பிரபலங்கள் வைத்திருக்கும் ராயல் எண்ட்பீல்டு பைக்குகள் உண்மையில் எப்படிப்பட்டவை தெரியுமா?

ராயல் எண்ட்பீல்டின் மோட்டார்சைக்கிள்களை யாருக்கு தான் பிடிக்காது. பழைய மோட்டார்சைக்கிள் ப்ராண்டாக கம்பீரமாக திகழும் ராயல் எண்ட்பீல்டு பைக்குகளின் தனிப்பெரும் அடையாளமே அதன் டிசைன் மற்றும் சைலென்சர் சப்தம் தான்.

பிரபலங்கள் வைத்திருக்கும் ராயல் எண்ட்பீல்டு பைக்குகள் உண்மையில் எப்படிப்பட்டவை தெரியுமா?

சாலையில் அவற்றை விட விலையுயர்ந்த 100 மோட்டார்சைக்கிள்களுக்கு மத்தியில் வந்தாலும் அங்கு ராயல் எண்ட்பீல்டு பைக்கை தான் அனைவரும் அதன் சத்தத்தால் ஒரு நிமிடம் உற்று பார்ப்பார்கள். இந்தியாவிலேயே அதிகம் மாற்றியமைக்கப்படும் பைக்குகளுள் ஒன்றாக திகழும் ராயல் எண்ட்பீல்டு சாதாரண வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்லாமல் சமுதாயத்தில் விஐபிகளாக திகழுப்பவர்களுக்கும் பிடித்த வாகனமாக உள்ளது.

அந்த வகையில் ராயல் எண்ட்பீல்டு பைக்குகளை வைத்திருக்கும் பிரபலங்களை பற்றியும் அவர்கள் வைத்திருக்கும் ராயல் எண்ட்பீல்டு பைக்குகளை பற்றியும் இந்த செய்தியில் பார்ப்போம்.

பிரபலங்கள் வைத்திருக்கும் ராயல் எண்ட்பீல்டு பைக்குகள் உண்மையில் எப்படிப்பட்டவை தெரியுமா?

வருண் தவான்

தற்போதைய இளம் தலைமுறையின் கனவு நாயகனாக இருக்கும் வருண் தவானிடமும் விலையுயர்ந்த ராயல் எண்ட்பீல்டு பைக் உள்ளது. இவரிடம் உள்ள பச்சை நிற ராயல் எண்ட்பீல்டு ஆலிவ் புல்லட் 500 பைக்கும் முழுவதும் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்ட பைக்காகும். இந்த பைக்கின் என்ஜினுடன் கியர்பாக்ஸ், க்ளட்ச் போன்ற முக்கிய பாகங்கள் அனைத்தும் ஒருக்கிணைக்கப்பட்டு கட்டமைக்கப்பட்டு உள்ளது.

பிரபலங்கள் வைத்திருக்கும் ராயல் எண்ட்பீல்டு பைக்குகள் உண்மையில் எப்படிப்பட்டவை தெரியுமா?

ஜாக்கி ஷெரூப்

புகைப்படத்தில் காட்டப்பட்டுள்ள ராயல் எண்ட்பீல்டு மோட்டார்சைக்கிளின் உரிமையாளர் வேறுயாரும் இல்லை பிரபல பாலிவுட் நடிகரும் விஜய்யின் பிகில் பட வில்லனுமான ஜாக்கி ஷெராஃப் தான். இவரது இந்த ராயல் எண்ட்பீல்டு பைக் முதலில் வழக்கமான பைக்கின் தோற்றத்தில் தான் காட்சியளித்தது.

பிரபலங்கள் வைத்திருக்கும் ராயல் எண்ட்பீல்டு பைக்குகள் உண்மையில் எப்படிப்பட்டவை தெரியுமா?

ஆனால் வாங்கிய பின்னர் ஷெராஃப் இதனை வர்தேஞ்சி கஸ்டம்ஸ் நிறுவனம் மூலம் இவ்வாறு மாற்றியமைத்துள்ளார். ஸ்கெலிடர் என அழைக்கப்படும் இந்த மோட்டார்சைக்கிள் தான் இந்தியாவில் அதிகளவில் மாற்றியமைக்கப்பட்ட ராயல் எண்ட்பீல்டு மோட்டார்சைக்கிள் ஆகும். ஆனால் இந்த பைக்கை சாலையில் ஓட்டி செல்ல ஜாக்கி ஷெரூப்பிற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

பிரபலங்கள் வைத்திருக்கும் ராயல் எண்ட்பீல்டு பைக்குகள் உண்மையில் எப்படிப்பட்டவை தெரியுமா?

