பல போராட்டங்களுக்குபின் ஒரு வழியாக தொடங்கியது புக்கிங்... மகிழ்ச்சியில் சிஎஃப் மோட்டோ!

சிஎஃப் மோட்டோ நிறுவனத்தின் பைக்குகளுக்கு புக்கிங் தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

பல போராட்டங்களுக்குபின் ஒரு வழியாக தொடங்கியது புக்கிங்... மகிழ்ச்சியில் சிஎஃப் மோட்டோ!

அண்மைக் காலமாக இந்திய வாகன சந்தை கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றது. இதனால், பெருவாரியான வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியை கணிசமாக குறைத்து வருகின்றது. மேலும், தற்காலிகமாக பணியாற்றி வந்த ஊழியர்களையும் அந்தந்த நிறுவனங்கள் விடுவித்துவிட்டதாகக் கூறப்படுகின்றது.

பல போராட்டங்களுக்குபின் ஒரு வழியாக தொடங்கியது புக்கிங்... மகிழ்ச்சியில் சிஎஃப் மோட்டோ!

ஒரு காலத்தில், உலகின் அதிவேகமாக வளர்ந்து வரும் வாகன சந்தையாக இருந்த இந்தியா, தற்போது மிகப் பெரிய சரிவைச் சந்தித்துள்ளது.

அந்தவகையில், கடந்த மாதத்தில் மட்டும், டாடா மோட்டார்ஸ் 31 சதவீதமும், ஹோண்டா நிறுவனம் 48 சதவீதமும், மஹிந்திரா நிறுவனம் 16 சதவீதமும், ஹூண்டாய் நிறுவனம் 10 சதவீதமும் விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

பல போராட்டங்களுக்குபின் ஒரு வழியாக தொடங்கியது புக்கிங்... மகிழ்ச்சியில் சிஎஃப் மோட்டோ!

இதனால், கார் உற்பத்தி நிறுவனங்கள் கடுமையான இழப்பை சந்தித்து வருகின்றன. மேலும், இதனை ஈடுகட்டும் விதமாக, ஆட்குறைப்பு நடவடிக்கையை அந்தந்த நிறுவனங்கள் கையாண்டு வருகின்றன.

இவ்வாறு, வாகன உற்பத்தி நிறுவனங்கள் சரிவைக் கண்டு வந்தாலும், ஒரு சில நிறுவனங்கள், அதன் புதிய தயாரிப்புகளை இந்தியாவில் அறமுகம் செய்து வருகின்றது.

பல போராட்டங்களுக்குபின் ஒரு வழியாக தொடங்கியது புக்கிங்... மகிழ்ச்சியில் சிஎஃப் மோட்டோ!

அந்தவகையில், சீனாவைச் சேர்ந்த சிஎஃப் மோட்டோ நிறுவனம், அண்மையில் அதன் நான்கு மாடல் இருசக்கர வாகனங்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

அவ்வாறு, கடந்த மாதம் 19ம் தேதி சிஎஃப் நிறுவனத்தின் ஸ்ட்ரீட் ஃபைட்டர் வரிசையில் 300என்கே மற்றும் 650 என்கே மாடலையும், டூரிங் ரக மாடலில் 650ஜிடி மற்றும் 650எம்டி ஆகிய பைக்குகளும் களமிறக்கப்பட்டன.

பல போராட்டங்களுக்குபின் ஒரு வழியாக தொடங்கியது புக்கிங்... மகிழ்ச்சியில் சிஎஃப் மோட்டோ!

இந்த நிறுவனம், பல்வேறு தடைகளுக்கு பின்னர் இந்த நான்கு பைக்குகளையும் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தகுந்தது.

ரூ. 5000 ஆயிரம் என்ற முன் தொகையில் இந்த பைக்குகளுக்கான ப்ரீ புக்கிங் தற்போது நடைபெற்று வருகின்றது. பைக்குகளை புக் செய்ய ஏஎம்டபிள்யூ மோட்டார்சைக்கிள் இணையதளத்தில் வழி வகைச் செய்யப்பட்டுள்ளது.

பல போராட்டங்களுக்குபின் ஒரு வழியாக தொடங்கியது புக்கிங்... மகிழ்ச்சியில் சிஎஃப் மோட்டோ!

சிஎஃப் மோட்டோ களமிறக்கியிருக்கும் நான்கு மாடல் பைக்குகளும் சர்வதேச சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் மாடல்களாக இருக்கின்றன. இதன்கராணமாகவே, இந்தியாவில் அந்த குறிப்பிட்ட மாடல்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பல போராட்டங்களுக்குபின் ஒரு வழியாக தொடங்கியது புக்கிங்... மகிழ்ச்சியில் சிஎஃப் மோட்டோ!

தற்போது களமிறங்க உள்ள நான்கு மாடல் பைக்குகளின் பாகங்களும் சிகேடி வழியாக இந்தியாவில் களமிறக்கப்பட்டு, அசெம்பிள் செய்யப்பட்டு வருகின்றன. இதனை, ஹைதராபாத்தில் உள்ள ஏஎம்டபிள்யூ நிறுவனத்தின் பிளாணட்டில் வைத்து அந்நிறுவனம் மேற்கொள்ள இருக்கின்றது.

