டூவீலர்களின் விலை எவ்வளவு உயரவுள்ளது? என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கேக்கும்போதே கண்ண கட்டுதே... பிஎஸ்-6 விதிகளால் டிவிஎஸ் டூவீலர்கள் விலை எவ்வளவு உயர்கிறது தெரியுமா?

இந்தியாவில் மிகவும் கடுமையான பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. எனவே வாகன உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் மாடல்களை பிஎஸ்-6 விதிகளுக்கு ஏற்ப தற்போது மேம்படுத்தி வருகின்றன. பிஎஸ்-6 விதிமுறைகள் காரணமாக வாகனங்களின் விலை கணிசமாக உயரவுள்ளது.

கேக்கும்போதே கண்ண கட்டுதே... பிஎஸ்-6 விதிகளால் டிவிஎஸ் டூவீலர்கள் விலை எவ்வளவு உயர்கிறது தெரியுமா?

இந்த சூழலில், டிவிஎஸ் வாகனங்களின் விலை எவ்வளவு உயரவுள்ளது? என்பது தொடர்பான தகவல்கள் சில ஆவணங்கள் மூலமாக தற்போது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக டீம்-பிஎச்பி செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 (TVS Apache RR 310) ஸ்போர்ட்ஸ் பைக்கின் விலை 38,870 ரூபாய் உயரவுள்ளதாக கூறப்படுகிறது.

கேக்கும்போதே கண்ண கட்டுதே... பிஎஸ்-6 விதிகளால் டிவிஎஸ் டூவீலர்கள் விலை எவ்வளவு உயர்கிறது தெரியுமா?

இது தற்போது விற்பனையில் உள்ள பிஎஸ்-4 மாடலுடன் ஒப்பிடுகையில் 20 சதவீதம் அதிகமாகும். இந்த விலை உயர்வானது வரும் ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அன்றைய தினம்தான் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 ஸ்போர்ட்ஸ் பைக்கின் பிஎஸ்-6 வெர்ஷன் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேக்கும்போதே கண்ண கட்டுதே... பிஎஸ்-6 விதிகளால் டிவிஎஸ் டூவீலர்கள் விலை எவ்வளவு உயர்கிறது தெரியுமா?

அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கை போலவே, டிவிஎஸ் நிறுவனத்தின் மற்ற ஸ்கூட்டர்கள் மற்றும் டூவீலர்களின் விலையும் கணிசமாக உயரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், குறைந்தபட்ச விலை உயர்வை பெற இருப்பது டிவிஎஸ் எக்ஸ்எல்100 மொபட்தான். அதன் விலை 7,450 ரூபாய் உயரக்கூடும் என கூறப்படுகிறது.

கேக்கும்போதே கண்ண கட்டுதே... பிஎஸ்-6 விதிகளால் டிவிஎஸ் டூவீலர்கள் விலை எவ்வளவு உயர்கிறது தெரியுமா?

டிவிஎஸ் நிறுவனத்தின் பெரும்பாலான மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் 8,000 முதல் 10,000 ரூபாய் வரை விலை உயர்வை சந்திக்கவுள்ளன. அதிகப்படியான விலை உயர்வை காண இருப்பது அப்பாச்சி வரிசை மோட்டார்சைக்கிள்கள்தான். இதன் ஒரு பகுதியாகதான் ஆர்ஆர்310 இருக்கிறது. நீங்கள் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கை வாங்க திட்டமிட்டிருந்தால், தற்போதே வாங்கி விடுவது நல்லது.

கேக்கும்போதே கண்ண கட்டுதே... பிஎஸ்-6 விதிகளால் டிவிஎஸ் டூவீலர்கள் விலை எவ்வளவு உயர்கிறது தெரியுமா?

அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் டிவிஎஸ் நிறுவனத்தின் முதன்மையான மாடல்களில் ஒன்றாக உள்ளது. இதில், 313 சிசி, 4 ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 34 பிஎச்பி பவர் மற்றும் 28 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. இந்த பைக்கில் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது.

கேக்கும்போதே கண்ண கட்டுதே... பிஎஸ்-6 விதிகளால் டிவிஎஸ் டூவீலர்கள் விலை எவ்வளவு உயர்கிறது தெரியுமா?

இந்தியாவில் விற்பனை செய்வதுடன் மட்டுமல்லாது அப்பாச்சி ஆர்ஆர் 310 ஸ்போர்ட்ஸ் பைக்கை டிவிஎஸ் நிறுவனம் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான மோட்டார்சைக்கிள்களில் ஒன்றாக டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 திகழ்கிறது.

கேக்கும்போதே கண்ண கட்டுதே... பிஎஸ்-6 விதிகளால் டிவிஎஸ் டூவீலர்கள் விலை எவ்வளவு உயர்கிறது தெரியுமா?

பிஎஸ்-6 விதிமுறைகள் காரணமாக அனைத்து நிறுவனங்களின் வாகனங்கள் விலையும் கணிசமாக உயர உள்ளது. கார்களை பொறுத்தவரை, பெட்ரோல் மாடல்களை காட்டிலும் டீசல் மாடல்களின் விலைதான் அதிகமாக உயரவுள்ளது. இந்த விலை உயர்வை நீங்கள் தவிர்க்க விரும்பினால், தற்போதே பிஎஸ்-4 மாடல்களை வாங்கி விடுவது நல்லது.

Image Source: Team bhp

Most Read Articles
English summary
BS6 TVS Motorcycles, Scooters Price Hike Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X