மோகன்லால்

மலையாள நடிகர் மோகன்லாலிடமும் ராயல் எண்ட்பீல்டு பைக் உள்ளது. 500சிசி என்ஜினுடன் உள்ள இந்த பைக் மற்ற 500சிசி ராயல் என்ட்பீல்டு பைக்குகளை போன்று வழங்கமான என்ஜின் அமைப்பையே கொண்டுள்ளது. இந்த பைக்கின் 500சிசி என்ஜின் 27.2 பிஎச்பி பவரையும் 41.3 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.

பிரபலங்கள் வைத்திருக்கும் ராயல் எண்ட்பீல்டு பைக்குகள் உண்மையில் எப்படிப்பட்டவை தெரியுமா?

ஜான் ஆபிரகாம்

கார்கள் மற்றும் பைக்குகளை அதிகம் விரும்பும் பாலிவுட் நடிகர்களில் ஒருவரான ஜான் ஆபிரகாம், தனது வாகன சேகரிப்புகளில் நிஸான் ஜிடி-ஆர், லம்போர்கினி கல்லார்டோ மற்றும் யமஹா ஆர்டி350 என பல வாகனங்களை வைத்துள்ளார்.

பிரபலங்கள் வைத்திருக்கும் ராயல் எண்ட்பீல்டு பைக்குகள் உண்மையில் எப்படிப்பட்டவை தெரியுமா?

இவற்றுடன் ராயல் எண்ட்பீல்டின் முழுவதும் தனிப்பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட லைட்ஃபுட் என அழைக்கப்படும் மோட்டார்சைக்கிளுக்கும் ஜான் ஆபிரகாம் உரிமையாளராக திகழ்கிறார். இந்த லைட்ஃபுட், ராஜ்புத்னா கஸ்டமைஸ் நிறுவனத்தால் மாற்றியமைக்கப்பட்ட மோட்டார்சைக்கிள் ஆகும்.

Most Read:வெறும் 99,000 ரூபாய்க்கு பிஎஸ்6-க்கு அப்டேட்டான யமஹா எஃப்இசட் பைக்குகள் அறிமுகம்...

பிரபலங்கள் வைத்திருக்கும் ராயல் எண்ட்பீல்டு பைக்குகள் உண்மையில் எப்படிப்பட்டவை தெரியுமா?

குல் பனாக்

மற்றொரு சினிமா நட்சத்திரமான குல் பனாக் பாலிவுட்டில் பிரபல நடிகை ஆவார். முழுவதும் மாற்றியமைக்கப்பட்ட மஹிந்திரா ஸ்கார்பியோ கேட்வே காரின் மூலம் ஆட்டோமொபைல் பிரியர்களிடமும் பிரபலமான இவரது தேர்வுகளில் பல முன்னணி நிறுவனங்களின் விலையுயர்ந்த கார்களும் பைக்குகளும் உள்ளன.

பிரபலங்கள் வைத்திருக்கும் ராயல் எண்ட்பீல்டு பைக்குகள் உண்மையில் எப்படிப்பட்டவை தெரியுமா?

ஆனால் இவர் அடிக்கடி நெட்டிசன்களிடம் சிக்குவது ராயல் எண்ட்பீல்டின் புல்லட் எலக்ட்ரா 350 பைக்கில் சாலையில் பயணம் செய்யும் போது தான். குல் பனாக்கின் இந்த புல்லட் எலக்ட்ரா 350 பைக், ராயல் எண்ட் பீல்ட் நிறுவனத்தால் இரும்பு என்ஜின் பொருத்தப்பட்ட பைக்காகும்.

Most Read:மக்களுடன் மக்களாக பஸ்ஸில் டிக்கெட் எடுத்து பயணித்த ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்... ஏன் தெரியுமா?

பிரபலங்கள் வைத்திருக்கும் ராயல் எண்ட்பீல்டு பைக்குகள் உண்மையில் எப்படிப்பட்டவை தெரியுமா?

நானா படேகர்

பாலிவுட்டில் நடிகராக வலம்வந்து தற்போது பாலிவுட் மட்டும் அல்லாமல் மற்ற மொழி சினிமாக்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் நானா படேகர். இவருக்கு ராயல் எண்ட்பீல்டு பைக் என்றால் அலாதி பிரியம்.

பிரபலங்கள் வைத்திருக்கும் ராயல் எண்ட்பீல்டு பைக்குகள் உண்மையில் எப்படிப்பட்டவை தெரியுமா?

பல முறை இவர் தனது ராயல் எண்ட்பீல்டு டிசர்ட் பைக்கில் நகரத்திற்கு வெளியே வலம் வந்துள்ளதை பலரும் பார்த்துள்ளனர். இவரது இந்த ராயல் எண்ட்பீல்டு டிசர்ட் பைக்கை ஓட்டுவது என்பது மிகவும் கடினமான செயல் ஆகும்.

