நீங்க சிங்கிளா? அப்போ இணையத்தில் வைரலாகும் இந்த இளம்ஜோடியின் வீடியோவை தயவு செய்து பார்க்காதீர்கள்...

நீங்க சிங்கிளா? அப்படி என்றால் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வரும் இந்த இளம்ஜோடியின் வீடியோவை நீங்கள் தயவு செய்து பார்க்க வேண்டாம்.

நீங்க சிங்கிளா? அப்போ இந்த இளம்ஜோடி நடுரோட்டில் செய்த சில்மிஷ வீடியோவை தயவு செய்து பார்க்காதீர்கள்

இந்தியா முழுக்க மிகவும் பிரபலமான ''குலாம்'' என்ற பாலிவுட் திரைப்படம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? தமிழ் சினிமாவுடன் சேர்த்து பாலிவுட் சினிமாவையும் உற்று நோக்கும் 90's கிட்ஸ்களுக்கு குலாம் (Ghulam) திரைப்படம் நினைவிருக்க வாய்ப்பிருக்கிறது.

நீங்க சிங்கிளா? அப்போ இந்த இளம்ஜோடி நடுரோட்டில் செய்த சில்மிஷ வீடியோவை தயவு செய்து பார்க்காதீர்கள்

கடந்த 1998ம் ஆண்டு வெளியாகி வசூலை வாரி குவித்த படம் இது. குலாம் படத்தில் அமிர்கான் மற்றும் ராணி முகர்ஜி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஜதின்-லத்தீப் ஆகியோர் இசை அமைத்திருந்த குலாம் படத்தில், பாடல்களும் கூட ஹிட் அடித்தன.

நீங்க சிங்கிளா? அப்போ இந்த இளம்ஜோடி நடுரோட்டில் செய்த சில்மிஷ வீடியோவை தயவு செய்து பார்க்காதீர்கள்

குறிப்பாக ''ஜாது ஹே தேரா ஹி ஜாது'' (Jadu Hai Tera Hi Jadu) என்ற பாடல் அந்த சமயத்தில் பட்டி தொட்டியெங்கும் பிரபலமாக இருந்தது. இந்த பாடலில், அமீர்கான் பைக் ஒன்றை ஓட்டி வருவார். அந்த காட்சியில், ராணி முகர்ஜி பைக்கின் பின்னால் அமர்ந்திருப்பார்.

நீங்க சிங்கிளா? அப்போ இந்த இளம்ஜோடி நடுரோட்டில் செய்த சில்மிஷ வீடியோவை தயவு செய்து பார்க்காதீர்கள்

அப்போது திடீரென எழுந்து முன்னால் வரும் ராணி முகர்ஜி, பைக்கின் பெட்ரோல் டேங்க் மீது அமர்ந்து கொண்டு, அமிர்கானை கட்டியணைத்து கொள்வார். இதன்பின் அமிர்கான் காதை கடிப்பது, முத்தம் கொடுப்பது என காதல் ரசம் கொஞ்சும் காட்சிகள் வரும்.

நீங்க சிங்கிளா? அப்போ இந்த இளம்ஜோடி நடுரோட்டில் செய்த சில்மிஷ வீடியோவை தயவு செய்து பார்க்காதீர்கள்

ஒரே வரியில் சொல்வதென்றால், இந்த காட்சியை பார்த்தால், சிங்கிளாக இருப்பவர்களின் வயிறு பற்றி எரியும். இந்த சூழலில், டெல்லியை சேர்ந்த ஜோடி ஒன்று தற்போது அமிர்கான்-ராணி முகர்ஜியை நினைவுபடுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளது.

நீங்க சிங்கிளா? அப்போ இந்த இளம்ஜோடி நடுரோட்டில் செய்த சில்மிஷ வீடியோவை தயவு செய்து பார்க்காதீர்கள்

மேற்கு டெல்லியில் உள்ள ரஜோரி கார்டன் பகுதியில் இந்த கிளுகிளுப்பான சம்பவம் நடைபெற்றுள்ளது. அதுவும் போக்குவரத்து நெரிசல் அதிகமான பீக் ஹவர்ஸில் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜோடியின் செயல், அமிர்கான்-ராணி முகர்ஜியை நினைவுபடுத்துவதாக உள்ளது.

