கண்கவரும் 4 புதிய பைக்குகளுடன் இந்தியாவில் முதல் டீலர்ஷிப்பை துவங்கியது சிஎஃப் மோட்டோ நிறுவனம்...

சிஎஃப் மோட்டோ என்கிற சீனாவை தலைமையிடமாக கொண்ட இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனம் இந்தியாவில் கால் பதித்துள்ளது. இதற்காக மஹராஷ்டிரா தானேவில் புதிதாக டீலர்ஷிப் ஒன்றை துவங்கியுள்ள இந்நிறுவனம் விரைவில் இந்த டீலர்ஷிப்பில் இருந்து சிஎஃப் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் அவற்றின் உதிரி பாகங்களின் விற்பனை, சர்வீஸ்கள் மற்றும் டெஸ்ட் ட்ரைவ்களை நடத்தவுள்ளது.

கண்கவரும் 4 புதிய பைக்குகளுடன் இந்தியாவில் முதல் டீலர்ஷிப்பை துவங்கியது சிஎஃப் மோட்டோ நிறுவனம்...

தானேவில் புதியதாக சிஎஃப் டீலர்ஷிப் திறந்திருப்பது மிகவும் உற்சாகமாக உள்ளது. சிஎஃப் நிறுவனம், இளைஞர்கள் உள்பட அனைத்து வாடிக்கையாளர்களின் கருத்துகளையும் கேட்டறிந்து அதற்கு ஏற்றப்படி தயாரிப்புகளை வெளியிட திட்டமிட்டுள்ளது என அன்விட்டா ஆட்டோ-டெக் வொர்க்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி வம்சி கிருஷ்ணா ஜாகினி கூறியுள்ளார்.

கண்கவரும் 4 புதிய பைக்குகளுடன் இந்தியாவில் முதல் டீலர்ஷிப்பை துவங்கியது சிஎஃப் மோட்டோ நிறுவனம்...

ஜாகினி மேலும் கூறுகையில், தேவை மற்றும் டெலிவரி வேகத்தை பொறுத்து தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவுள்ளோம். டயர்-2 மார்க்கெட்கள் மற்றும் மெட்ரோ நகரங்களில் மிகவும் தீவிரமாக தயாரிப்புகளை பிரபலப்படுத்த திட்டமிட்டுள்ளோம் என கூறினார்.

கண்கவரும் 4 புதிய பைக்குகளுடன் இந்தியாவில் முதல் டீலர்ஷிப்பை துவங்கியது சிஎஃப் மோட்டோ நிறுவனம்...

சிஎஃப் மோட்டோ நிறுவனத்தின் உலகளாவிய விற்பனை பிரிவின் ஜென்ரல் மேனேஜர் கென்னித் ஜென் கூறுகையில், எங்களது முதல் டீலர்ஷிப்பை மும்பையில் துவங்குவது மகிழ்ச்சியாக உள்ளது. இருப்பினும் எங்களது நிறுவனத்திற்கு பொறுப்பு கூடியுள்ளது என்றே நினைக்கிறேன்.

கண்கவரும் 4 புதிய பைக்குகளுடன் இந்தியாவில் முதல் டீலர்ஷிப்பை துவங்கியது சிஎஃப் மோட்டோ நிறுவனம்...

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை எங்களது தயாரிப்புகளின் தரம் பூர்த்தி செய்யும் என நம்புகிறேன். வாடிக்கையாளர்களின் எண்ணத்திற்கு ஏற்றப்படி இந்நிறுவனத்தை உருவாக்குவதற்கு இந்த மும்பை நகரம் சிறந்த இடமாக விளங்கும் என்பதில் சந்தேகமே இல்லை என்றார்.

Most Read:அபராதம் செலுத்தவில்லை எனில் சிறை... மும்பை போலீசார் கொண்டு வரவுள்ள புதிய சட்டம்...

கண்கவரும் 4 புதிய பைக்குகளுடன் இந்தியாவில் முதல் டீலர்ஷிப்பை துவங்கியது சிஎஃப் மோட்டோ நிறுவனம்...

சிஎஃப் மோட்டோ நிறுவனம் தற்போதைக்கு நான்கு மோட்டார்சைக்கிள்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

300 என்கே:

ஸ்ட்ரீட் ஃபைட்டர் பைக் வகைகளுள் ஒன்றான இந்த பைக், 299சிசி சிங்கிள் சிலிண்டர் அமைப்பை கொண்ட என்ஜினுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரு ரைடிங் மோட்கள், டிஎஃப்டி கலர் டிஸ்ப்ளே, எல்இடி ஹெட்லைட்ஸ் மற்றும் டர்ன் சிக்னல் இண்டிகேட்டர்ஸ் போன்றவை இந்த 300 என்கே பைக்கில் பொருத்தப்பட்டுள்ள தொழிற்நுட்பங்கள் ஆகும். இந்த பைக்கின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.2.29 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கண்கவரும் 4 புதிய பைக்குகளுடன் இந்தியாவில் முதல் டீலர்ஷிப்பை துவங்கியது சிஎஃப் மோட்டோ நிறுவனம்...

