பஜாஜ் சேத்தக் மின்சார ஸ்கூட்டரை லைவ் டிராக் செய்வது எப்படி... வீடியோ..!

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை லைவாக டிராக் செய்வதுகுறித்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

பஜாஜ் சேத்தக் மின்சார ஸ்கூட்டரை லைவ் டிராக் செய்வது எப்படி... வீடியோ..!

இந்திய இருசக்கர வாகன உலகின் ஜம்பவான் நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ், முதல் முறையாக மின்சார வாகன உலகில் கால் தடம் பதிக்கும் விதமாக புதிய சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஸ்கூட்டர்குறித்து பல்வேறு உறுதிச்செய்யப்படாத தகவல்கள் அண்மைக் காலங்களாக இணையத்தில் வளம் வந்த வண்ணம் இருக்கின்றன.

பஜாஜ் சேத்தக் மின்சார ஸ்கூட்டரை லைவ் டிராக் செய்வது எப்படி... வீடியோ..!

அவையனைத்தும் சேத்தக் மீது அதிக ஆர்வத்தைத் தூண்டுகின்ற வகையில் இருக்கின்றது. இந்நிலையில், மேலும் ஒரு வீடியோ தற்போது யுடியூப் பக்கத்தில் வெளியாகியுள்ளது. பஜாஜ் சேத்தக் மின்சார ஸ்கூட்டரை எப்படி லைவாக டிராக் செய்வது என்பது குறித்த வீடியோதான் அது.

பஜாஜ் நிறுவனத்தின் இந்த புத்தம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அடுத்த மாதம் விற்பனைக்கு வரும் என கூறப்படுகின்றது.

பஜாஜ் சேத்தக் மின்சார ஸ்கூட்டரை லைவ் டிராக் செய்வது எப்படி... வீடியோ..!

அவை, கேடிஎம் டீலர்களின் ஷோரூம் வழியாகவே விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றன. இந்த ஸ்கூட்டரில் உள்ள பிரிமியம் அம்சங்களில் லைவ் டிராக்கிங்கும் ஒன்று.

இதுபோன்று, ஸ்கூட்டரில் இடம்பெற்றிருக்கும் பல்வேறு அம்சங்கள் ஸ்மார்ட்போனை மையமாகக் கொண்டதாக இருக்கின்றது. ஆகையால், ஸ்மார்ட்போனின் செயல்பாடு இல்லாமல் இந்த சேத்தக் மின்சார ஸ்கூட்டர் முழுமையடையாது என கூறப்படுகின்றது.

பஜாஜ் சேத்தக் மின்சார ஸ்கூட்டரை லைவ் டிராக் செய்வது எப்படி... வீடியோ..!

அதற்கேற்ப, ஸ்கூட்டர் பற்றிய பல்வேறு தகவல்களை ஸ்மார்ட்போன் வாயிலாகவே அறிந்துக் கொள்கின்ற வகையில் அதன் தொழில்நுட்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், வடிவமைக்கப்பட்ட ஓர் சிறப்பம்சம்தான் லைவ் டிராக்கிங். இது, முழுக்க முழுக்க கூகுள் மேப்ஸ் உதவியுடன் செயல்படும்.

பஜாஜ் சேத்தக் மின்சார ஸ்கூட்டரை லைவ் டிராக் செய்வது எப்படி... வீடியோ..!

கூகுள் மேப்ஸ் மென்பொருளை கையாள்வதைப்போன்றே பஜாஜ் சேத்தக்கின் இந்த லைவ் டிராக்கிங் ஆப்பினை கையாள்வதும் மிகவும் சுலபம். இதனை வெளிப்படுத்தும் வகையிலேயே இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

பஜாஜ் சேத்தக் மின்சார ஸ்கூட்டரை லைவ் டிராக் செய்வது எப்படி... வீடியோ..!

வீடியோவில், பார்க்கிங்கில் நிறுத்தப்பட்ட சேத்தக் ஸ்கூட்டர் அதிகப்படியான இருசக்கர வாகனத்தால் மறைந்திருப்பதை போன்று காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றது. ஆகையால், தனது சேத்தக்கை கண்டுபிடிக்க செல்போனை கையிலெடுக்கும் அந்த இளைஞர், லைவ் டிராக்கிங்கின் ஆப்பின் மூலம் ஸ்கூட்டர் இருக்கும் இடத்தை காண்கின்றார்.

பஜாஜ் சேத்தக் மின்சார ஸ்கூட்டரை லைவ் டிராக் செய்வது எப்படி... வீடியோ..!

பின்னர், அது காண்பிக்கும் வழிகளின் ஊடாகவே சென்று ஸ்கூட்டர் இருக்கும் இடத்தை கண்பிடிக்கின்றார். இது மிகவும் சுலபமான ஒன்றாகவே தோன்றுகின்றது.

பஜாஜ் சேத்தக் மின்சார ஸ்கூட்டரை லைவ் டிராக் செய்வது எப்படி... வீடியோ..!

பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டர் பழமை மாறாத கிளாசிக் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், வெஸ்பா ஸ்கூட்டர்களில் காணப்படும் வட்டவடிவிலான ஹெட்லைட் காட்சியளிக்கின்றது. அதுமட்டுமின்றி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், யுஎஸ்பி போர்ட், அலாய் வீல்கள் மற்றும் ஃபிரண்ட் டிஸ்க் பிரேக் உள்ளிட்டவையும் இந்த ஸ்கூட்டரில் இடம்பெற்றிருக்கின்றன.

சேத்தக் ஸ்கூட்டரில் 4 கிலோவாட் (5.36 ஹெச்பி) மின் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கின்றது. இது, லித்தியம் அயன் பேட்டரியாகும். இதன் ரேஞ்ச் பற்றிய விவரக்குறிப்புகள் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. ஆனால் சுற்றுச்சூழல் பயன்முறையில், ஸ்கூட்டர் 100 கிமீ அதிகமான ரேஞ்சை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பஜாஜ் சேத்தக் மின்சார ஸ்கூட்டரை லைவ் டிராக் செய்வது எப்படி... வீடியோ..!

இந்த ஸ்கூட்டர் முதல் கட்டமாக பெங்களூரு மற்றும் புனே ஆகிய இரு நகரங்களில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இதையடுத்தே இந்தியாவின் அடுத்த நகரங்களுக்கும் விற்பனைக்கும் அறிமுகம் செய்ய பஜாஜ் திட்டமிட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் விலைகுறித்த தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை. இது விரைவில் வெளியிடப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Most Read Articles
மேலும்... #bajaj auto
English summary
Chetak Electric Scooter Live Tracking Feature. Read In Tamil.
Story first published: Monday, December 30, 2019, 13:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X