இந்தியாவில் 4 புதிய பைக்குகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது சிஎஃப் மோட்டோ!

சீனாவை சேர்ந்த சிஎஃப் மோட்டோ நிறுவனம் 4 புதிய பைக் மாடல்களை இந்தியாவில் அதிரடியாக களமிறங்கி உள்ளது. இன்று பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியில் இந்த 4 புதிய பைக் மாடல்களும் பொது பார்வைக்கு வந்ததுடன், விலை விபரமும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

இந்தியாவில் 4 புதிய பைக்குகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது சிஎஃப் மோட்டோ!

சிஎஃப் மோட்டோ நிறுவனம் தனது 300என்கே, 650என்கே, 650ஜிடி மற்றும் 650எம்டி ஆகிய 4 புதிய மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இதில், 300என்கே மற்றும் 650என்கே மாடல்கள் ஸ்ட்ரீட் ஃபைட்டர் ரகத்திலான நேக்கட் பாடி ஸ்டைலில் வந்துள்ளன.

இந்தியாவில் 4 புதிய பைக்குகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது சிஎஃப் மோட்டோ!

சிஎஎஃப் மோட்டோ 650ஜிடி மற்றும் 650எம்டி ஆகிய மாடல்கள் டூரிங் ரகத்தில் வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்களை பெற்றிருக்கின்றன. ஆரம்ப மற்றும் நடுத்தர வகை பிரிமீயம் பைக் மாடல்களாக இவை நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் 4 புதிய பைக்குகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது சிஎஃப் மோட்டோ!

சிஎஃப் மோட்டோ 300என்கே

சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்கில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை இடம்பெற்றுள்ளன. முரட்டுத்தனமான பெட்ரோல் டேங்க் பைக்கின் தோற்றத்திற்கு வலுசேர்க்கிறது. ட்ரெல்லிஸ் ஃப்ரேமில் கட்டமைக்கப்பட்டுள்ளது. 17 அங்குல சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் 4 புதிய பைக்குகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது சிஎஃப் மோட்டோ!

புதிய சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்கில் ஒற்றை சிலிண்டருடன் கூடிய 292 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 33.5 பிஎச்பி பவரையும், 20.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

இந்தியாவில் 4 புதிய பைக்குகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது சிஎஃப் மோட்டோ!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

புதிய சிஎஃப் மோட்டோ 300 என்கே பைக்கில் இன்வர்டெட் ஃபோர்க்குகளுடன் முன்புற சஸ்பென்ஷனும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன. டியூவல் சேனல் ஏபிஎஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் 12.5 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. 151 கிலோ எடை கொண்டது. இந்த பைக்கிற்கு ரூ.2.29 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கேடிஎம் ட்யூக் 390, பிஎம்டபிள்யூ ஜி310ஆர், ஹோண்டா சிபி300ஆர் ஆகிய பைக் மாடல்களுடன் புதிய சிஎஃப் மோட்டோ 300என்கே பைக் மாடல் போட்டி போடும். போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் குறைவான விலை தேர்வாக அமையும்.

இந்தியாவில் 4 புதிய பைக்குகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது சிஎஃப் மோட்டோ!

சிஎஃப் மோட்டோ 650என்கே

சிஎஃப் மோட்டோ 650என்கே பைக்கில் முழுமையான எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. நடுத்தர எடை வகையிலான இந்த நேக்கட் ரக பைக் மாடலுக்கு முறுக்கலான பெட்ரோல் டேங்க் மிரட்டலான தோற்றத்தை தருகிறது.

இந்தியாவில் 4 புதிய பைக்குகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது சிஎஃப் மோட்டோ!

இந்த பைக்கில் இரட்டை சிலிண்டர் அமைப்புடைய 649 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 60 பிஎச்பி பவரையும், 56 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. 206 கிலோ எடை கொண்ட இந்த பைக் மணிக்கு 180 கிமீ வேகம் வரை செல்லும் திறன் படைத்தது.

சிஎஃப் மோட்டோ 650என்கே பைக்கில் 17 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. தரையிலிருந்து 150 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றுள்ளது. இந்த பைக்கில் கேஒய்பி டெலிஸ்கோப்பிக் முன்புற ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன. முன்சக்கரத்தில் ஃப்ளோட்டிங் காலிபர்களுடன் கூடிய டியூவல் டிஸ்க் பிரேக் சிஸ்டம் உள்ளது. பின்புறத்தில் ஃப்ளோட்டிங் காலிபருடன் கூடிய சிங்கிள் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.

புதிய சிஎஃப் மோட்டோ 650என்கே பைக் ஏதென்ஸ் புளூ - பியர்ல் பிளாக் மற்றும் நியூ பியர்ல் ஒயிட் - பியர் பிளாக் லைவ்ரியுடன் கூடிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கும். கவாஸாகி இசட்650 பைக்குடன் போட்டி போடும். ரூ.3.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும்.

இந்தியாவில் 4 புதிய பைக்குகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது சிஎஃப் மோட்டோ!

சிஎஃப் மோட்டோ 650எம்டி & 650ஜிடி

சிஎஃப் மோட்டோ 650எம்டி மற்றும் 650ஜிடி மாடல்கள் டூரர் ரகத்திலான பைக் மாடல்களாக வந்துள்ளன. இதில், 650எம்டி பைக் டூரர் ரகத்திலான மாடலாகவும், 650ஜிடி மாடல் ஸ்போர்ட்ஸ் டூரர் மாடலாகவும் தனித்துவம் பெற்றுள்ளன.

