இடர்கள் பல கண்டாலும், விடா முயிற்சி எடுக்கும் சீன நிறுவனம்... 4 புதிய மாடல் பைக்குகள் நாளை அறிமுகம்!

பல இடர்களைத் தாண்டி, ஒன்றல்ல, இரண்டல்ல ஒட்டுமொத்தமாக ஒரே நாளில் நான்கு மாடல் மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகம் செய்யும் சிஎஃப் மோட்டோ நிறுவனம். கூடுதல் சிறப்பு தகவலை இந்த பதிவில் காணலாம்.

இடர்கள் பல கண்டாலும், விடா முயிற்சி எடுக்கும் சீன நிறுவனம்... 4 புதிய மாடல் பைக்குகள் நாளை அறிமுகம்...!

சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் சிஎஃப் மோட்டோ நிறுவனம், இந்தியாவில் கால் தடம் பதிக்க, தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகின்றது.

அந்தவகையில், இந்தியாவில் ஒன்றல்ல, இரண்டல்ல ஒட்டுமொத்தமாக ஒரே நாளில் நான்கு மாடல் மோட்டார்சைக்கிள்களை அந்நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இவையனைத்தும், அந்நிறுவனத்தின் புகழ்வாய்ந்த மாடல்களாக இருக்கின்றன.

இடர்கள் பல கண்டாலும், விடா முயிற்சி எடுக்கும் சீன நிறுவனம்... 4 புதிய மாடல் பைக்குகள் நாளை அறிமுகம்...!

அதேசமயம், சர்வதேச சந்தையில் இந்த பைக்குகளுக்கு நல்ல எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இதன்கராணமாகவே, இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த நான்கு பைக்குகளை களமிறக்க சிஎஃப் மோட்டோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இடர்கள் பல கண்டாலும், விடா முயிற்சி எடுக்கும் சீன நிறுவனம்... 4 புதிய மாடல் பைக்குகள் நாளை அறிமுகம்...!

அவ்வாறு, சிஎஃப் நிறுவனம், அதன் பிரபல மாடல்களான ஸ்ட்ரீட் ஃபைட்டர் ரகத்தில் காட்சியளிக்கும் 300என்கே மற்றும் 650 என்கே மாடலையும், டூரிங் ரகத்திலான 650ஜிடி மற்றும் 650எம்டி ஆகிய மாடல்களையும் அந்நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.

இடர்கள் பல கண்டாலும், விடா முயிற்சி எடுக்கும் சீன நிறுவனம்... 4 புதிய மாடல் பைக்குகள் நாளை அறிமுகம்...!

சிஎஃப் நிறுவனம், அதன் பைக்குகளின் அறிமுகம்குறித்த தகவலை வெளியிடுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாக, மூன்று முறைக்கும் மேலாக, அறிவிப்பு குறித்த தகவல் வெளியிடப்பட்டு, பின்னர் திரும்பப் பெறப்பட்டது.

இடர்கள் பல கண்டாலும், விடா முயிற்சி எடுக்கும் சீன நிறுவனம்... 4 புதிய மாடல் பைக்குகள் நாளை அறிமுகம்...!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

அவ்வாறு, ஒவ்வொரு முறையும் களமிறங்கும்போது, அந்நிறுவனம் பல்வேறு தடைகளைச் சந்தித்துள்ளது. அந்தவகையில், முன்னதாக களமிறங்கியபோது, சிஎஃப் மோட்டோ நிறுவனம் கூட்டணி வைத்த நிறுவனம், போலியானது என அறிவிக்கப்பட்டதன் காரணமாக, முதல் முறை பின்வாங்கியது. பின்னர், கடந்த முறை மும்பை பெருவெள்ளத்தின் காரணமாக பின் வாங்கப்பட்டது.

இடர்கள் பல கண்டாலும், விடா முயிற்சி எடுக்கும் சீன நிறுவனம்... 4 புதிய மாடல் பைக்குகள் நாளை அறிமுகம்...!

இவ்வாறு, தொடர் இடர்பாடுகளைச் சந்தித்து வரும் சிஎஃப் நிறுவனம், அவை எதையும் கண்டுகொல்லாமல் இந்தியாவில் கால் தடம் பதிப்பதில் விடா முயற்சியை எடுத்து வருகின்றது. அந்தவகையில், நாளை (ஜூலை 19) அதன் நான்கு புத்தம் புதிய மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளன.

இடர்கள் பல கண்டாலும், விடா முயிற்சி எடுக்கும் சீன நிறுவனம்... 4 புதிய மாடல் பைக்குகள் நாளை அறிமுகம்...!

மேலும், இந்த பைக்குகள் முதற்கட்டமாக இந்தியாவின் முக்கிய நகரங்களான பெங்களூரு, ஹைதராபாத், கொச்சின், மும்பை, கோவா மற்றும் புனே உள்ளிட்ட நகரங்களிலேயே விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றது. இதற்கான ஷோரூம்கள் மற்றும் டீலர்கள் ஏற்கனவே நிறுவப்பட்டுவிட்டதாக கூறப்படுகின்றது.

இடர்கள் பல கண்டாலும், விடா முயிற்சி எடுக்கும் சீன நிறுவனம்... 4 புதிய மாடல் பைக்குகள் நாளை அறிமுகம்...!

இருப்பினும், அதிகாரப்பூர்வமான அறிமுகத்திற்கு பின்னரே, அந்த ஷோரூம்களில் சிஎஃப் மோட்டோ நிறுவனத்தின் பைக்குகள் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றன.