Most Read:யமஹாவின் 2020 ட்ரஸர் 700 பைக் ஐக்மா கண்காட்சியில் அறிமுகமானது...

பிரபலங்கள் வைத்திருக்கும் ராயல் எண்ட்பீல்டு பைக்குகள் உண்மையில் எப்படிப்பட்டவை தெரியுமா?

ஆதித்யா ராய் கபூர்

ஆஷிகுய் 2 படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகர், ஆதித்யா ராய் கபூர். இவரது செலக்‌ஷனில், பல முக்கிய பாகங்கள் அனைத்தும் ஒருக்கிணைக்கப்பட்ட என்ஜின்களை கொண்ட மோட்டார்சைக்கிள்களே அதிகம் உள்ளன. இவர் ஏவிஎல் என்ஜின் பொருத்தப்பட்ட மாஷிஸ்மோ 500 மற்றும் 500சிசி ராயல் எண்ட்பீல்டின் உரிமையாளரும் கூட.

பிரபலங்கள் வைத்திருக்கும் ராயல் எண்ட்பீல்டு பைக்குகள் உண்மையில் எப்படிப்பட்டவை தெரியுமா?

ஜாண்டி ரோட்ஸ்

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்தவர் ஜாண்டி ரோட்ஸ். தென் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த இவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்பும் ஐபிஎல்லின் மூலம் இந்திய ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர்.

பிரபலங்கள் வைத்திருக்கும் ராயல் எண்ட்பீல்டு பைக்குகள் உண்மையில் எப்படிப்பட்டவை தெரியுமா?

ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக பணியாற்றிய சமயத்தில் இந்தியா வந்த இவர், புதிதாக இந்தியாவில் வாங்கிய ராயல் எண்ட்பீல்டின் கிளாசிக் 500 பைக்கில் உற்சாகமாக வலம் வந்துள்ளார். இந்தியா மீது அதிக அன்பு கொண்ட ஜாண்டி ரோட்ஸ், தனது மகளுக்கு இந்தியா என பெயர் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read:உலகிலேயே அபாயகரமானது... இந்திய சாலைகளில் மறைந்திருக்கும் இந்த ஆபத்துக்கள் உங்களுக்கு தெரியுமா?

பிரபலங்கள் வைத்திருக்கும் ராயல் எண்ட்பீல்டு பைக்குகள் உண்மையில் எப்படிப்பட்டவை தெரியுமா?

ப்ராட் பிட்

ஹாலிவுட்டின் சூப்பர் ஸ்டார்களுள் ஒருவராக விளங்கும் ப்ராட் பிட்-ஐ பற்றி நான் கூற வேண்டும் என அவசியமில்லை. பல இளம் பெண்களின் கனவு நாயகனாக உள்ள இவருக்கும் மோட்டார்சைக்கிள்களின் மீது அப்படியொரு பைத்தியம்.

பிரபலங்கள் வைத்திருக்கும் ராயல் எண்ட்பீல்டு பைக்குகள் உண்மையில் எப்படிப்பட்டவை தெரியுமா?

இவர் ராயல் எண்ட்பீல்டின் பழமையான பைக் மாடல்களையும் வைத்துள்ளார் என்பது பழமையான மோனோகிராம் பொருத்தப்பட்ட ராயல் எண்ட்பீல்டு பைக்கில் இவர் அமர்ந்திருக்கும் மேலேயுள்ள புகைப்படத்தை பார்த்தாலே தெரிய வருகிறது. மேலும் இவர் இந்த பைக்கில் தான் பல முறை சாலையில் காட்சி அளித்துள்ளார்.

Most Read:உருப்படியான விஷயம்... மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா?

பிரபலங்கள் வைத்திருக்கும் ராயல் எண்ட்பீல்டு பைக்குகள் உண்மையில் எப்படிப்பட்டவை தெரியுமா?

இவர்களை தவிர தமிழ் சினிமா நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித், விஜய் போன்றோரும் ராயல் எண்ட்பீல்டு மோட்டார்சைக்கிள்களை சொந்தமாக வைத்துள்ளனர். அந்த பைக்குகளை அவர்கள் பல முறை தங்களது படங்களிலும் பயன்படுத்தியுள்ளனர். மிகவும் பழமையான ப்ராண்ட் மாடலாக உள்ள ராயல் எண்ட்பீல்டு தற்போதைய இளம் நடிகர்களின் விருப்பமாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது. அடுத்து பாலிவுட் நடிகர்களின் பேன்ஸி நம்பர் குறித்த சில ரகசியங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
FAMOUS people who ride Royal Enfields
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more