பல போராட்டங்களுக்குபின் ஒரு வழியாக தொடங்கியது புக்கிங்... மகிழ்ச்சியில் சிஎஃப் மோட்டோ!

சிஎஃப் நிறுவனம் இந்தியாவில் களமிறக்கும் பைக்குகளிலேயே, மலிவு விலை மாடலாக 300 என்கே இருக்கின்றது. அவ்வாறு, அதன் விலை ரூ. 2.29 லட்சம் என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று, 650 என்கே பைக்கிற்கு ரூ. 3.99 லட்சமும், 650 எம்டி பைக்கிற்கு ரூ.4.99 லட்சமும், 650 ஜிடி பைக்கிற்கு ரூ. 5.49 லட்சமும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பல போராட்டங்களுக்குபின் ஒரு வழியாக தொடங்கியது புக்கிங்... மகிழ்ச்சியில் சிஎஃப் மோட்டோ!

இதில் மலிவு விலை மாடலான 300என்கே பைக்கில் 292.4 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர், லிக்யூட் கூல்ட் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக, 34எச்பி பவரையும், 20.5 என் டார்க்கையும் வெளிப்படுத்தும். இத்துடன், இந்த பைக்கில் பிரத்யேக வசதியாக ஸ்போர்ட் மற்றும் மழை என்ற இருவிதமான ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன.

பல போராட்டங்களுக்குபின் ஒரு வழியாக தொடங்கியது புக்கிங்... மகிழ்ச்சியில் சிஎஃப் மோட்டோ!

மேலும், நவீன மற்றும் தொழிற்நுட்ப வசதியாக 300 என்கே மாடலில், டிஎஃப்டி தரத்திலான அனைத்து நிறங்களையும் உள்ளடக்கிய வண்ணத் திரை, எல்இடி ரகத்திலான மின் விளக்குகள் மற்றும் ரியர் வீலுக்கான ஹஃகர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

பல போராட்டங்களுக்குபின் ஒரு வழியாக தொடங்கியது புக்கிங்... மகிழ்ச்சியில் சிஎஃப் மோட்டோ!

தொடர்ந்து களமிறங்கும் 650 என்கே, 650 எம்டி மற்றும் 650 ஜிடி ஆகிய மூன்று பைக்குகளிலும் ஒரே திறன்கொண்ட எஞ்ஜினே காணப்படுகின்றது. ஆனால், அவற்றின் தோற்றம் மாறுபட்டு காணப்படுகின்றது.

பல போராட்டங்களுக்குபின் ஒரு வழியாக தொடங்கியது புக்கிங்... மகிழ்ச்சியில் சிஎஃப் மோட்டோ!

ஆகையால், 649.3 சிசி திறன் கொண்ட ட்வின் சிலிண்டர், லிக்யூடு கூல்ட் எஞ்ஜின்தான் மற்ற மூன்று மாடல் பைக்குகளிலும் இடம்பெற்றிருக்கின்றன. மேலும், இந்த எஞ்ஜின் ஒவ்வொரு மாடலிலும், வெவ்வேறு விதமான திறனை வெளிப்படுத்தும் வகையில் ட்யூன் அப்பைப் பெற்றுள்ளது.

பல போராட்டங்களுக்குபின் ஒரு வழியாக தொடங்கியது புக்கிங்... மகிழ்ச்சியில் சிஎஃப் மோட்டோ!

அந்தவகையில், ஸ்ட்ரீட் ஃபைட்டர் ரகத்தில் களமிறங்கும் 650 என்கே பைக்கில், 61 எச்பி பவரையும், 56 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் வகையிலும், 650 எம்டி பைக்கில், 70.7 எச்பி பவரையும், 62 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் வகையில் ட்யூன் அப் செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று, 650 ஜிடி பைக்கில் 62.5 எச்பி பவரையும், 58.5 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் வகையில் திறன் வழங்கப்பட்டுள்ளது.

பல போராட்டங்களுக்குபின் ஒரு வழியாக தொடங்கியது புக்கிங்... மகிழ்ச்சியில் சிஎஃப் மோட்டோ!

தற்போது, புக்கிங் செய்யப்படும் பைக்குகள் அனைத்தும் வருகின்ற அக்டோபர் மாதத்தில் டெலிவரி செய்யப்பட இருப்பதாக, நான்கு பைக்குகளின் அறிமுகத்தின்போது சிஎஃப் மோட்டோ நிறுவனம் அறிவித்திருந்தது. மேலும், அடுத்த வருடமும் இதேபோன்று நான்கு புத்தம் புதிய மாடல் பைக்குகளையும் அந்நிறுவனம் அறிமுகம் செய்ய இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
English summary
CF Moto Opens Booking In India. Read In Tamil.
Story first published: Tuesday, August 6, 2019, 23:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X