அதேசமயம், இம்முறை, இந்தியாவைச் சேர்ந்த ஏஎம்டபிள்யூ நிறுவனத்துடன் இணைந்து அந்நிறுவனம், அதன் தயாரிப்புகளை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.

இடர்கள் பல கண்டாலும், விடா முயிற்சி எடுக்கும் சீன நிறுவனம்... 4 புதிய மாடல் பைக்குகள் நாளை அறிமுகம்...!

மேலும், இந்த பைக்குகளின் பாகங்கள் சீனாவில் தயார் செய்யப்பட்டு இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட உள்ளது. இறக்குமதி செய்யப்படும் அனைத்து பாகங்களும் ஏஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஹைதராபாத் பிளாண்ட்டில் வைத்து அசெம்பிள் செய்யப்பட்டு, நாடு முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.

இடர்கள் பல கண்டாலும், விடா முயிற்சி எடுக்கும் சீன நிறுவனம்... 4 புதிய மாடல் பைக்குகள் நாளை அறிமுகம்...!

சிஎஃப் நிறுவனம் இந்தியாவில் களமிறக்கும் பைக்குகளிலேயே, மலிவு விலை மாடலாக 300 என்கே இருக்கின்றது. இந்த பைக்கில் 292.4 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர், லிக்யூட் கூல்ட் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக, 34எச்பி பவரையும், 20.5 என் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

இடர்கள் பல கண்டாலும், விடா முயிற்சி எடுக்கும் சீன நிறுவனம்... 4 புதிய மாடல் பைக்குகள் நாளை அறிமுகம்...!

இத்துடன், இந்த பைக்கில் பிரத்யேக வசதியாக ஸ்போர்ட் மற்றும் மழை என்ற இருவிதமான ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், நவீன மற்றும் தொழிற்நுட்ப வசதியாக 300 என்கே மாடலில், டிஎஃப்டி தரத்திலான அனைத்து நிறங்களையும் உள்ளடக்கிய வண்ணத் திரை, எல்இடி ரகத்திலான மின் விளக்குகள் மற்றும் ரியர் வீலுக்கான ஹஃகர் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன.

இடர்கள் பல கண்டாலும், விடா முயிற்சி எடுக்கும் சீன நிறுவனம்... 4 புதிய மாடல் பைக்குகள் நாளை அறிமுகம்...!

தொடர்ந்து களமிறங்கும் 650 என்கே, 650 எம்டி மற்றும் 650 ஜிடி ஆகிய மூன்று பைக்குகளும் உருவத்தில் மாறுபட்டு காணப்பட்டாலும், ஒரே திறன்கொண்ட எஞ்ஜினையே அவை பெற்றிருக்கின்றன.

இடர்கள் பல கண்டாலும், விடா முயிற்சி எடுக்கும் சீன நிறுவனம்... 4 புதிய மாடல் பைக்குகள் நாளை அறிமுகம்...!

அந்தவகையில், 649.3 சிசி திறன் கொண்ட ட்வின் சிலிண்டர், லிக்யூடு கூல்ட் எஞ்ஜினே அந்த பைக்குகளில் காணப்படுகின்றன. மேலும், இந்த எஞ்ஜின் ஒவ்வொரு மாடலிலும், வெவ்வேறு விதமான ட்யூன்-அப்பைப் பெற்றிருக்கின்றது. ஆகையால், மாடல் மாறுபட்டிற்கேற்ப திறனை வெளிப்படுத்தும் வகையில் அது இருக்கின்றது.

இடர்கள் பல கண்டாலும், விடா முயிற்சி எடுக்கும் சீன நிறுவனம்... 4 புதிய மாடல் பைக்குகள் நாளை அறிமுகம்...!

அந்தவகையில், ஸ்ட்ரீட் ஃபைட்டர் ரகத்தில் களமிறங்கும் 650 என்கே பைக்கில், 61 எச்பி பவரையும், 56 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் வகையில் ட்யூன் அப்பைப் பெற்றிருக்கின்றது. அதேபோன்று, டூரிங் ரக மாடலாக உள்ள 650 எம்டி பைக்கில், 70.7 எச்பி பவரையும், 62 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் வகையில் ட்யூன்-அப்பைப் பெற்றுள்ளது.

இடர்கள் பல கண்டாலும், விடா முயிற்சி எடுக்கும் சீன நிறுவனம்... 4 புதிய மாடல் பைக்குகள் நாளை அறிமுகம்...!

அதேபோன்று, 650 ஜிடி பைக்கில் பொருத்தப்பட்டுள்ள அந்த ட்வின் சிலிண்டர் எஞ்ஜின், 62.5 எச்பி பவரையும், 58.5 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைப் பெற்றிருக்கின்றது.

இதில், 650 என்கே மாடல் பைக்கைக் காட்டிலும் சற்று கூடுதல் சிறப்பம்சங்களைக் உள்ளடக்கிய மாடலாக 650 எம்டி பைக் இருக்கின்றது. இந்த பைக்குகளின் விலை குறித்த தகவல் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. அவை, நாளை பைக்குகளின் அறிமுகத்தின்போது வெளியிடப்பட உள்ளது.

Most Read Articles
English summary
CF Moto India Launch Tomorrow. Read In Tamil.
Story first published: Thursday, July 18, 2019, 17:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X