நீங்க சிங்கிளா? அப்போ இந்த இளம்ஜோடி நடுரோட்டில் செய்த சில்மிஷ வீடியோவை தயவு செய்து பார்க்காதீர்கள்

ஆனால் படத்தில் வருவது போல் அவர்கள் பாடவில்லை. அது ஒன்றுதான் குறை. பைக் ஓட்டி சென்ற இளைஞர் தனது தோள்பட்டையில் பேக் ஒன்றை அணிந்திருந்தார். அப்போது அந்த இளம்பெண் பைக்கின் பெட்ரோல் டேங்க் மீது அமர்ந்து கொண்டு அந்த இளைஞரை கட்டியணைத்து கொண்டே பயணித்தார்.

நீங்க சிங்கிளா? அப்போ இந்த இளம்ஜோடி நடுரோட்டில் செய்த சில்மிஷ வீடியோவை தயவு செய்து பார்க்காதீர்கள்

தலைநகர் டெல்லியில், அதுவும் பொது வெளியில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ட்விட்டர் பயன்பாட்டாளரான HGS Dhaliwal IPS என்பவர் இந்த வீடியோவை பகிர்ந்து கொண்டுள்ளார். அதனை நீங்கள் கீழே காணலாம்.

''மோட்டார் வாகன சட்ட விதிமுறை மீறல்களுக்கு புதிய செக்ஸன்கள் தேவை'' எனவும் HGS Dhaliwal IPS கேப்ஷனில் தெரிவித்துள்ளார். தற்போது பேஸ்புக், வாட்ஸ்அப், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

நீங்க சிங்கிளா? அப்போ இந்த இளம்ஜோடி நடுரோட்டில் செய்த சில்மிஷ வீடியோவை தயவு செய்து பார்க்காதீர்கள்

அடுத்த முறை உங்கள் ஜோடியுடன் பைக்கில் பயணம் செய்யும்போது தயவு செய்து இதுபோன்ற விபரீத செயல்களில் ஈடுபட வேண்டாம். இத்தகைய செயல்கள் மூலம் பொதுமக்களின் கவனத்தை உங்கள் மீது திருப்ப முடியும்தான்.

நீங்க சிங்கிளா? அப்போ இந்த இளம்ஜோடி நடுரோட்டில் செய்த சில்மிஷ வீடியோவை தயவு செய்து பார்க்காதீர்கள்

ஆனால் இதுபோன்ற செயல்பாடுகள் சட்டத்திற்கு எதிரானது. அத்துடன் எதிர்பாராத நேரத்தில் விபத்து நிகழ்ந்தால், உயிருக்கே ஆபத்தாக முடியலாம். எனவே சாலையில் எப்படி பாதுகாப்பாக இரு சக்கர வாகனத்தை ஓட்டுவது? என்பதை அறிந்து கொள்வது அனைவருக்கும் அவசியமான ஒன்று.

நீங்க சிங்கிளா? அப்போ இந்த இளம்ஜோடி நடுரோட்டில் செய்த சில்மிஷ வீடியோவை தயவு செய்து பார்க்காதீர்கள்

எப்போதும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதுதான் முதல் ரூல். மேற்கண்ட வீடியோவில் நாம் பார்த்த இளம் ஜோடி ஹெல்மெட்டும் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்பாராத விதமாக விபத்து நிகழ்ந்தால், ஹெல்மெட் உங்களை காப்பாற்றும்.

நீங்க சிங்கிளா? அப்போ இந்த இளம்ஜோடி நடுரோட்டில் செய்த சில்மிஷ வீடியோவை தயவு செய்து பார்க்காதீர்கள்

ஆனால் ஹெல்மெட் தரமானதுதானா? என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஏனெனில் விலை மலிவான தரமற்ற ஹெல்மெட் அணிவதும், ஹெல்மெட் அணியாமல் இருப்பதும் ஏறத்தாழ ஒன்றுதான். அத்துடன் ஹெல்மெட்டை சரியாக அணிந்துள்ளீர்களா? என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.

நீங்க சிங்கிளா? அப்போ இந்த இளம்ஜோடி நடுரோட்டில் செய்த சில்மிஷ வீடியோவை தயவு செய்து பார்க்காதீர்கள்

உங்கள் இரு சக்கர வாகனத்தின் பிரேக் லைட்ஸ் மற்றும் டெயில் லைட்ஸ் சரியாக இயங்குகிறதா? என்பதை அவ்வப்போது சரிபார்த்து கொள்ளுங்கள். அடர் இருட்டில் இது உங்களை பாதுகாக்கும். இதுதவிர போக்குவரத்து சிக்னல்கள் எப்போதும் அபாயகரமான இடம்தான்.

