சாலையில் ஓடி கொண்டிருந்தபோது திடீரென தீப்பற்றி எரிந்த பைக்... காரணம் தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

சாலையில் ஓடி கொண்டிருந்த பைக் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான காரணம் என்னவென்று தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைய கூடும்.

சாலையில் ஓடி கொண்டிருந்தபோது திடீரென தீப்பற்றி எரிந்த பைக்... காரணம் தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ரா எக்ஸ்பிரஸ்வே (Agra Expressway) சாலையில், போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம். இதன்படி மொபைல் போலீஸ் கண்ட்ரோல் ரூம் வேன் (Mobile Police Control Room Van) உடன் அவர்கள் சமீபத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

சாலையில் ஓடி கொண்டிருந்தபோது திடீரென தீப்பற்றி எரிந்த பைக்... காரணம் தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

அப்போது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் பைக் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அந்த பைக்கை இளைஞர் ஒருவர் ஓட்டி சென்று கொண்டிருந்தார். அவர் ஹெல்மெட் அணிந்திருந்தார். அவருக்கு பின்னால் பெண் ஒருவர் அமர்ந்திருந்தார். ஆனால் அவர் ஹெல்மெட் அணியவில்லை. அவரிடம் கைக்குழந்தை ஒன்றும் இருந்தது.

சாலையில் ஓடி கொண்டிருந்தபோது திடீரென தீப்பற்றி எரிந்த பைக்... காரணம் தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

பைக்கின் இரு பக்கமும் அளவுக்கு அதிகமான லக்கேஜ்கள் இருந்தன. குறிப்பாக எளிதில் தீப்பற்றக்கூடிய பைகள் அதிக அளவில் இருந்தன. அவை பைக்கின் லைசென்சரில் உரசி கொண்டிருந்தன. இந்த சூழலில் லைசென்சர் அதிகம் சூடானதால், பைகள் தீப்பற்றி எரிய தொடங்கின. இதனை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கவனித்து விட்டனர்.

சாலையில் ஓடி கொண்டிருந்தபோது திடீரென தீப்பற்றி எரிந்த பைக்... காரணம் தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

ஆனால் பைக்கில் சென்றவர்களுக்கு, பைகள் தீப்பற்றி எரிவது தெரியவில்லை. இதன் காரணமாக அந்த இளைஞர் பைக்கை தொடர்ந்து ஓட்டி சென்று கொண்டேயிருந்தார். விபரீதத்தை புரிந்து கொண்ட போலீசார், உடனடியாக பைக்கை சேஸ் செய்ய தொடங்கினர். வழி கிடைக்க வேண்டும் என்பதற்காக, எமர்ஜென்ஸி ஹூட்டரை (Emergency Hooter) ஆன் செய்து விட்டு, வெகு வேகமாக பைக்கை துரத்தினர்.

சாலையில் ஓடி கொண்டிருந்தபோது திடீரென தீப்பற்றி எரிந்த பைக்... காரணம் தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

மற்ற வாகனங்களை ஓவர் டேக் செய்து விட்டு சென்றதன் காரணமாக, அடுத்த சில வினாடிகளில் பைக்கை பிடித்தனர். பின்னர் பைக்கில் லக்கேஜ்கள் தீப்பற்றி எரிவதால், பைக்கை நிறுத்தும்படி அதனை ஓட்டி சென்ற இளைஞருக்கு அவர்கள் சத்தமாக தெரிவித்தனர். அப்போதுதான் அந்த இளைஞருக்கு நடப்பதே தெரிந்தது. உடனே அவர் பைக்கை சாலையோரமாக நிறுத்தினார்.

சாலையில் ஓடி கொண்டிருந்தபோது திடீரென தீப்பற்றி எரிந்த பைக்... காரணம் தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

பின்னர் தீ அணைப்பானுடன் பைக்கை நோக்கி ஓடிய போலீசார், தீப்பற்றி எரிந்த லக்கேஜ்களை பைக்கில் இருந்து அகற்றி விட்டு, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதன் விளைவாக அடுத்த சில வினாடிகளில் தீ அணைக்கப்பட்டு விட்டது. போலீசார் மட்டும் கவனிக்காமல் இருந்திருந்தால், பைக் முழுமைக்கும் தீ பரவி பெரும் அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கும்.

சாலையில் ஓடி கொண்டிருந்தபோது திடீரென தீப்பற்றி எரிந்த பைக்... காரணம் தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

ஆனால் நல்ல வேளையாக அவ்வாறு நடக்கவில்லை. தற்போது இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மொபைல் போலீஸ் கண்ட்ரோல் ரூம் வேனின் உள்ளே இருந்து இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. ஆதித்யா திவாரி என்பவர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அதனை நீங்கள் கீழே காணலாம்.

எந்தவொரு வாகனத்தின் லைசென்சர் என்றாலும், மிக வேகமாக சூடாகி விடும். லைசென்சர் வழியாக வெளியேறும் வெப்பமான வாயுக்கள், அதன் டெம்ப்ரேச்சரை எளிதில் அதிகரித்து விடுகின்றன. ஆனால் ஒரு சில சைலென்சர்களில், ஹூட் ஷீல்டு (Heat Shield) வழங்கப்படுகிறது. வெப்பத்தின் தாக்கத்தை இது குறைக்கிறது.

சாலையில் ஓடி கொண்டிருந்தபோது திடீரென தீப்பற்றி எரிந்த பைக்... காரணம் தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

என்றாலும் ஹூட் ஷீல்டுகள் வெப்பத்தின் தாக்கத்தை முழுமையாக குறைத்து விடாது. ஓரளவிற்கு மட்டுமே குறைக்கும். எனவே எப்போதும் கவனமாக இருப்பதே நல்லது. ஆக்ரா எக்ஸ்பிரஸ்வே சாலையில் நடைபெற்ற தீ விபத்து சம்பவத்திற்கு சைலென்சர் சூடுதான் காரணமாக பார்க்கப்படுகிறது. சைலென்சர் சூடு காரணமாக லக்கேஜ்கள் தீப்பற்றி எரிந்துள்ளன.

சாலையில் ஓடி கொண்டிருந்தபோது திடீரென தீப்பற்றி எரிந்த பைக்... காரணம் தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

இரு சக்கர வாகனங்களில் லக்கேஜ்களை முறையாக வைத்து கொண்டு பயணிக்காவிட்டால் என்ன நடக்கும் என்பதையும் இந்த வீடியோ நமக்கு உணர்த்துகிறது. எனவே இனி இரு சக்கர வாகனங்களில் லக்கேஜ்களை வைக்கும்போது கவனமாக இருங்கள். இது போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க சேடில் பேக்குகளை (Saddlebags) பயன்படுத்தலாம்.

சாலையில் ஓடி கொண்டிருந்தபோது திடீரென தீப்பற்றி எரிந்த பைக்... காரணம் தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

மோட்டார் சைக்கிள்களுக்கு என பிரத்யேகமாக சேடில் பேக்குகள் உருவாக்கப்படுகின்றன. சேடில் பேக்குகளை பயன்படுத்தினால், சைலென்சரில் இருந்து போதுமான இடைவெளி கிடைக்கும். இதன் மூலம் லக்கேஜ் தீப்பற்றுவதற்கான வாய்ப்புகள் நீங்கும். இச்சம்பவத்தை முன் உதாரணமாக கொண்டு இனி சேடில் பேக்குகளை பயன்படுத்த தொடங்குங்கள்.

Most Read Articles
English summary
Cops Chase And Stop Burning TVS Apache RTR Bike On The Highway In Uttar Pradesh
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X