இந்திய மார்க்கெட்டை கலக்க களமிறங்கும் சிஎஃப் மோட்டோ எலெக்ட்ரிக் பைக்! அதிக ரேஞ்ச் எதிர்பார்க்கலாம்!!

சிஎஃப் மோட்டோ எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய அறிமுகம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. விரிவான விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய மார்க்கெட்டை கலக்க களமிறங்கும் சிஎஃப் மோட்டோ எலெக்ட்ரிக் பைக்! அதிக ரேஞ்ச் எதிர்பார்க்கலாம்!!

சீனாவை சேர்ந்த சிஎஃப் மோட்டோ நிறுவனம் மிகவும் போட்டி நிறைந்த அதே சமயம் மிக வேகமாக வளர்ந்து வரும் இந்திய மார்க்கெட்டில் தற்போது காலடி எடுத்து வைத்துள்ளது. சிஎஃப் மோட்டோ பைக்குகளின் இந்திய அறிமுகம் பல்வேறு காரணங்களால் தொடர்ந்து தாமதமாகி கொண்டே வந்தது. ஒரு வழியாக கடந்த சில நாட்களுக்கு முன் இந்திய மார்க்கெட்டில் நான்கு புதிய சிஎஃப் மோட்டோ மோட்டார்சைக்கிள்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன.

இந்திய மார்க்கெட்டை கலக்க களமிறங்கும் சிஎஃப் மோட்டோ எலெக்ட்ரிக் பைக்! அதிக ரேஞ்ச் எதிர்பார்க்கலாம்!!

300என்கே, 650என்கே, 650ஜிடி மற்றும் 650எம்டி என நான்கு புதிய சிஎஃப் மோட்டோ மோட்டார்சைக்கிள்கள் இந்திய மார்க்கெட்டில் தற்போது களமிறக்கப்பட்டுள்ளன. இதில், முதல் 2 மாடல்கள் ஸ்ட்ரீட்ஃபைட்டர் கேட்டகரியை சேர்ந்தவை. அதே சமயம் கடைசி 2 மாடல்கள் அட்வென்ச்சர் டூரர் ரகத்தை சேர்ந்த மோட்டார்சைக்கிள்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய மார்க்கெட்டை கலக்க களமிறங்கும் சிஎஃப் மோட்டோ எலெக்ட்ரிக் பைக்! அதிக ரேஞ்ச் எதிர்பார்க்கலாம்!!

சிஎஃப் மோட்டோ மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலை 2.29 லட்ச ரூபாய் முதல் 5.49 லட்ச ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில், 2.29 லட்ச ரூபாய் என்பது 300என்கே மாடலின் விலையாகும். அதே சமயம் 5.49 லட்ச ரூபாய் என்பது 650ஜிடி மோட்டார்சைக்கிள் மாடலின் விலையாகும். இந்த சூழலில் சிஎஃப் மோட்டோ எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய அறிமுகம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இந்திய மார்க்கெட்டை கலக்க களமிறங்கும் சிஎஃப் மோட்டோ எலெக்ட்ரிக் பைக்! அதிக ரேஞ்ச் எதிர்பார்க்கலாம்!!

இந்திய மார்க்கெட்டிற்கான சிஎஃப் மோட்டோ எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் பணிகள் நடைபெற்று வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட 300என்கே ஸ்ட்ரீட்ஃபைட்டர் மாடலை அடிப்படையாக கொண்டு இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் உருவாக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய மார்க்கெட்டை கலக்க களமிறங்கும் சிஎஃப் மோட்டோ எலெக்ட்ரிக் பைக்! அதிக ரேஞ்ச் எதிர்பார்க்கலாம்!!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

நடப்பாண்டு டிசம்பர் மாதத்திற்கு நெருக்கமாக சிஎஃப் மோட்டோ எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் 2020ம் ஆண்டு இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம். அனேகமாக 2020ம் ஆண்டின் மத்தியில் சிஎஃப் மோட்டோ எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய மார்க்கெட்டை கலக்க களமிறங்கும் சிஎஃப் மோட்டோ எலெக்ட்ரிக் பைக்! அதிக ரேஞ்ச் எதிர்பார்க்கலாம்!!

சரி இனி அடுத்ததாக சிஎஃப் மோட்டோ எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடலின் ரேஞ்ச் விஷயத்திற்கு வருவோம். இதன் ரேஞ்ச்சை தற்போதே கணிப்பது சற்று சிரமமான விஷயம்தான். இருந்தாலும் சமீபத்தில் லான்ச் செய்யப்பட்ட ரிவோல்ட் ஆர்வி400ஐ காட்டிலும் சிஎஃப் மோட்டோ எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் ரேஞ்ச் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்திய மார்க்கெட்டை கலக்க களமிறங்கும் சிஎஃப் மோட்டோ எலெக்ட்ரிக் பைக்! அதிக ரேஞ்ச் எதிர்பார்க்கலாம்!!

ரிவோல்ட் ஆர்வி400 ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 156 கிலோ மீட்டர்கள் பயணிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இது அராய் சான்றளித்த ரேஞ்ச் ஆகும். இந்திய மார்க்கெட் தற்போதுதான் படிப்படியாக எலெக்ட்ரிக் வாகனங்களை பெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிக ஆதரவை வழங்கி வருகிறது. எனவே வரும் காலங்களில் இன்னும் பல எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

இந்திய மார்க்கெட்டை கலக்க களமிறங்கும் சிஎஃப் மோட்டோ எலெக்ட்ரிக் பைக்! அதிக ரேஞ்ச் எதிர்பார்க்கலாம்!!

இதனிடையே சிஎஃப் மோட்டோ 400என்கே மற்றும் 400ஜிடி ஆகிய மாடல்களும் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன. இந்த இரண்டு மாடல்களும் இன்னும் ஒரு சில மாதங்களில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
CFMoto Electric Bike India Launch Details. Read in Tamil
Story first published: Thursday, July 25, 2019, 18:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X