நீங்க சிங்கிளா? அப்போ இந்த இளம்ஜோடி நடுரோட்டில் செய்த சில்மிஷ வீடியோவை தயவு செய்து பார்க்காதீர்கள்

சிகப்பு விளக்கு எரிவதற்குள் சிக்னலை கடந்து விட வேண்டும் என மற்ற வாகன ஓட்டிகள் அதிக வேகத்தில் வருவார்கள். இல்லாவிட்டால் நீண்ட மீண்டும் நேரம் நிற்க வேண்டியதாகி விடுமே? எனவே சிக்னலில் சிகப்பு விளக்கிற்காக பிரேக் பிடிக்கும்போது, ரியர் வியூ மிரரில் எப்போதும் ஒரு கண் வைத்து கொள்ளுங்கள்.

நீங்க சிங்கிளா? அப்போ இந்த இளம்ஜோடி நடுரோட்டில் செய்த சில்மிஷ வீடியோவை தயவு செய்து பார்க்காதீர்கள்

சாலையில் நாம் சரியாகதான் வாகனத்தை ஓட்டுவோம். ஆனால் அனைவரும் அப்படி இருப்பார்கள் என கூறி விட முடியாது. ஒரு சிலர் அபாயகரமான முறையில் வாகனத்தை இயக்குவார்கள். அத்தகைய வாகன ஓட்டிகளை கண்டால், உங்களால் முடிந்தவரை அவர்களிடம் இருந்து இடைவெளியை கடைபிடியுங்கள்.

MOST READ:பிரபல 5 ஸ்டார் ஓட்டலில் ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு அனுமதி மறுப்பு.. பாதுகாவலர் சொன்ன வினோத காரணம்

நீங்க சிங்கிளா? அப்போ இந்த இளம்ஜோடி நடுரோட்டில் செய்த சில்மிஷ வீடியோவை தயவு செய்து பார்க்காதீர்கள்

உங்களுக்கு எதிரே வரும் வாகனத்தை பார்க்க முடியாவிட்டால், தயவு செய்து முன்னே செல்லும் வாகனத்தை ஓவர் டேக் செய்யாதீர்கள். உங்கள் வாகனத்தின் டயர்கள் நல்ல நிலையில் உள்ளதா? என்பதையும் அவ்வப்போது உறுதி செய்து கொள்ளுங்கள்.

நீங்க சிங்கிளா? அப்போ இந்த இளம்ஜோடி நடுரோட்டில் செய்த சில்மிஷ வீடியோவை தயவு செய்து பார்க்காதீர்கள்

டயர் பிரஷரை வாரத்திற்கு ஒரு முறை சோதனை செய்து கொள்வது நல்லது. ஏனெனில் சரியான டயர் பிரஷருடன் வாகனத்தை இயக்குவது மிகவும் முக்கியம். மற்றொரு முக்கியமான விஷயம் குடிபோதையில் எக்காரணத்தை கொண்டும் வாகனத்தை இயக்காதீர்கள்.

நீங்க சிங்கிளா? அப்போ இந்த இளம்ஜோடி நடுரோட்டில் செய்த சில்மிஷ வீடியோவை தயவு செய்து பார்க்காதீர்கள்

இது இரு சக்கர வாகனங்களுக்கு மட்டுமின்றி கார் உள்ளிட்ட அனைத்து விதமான வாகனங்களுக்கும் பொருந்தும். நீங்கள் மது அருந்தியிருந்தால், டாக்ஸி பிடித்து செல்வது நல்லது. அத்துடன் போக்குவரத்து விதிமுறைகள் அனைத்தையும் தவறாமல் பின்பற்றுங்கள். இரு சக்கர வாகன ஓட்டிகள் சாலைகளில் பாதுகாப்பாக பயணிக்க இந்த டிப்ஸ் நிச்சயம் உதவும். எனவே தவறாமல் இவற்றை பின்பற்றுங்கள். உங்களின் பாதுகாப்பான பயணத்திற்கு எங்களின் வாழ்த்துக்கள்.

Most Read Articles

English summary
Couple makes out a running bike in Delhi. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X