சிஎஃப் மோட்டோ 650எம்டி பைக் உயரமான விண்ட்ஸ்கிரீன் அமைப்பு, விசேஷ ஹேண்டில்பார், நக்கிள் கார்டுகள், ரேடியேட்டர் கார்டு மற்றும் ஒற்றை இருக்கை அமைப்பை பெற்றிருக்கிறது. மறுபுறத்தில் 650ஜிடி மாடலானது முழுமையான ஃபேரிங் பேனல்களுடன் ஸ்போர்ட்ஸ் டூரர் மாடலாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதில், ஸ்பிளிட் இருக்கைகள், நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற ஹேண்டில்பார் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

இந்த இரண்டு பைக்குகளிலும் முழுமையான எல்இடி ஹெட்லைட்டுகள், எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், யுஎஸ்பி சார்ஜர் உள்ளிட்ட வசதிகளை பெற்றுள்ளன. இதில், இன் பில்ட் நேவிகேஷன் சிஸ்டம் இருப்பதும் முக்கிய அம்சமாக கூறலாம்.

இந்தியாவில் 4 புதிய பைக்குகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது சிஎஃப் மோட்டோ!

இரண்டு பைக்குகளிலுமே பேரலல் ட்வின் சிலிண்டர் அமைப்புடன் கூடிய 649 சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 60 பிஎச்பி பவரையும், 56 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

சிஎஃப் மோட்டோ 650எம்டி பைக்கில் இன்வர்டெட் ஃபோர்க்குகள் கொண்ட முன்புற சஸ்பென்ஷனும், 650ஜிடி பைக்கில் ஸ்போர்ட்ஸ் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. முன்சக்கரத்தில் டியூவல் டிஸ்க்குகளும், பின்புறத்தில் சிங்கிள் டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. ஜூயன் காலிபர்களும் உள்ளன. இந்த பைக்கில் டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் முக்கிய பாதுகாப்பு அம்சமாக உள்ளது.

இந்தியாவில் 4 புதிய பைக்குகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது சிஎஃப் மோட்டோ!

புதிய சிஎஃப் மோட்டோ 650எம்டி பைக் ரூ.4.99 லட்சத்திலும், 650ஜிடி பைக் ரூ.5.49 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும். சிஎஃப் மோட்டோ 650எம்டி பைக் கவாஸாகி வெர்சிஸ் பைக்கிற்கும், 650ஜிடி மாடலானது கவாஸாகி நின்ஜா 650 மாடலுடனும் போட்டி போடும்.

இந்தியாவில் 4 புதிய பைக்குகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது சிஎஃப் மோட்டோ!

இந்தியாவில் அசெம்பிள்

சிஎஃப் மோட்டோ நிறுவனத்தின் பைக்குகள் சீனாவிலிருந்து முக்கிய உதிரிபாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள ஏஎம்டபிள்யூ நிறுவனத்திற்கு சொந்தமான ஆலையில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்படும். இந்த ஆலையில் ஆண்டுக்கு 10,000 பைக்குகளை உற்பத்தி செய்ய முடியும்.

இந்தியாவில் 4 புதிய பைக்குகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது சிஎஃப் மோட்டோ!

முன்பதிவு விபரம்

அடுத்த மாதம் 5ந் தேதி சிஎஃப் மோட்டோ பைக்குகளுக்கான முன்பதிவு ஆன்லைனில் துவங்கப்பட இருக்கிறது. வரும் அக்டோபர் மாதம் முதல் சிஎஃப் மோட்டோ நிறுவனத்தின் பைக்குகள் இந்தியாவில் டெலிவிரி கொடுக்கப்பட இருக்கின்றன. முதல்கட்டமாக ஏழு டீலர்களுடன் இந்தியாவில் வர்த்தகத்தை துவங்க இருக்கிறது சிஎஃப் மோட்டோ நிறுவனம்.

இந்தியாவில் 4 புதிய பைக்குகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது சிஎஃப் மோட்டோ!

சுவாரஸ்யத் தகவல்

1989ம் ஆண்டு துவங்கப்பட்ட சிஎஃப் மோட்டோ நிறுவனம் ஆல் டெர்ரெயின் வெஹிக்கிள் மற்றும் க்வாட் ரக வாகன தயாரிப்பில் பிரபலமானது. இந்த நிலையில், இந்நிறுவனத்தின் பைக்குகள் கேடிஎம் பைக்குகளின் சாயலை ஒத்திருப்பதற்கு காரணம் இருக்கிறது. கேடிஎம் நிறுவனம் சீனாவில் சிஎஃப் மோட்டோ நிறுவனத்தின் கூட்டணியில்தான் தனது பைக்குகளை விற்பனை செய்து வருகிறது. மேலும், கேடிஎம் நிறுவனத்தின் டிசைன் பிரிவான KISKA-விடமிருந்து உரிமம் பெற்று தனது பைக்குகளை டிசைன் செய்துள்ளது சிஎஃப் மோட்டோ நிறுவனம்.

Most Read Articles

English summary
CF Moto — a Chinese Motorcycle manufacturer has launched four new motorcycles in the Indian market. With prices starting from Rs 2.29 Lakh, ex-showroom (India), the four motorcycles includes two naked street fighters (300NK and 650NK) an adventure-tourer (650MT) and a sport-tourer (650GT).
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X