650 என்கே:

300 என்கே-வை விட அளவில் பெரியதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த 650 என்கே பைக்கில் 649.3சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின், மஸ்குலர் பெட்ரோல் டேங்க் மற்றும் கூர்மையான பின்புற பகுதி போன்றவை கொடுக்கப்பட்டுள்ளன. எக்ஸ்ஷோரூமில் இந்த பைக் ரூ.3.99 லட்சத்தில் இருந்து விற்பனை செய்யப்பட இருக்கிறது.

கண்கவரும் 4 புதிய பைக்குகளுடன் இந்தியாவில் முதல் டீலர்ஷிப்பை துவங்கியது சிஎஃப் மோட்டோ நிறுவனம்...

650 எம்டி:

தொலைத்தூர பயணத்திற்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பைக்கில், 650 என்கே-வில் உள்ள அதே என்ஜின் அமைப்பை சிஎஃப் மோட்டோ நிறுவனம் பொருத்தியுள்ளது. ஆனால் அந்த பைக்கில் இருந்து வேறுபடுத்தி காட்டுவதற்காக பெரிய விண்ட்ஸ்க்ரீன், சவுகரியமான ரைடிங் பொசிஷன் மற்றும் 18 லிட்டர் பெட்ரோல் டேங்க் போன்றவற்றை இந்நிறுவனம் இந்த பைக்கில் வழங்கியுள்ளது. ரூ.4.99 லட்சத்தில் இருந்து இந்த 650 எம்டி பைக் இந்தியாவில் விற்பனை செய்யப்படவுள்ளது.

Most Read:வாகன ஓட்டிகளை நிறுத்துவதற்கு லத்தியை சுழற்றினால்... போலீசார் மீது சாட்டையை சுழற்றும் நீதிமன்றம்!

கண்கவரும் 4 புதிய பைக்குகளுடன் இந்தியாவில் முதல் டீலர்ஷிப்பை துவங்கியது சிஎஃப் மோட்டோ நிறுவனம்...

650 ஜிடி:

நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் விதத்தில் ஸ்போர்ட்ஸ் டூரர் டிசைனில் இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது. 649.3சிசி, லிக்யூடு-கூல்டு இணையான இரட்டை என்ஜின் அமைப்பை கொண்டுள்ள இந்த 650 ஜிடி பைக் இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.5.49 லட்சத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

கண்கவரும் 4 புதிய பைக்குகளுடன் இந்தியாவில் முதல் டீலர்ஷிப்பை துவங்கியது சிஎஃப் மோட்டோ நிறுவனம்...

இந்த நான்கு மோட்டார்சைக்கிள்களும் சென்னை, பெங்களூர், ஹைதராபாத், கொச்சின், கவுகாத்தி, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் உள்ள சிஃப் மோட்டோ நிறுவனத்தின் டீலர்ஷிப்களில் விற்பனைக்கு கிடைக்கவுள்ளன. இதற்காக சிஎஃப் நிறுவனம் இந்தியா முழுவதும் தனது டீலர்ஷிப் நெட்வொர்க்கை அடுத்த 12 மாதங்களில் விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளது.

Most Read:500சிசி பைக்குகளின் தயாரிப்பை நிறுத்தவுள்ள ராயல் எண்ட்பீல்டு... இதுதான் காரணம்

கண்கவரும் 4 புதிய பைக்குகளுடன் இந்தியாவில் முதல் டீலர்ஷிப்பை துவங்கியது சிஎஃப் மோட்டோ நிறுவனம்...

சிஎஃப் மோட்டோ நிறுவனம் இந்தியாவில் தனது முதல் டீலர்ஷிப்பை துவங்கியதற்கு ட்ரைவ்ஸ்பார்க் தளத்தின் சார்பாக வாழ்த்துகளை கூறி கொள்கிறோம். சிஎஃப் மோட்டோ நிறுவனத்தின் டீலர்ஷிப்பில் இருந்து டெஸ்ட் ட்ரைவ்கள் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டன. மேலும் பைக்குகளுக்கான முன்பதிவுகளும் ஷோரூமில் ரூ.50,000-ல் இருந்து ஏற்கப்படவுள்ளன. குறிப்பிட்ட நிற பைக்குகளுக்கு உடனடி டெலிவரியும் உண்டு என கூறுகிறது, சிஎஃப் மோட்டோ நிறுவனம்.

Most Read Articles

English summary
CFMoto Launches First Dealership At Thane: Booking & Delivery Details
Story first published: Friday, November 22, 2019, 16:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X