சிஎஃப் மோட்டோ - கேடிஎம் பைக்குகளுக்கு இடையிலான பந்தம்!

சீனாவில் இணைந்து செயல்படும் சிஎஃப் மோட்டோ- கேடிஎம் கூட்டணி இந்தியாவில் எதிரி நிறுவனங்களாக செயல்பட இருக்கின்றன. அதன் விபரங்களை காணலாம்.

சிஎஃப் மோட்டோ - கேடிஎம் பைக்குகளுக்கு இடையிலான ரத்த பந்தம்!

சீனாவை சேர்ந்த சிஎஃப் மோட்டோ நிறுவனம் விரைவில் தனது புதிய ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில், சிஎஃப் மோட்டோ பைக்குகளின் ஸ்டைல் நம் நாட்டு இளைஞர்களை கவர்ந்த கேடிஎம் ட்யூக் வரிசை மாடல்களை ஒட்டி இருப்பது குறித்து பேச்சுக்கள் எழுந்தன.

சிஎஃப் மோட்டோ - கேடிஎம் பைக்குகளுக்கு இடையிலான ரத்த பந்தம்!

இந்த நிலையில், இரு நிறுவனங்களும் மிக நெருங்கிய ரத்த பந்தத்தை கொண்டிருப்பது பலருகும் தெரியாத விஷயம். 1989ம் ஆண்டு சீனாவை சேர்ந்த சிஎஃப் மோட்டோ வாகன உற்பத்தி நிறுவனம் துவங்கப்பட்டது. இந்த நிறுவனம் 100க்கும் மேற்பட்ட வாகனங்களையும், 51 வகையான எஞ்சின்களையும் இதுவரை தயாரித்த பாரம்பரியம் கொண்டது.

சிஎஃப் மோட்டோ - கேடிஎம் பைக்குகளுக்கு இடையிலான ரத்த பந்தம்!

குறிப்பாக, ஏடிவி எனப்படும் ஆல்டெர்ரெயின் வெஹிக்கிள் ரக வாகனங்களை வடிவமைப்பதில் பிரபலமானது. இதுதவிர, ஏராளமான மோட்டார்சைக்கிள் மாடல்களையும் இதுவரை உருவாக்கி விற்பனை செய்து வருகிறது.

சிஎஃப் மோட்டோ - கேடிஎம் பைக்குகளுக்கு இடையிலான ரத்த பந்தம்!

இந்த நிலையில், கடந்த ஆண்டு சிஎஃப் மோட்டோ நிறுவனத்துடன் கைகோர்த்து சீன வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது கேடிஎம் நிறுவனம். மேலும், கேடிஎம் நிறுவனத்தின் 790 ட்யூக் பைக்கில் பயன்படுத்தப்பட இருக்கும் புதிய எல்சி8 என்ற எஞ்சினை சிஎஃப் மோட்டோதான் உருவாக்கி இருக்கிறது.

சிஎஃப் மோட்டோ - கேடிஎம் பைக்குகளுக்கு இடையிலான ரத்த பந்தம்!

கேடிஎம் நிறுவனத்தின் 999சிசி வி ட்வின் எஞ்சின் மற்றும் 990 சீரிஸ் மோட்டார்சைக்கிள்களை உற்பத்தி செய்வதற்கும் கேடிஎம் நிறுவனத்திடமிருந்து உரிமை பெற்றுள்ளது. சீனாவில் விற்பனை செய்யப்படும் கேடிஎம் 200 மற்றும் 390 பைக்குகளுக்கான முக்கிய பாகங்கள் சிஎஃப் மோட்டோ நிறுவனத்தின் ஹாங்சூ ஆலையில்தான் அசெம்பிள் செய்து சீனாவில் விற்பனை செய்யப்படுகிறது.

சிஎஃப் மோட்டோ - கேடிஎம் பைக்குகளுக்கு இடையிலான ரத்த பந்தம்!

இந்த நிலையில், தனது ஆர்ப்பரிக்கும் ஸ்டைலிலான பைக்குகளை இந்திய மார்க்கெட்டில் மிக விரைவில் அறிமுகப்படுத்த ஆயத்தமாகி வருகிறது சிஎஃப் மோட்டோ. தனது என்கே250 பைக் முதல் 650சிசி திறன் வரையிலான எஞ்சின் பொருத்தப்பட்ட பைக்குகளை இந்தியாவில் அறிமுகப்படுத்த சிஎஃப் மோட்டோ திட்டமிட்டுள்ளது.

சிஎஃப் மோட்டோ - கேடிஎம் பைக்குகளுக்கு இடையிலான ரத்த பந்தம்!

ஆனாலும், இந்தியாவில் கேடிஎம் நிறுவனத்துடன் இணைந்து செயல்படாது என்பது தெரியவந்துள்ளது. ஏஎம்டபிள்யூ நிறுவனத்துடன் இணைந்து இந்திய சந்தையில் தனி ஆவர்த்தனம் செய்யவே சிஎஃப் மோட்டோ திட்டமிட்டுடள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, கேடிஎம் பைக்குகளுக்கு போட்டியாக சிஎஃப் மோட்டோ பைக்குகள் வர இருக்கின்றன.

Most Read Articles
English summary
CF Moto Eyes On KTM Bike Market In India
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X