யாராலும் நம்ப முடியாத ஒரு பொய்யை சொன்ன வாடிக்கையாளர்... புக்கிங்கை அதிரடியாக கேன்சல் செய்தது ஜாவா

யாராலும் நம்ப முடியாத ஒரு பொய்யை சொன்ன வாடிக்கையாளரின் புக்கிங்கை ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனம் அதிரடியாக கேன்சல் செய்துள்ளது.

யாராலும் நம்ப முடியாத ஒரு பொய்யை சொன்ன வாடிக்கையாளர்... புக்கிங்கை அதிரடியாக கேன்சல் செய்தது ஜாவா

வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ஜாவா மோட்டார்சைக்கிள்கள் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. மிக நீண்ட இடைவெளிக்கு பின் ஜாவா மோட்டார்சைக்கிள்கள் மீண்டும் விற்பனைக்கு களமிறக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் போட்டி போட்டு கொண்டு முன்பதிவு செய்தனர்.

யாராலும் நம்ப முடியாத ஒரு பொய்யை சொன்ன வாடிக்கையாளர்... புக்கிங்கை அதிரடியாக கேன்சல் செய்தது ஜாவா

ஆனால் வாடிக்கையாளர்களுக்கு ஜாவா மோட்டார்சைக்கிள்கள் சரியாக டெலிவரி செய்யப்படவில்லை. டெலிவரி எப்போது தொடங்கப்படும்? என்ற தகவல் ஆரம்பத்தில் வெளியாகாமல் இருந்தது. இதன்பின் பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் ஒரு வழியாக டெலிவரி தொடங்கியது. ஆனாலும் கூட சரியான முறையில் டெலிவரி செய்யப்படவில்லை.

யாராலும் நம்ப முடியாத ஒரு பொய்யை சொன்ன வாடிக்கையாளர்... புக்கிங்கை அதிரடியாக கேன்சல் செய்தது ஜாவா

எனவே முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் விரக்தியடைந்தனர். பலர் சமூக வலை தளங்கள் வாயிலாக தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதுபோன்ற நிகழ்வுகள் காரணமாக ஜாவா தொடர்ச்சியாக தலைப்பு செய்திகளில் இடம்பிடித்து வந்தது. இந்த வரிசையில் தற்போது மீண்டும் ஒரு முறை ஜாவாவின் பெயர் செய்திகளில் அடிபட்டுள்ளது.

யாராலும் நம்ப முடியாத ஒரு பொய்யை சொன்ன வாடிக்கையாளர்... புக்கிங்கை அதிரடியாக கேன்சல் செய்தது ஜாவா

ஜாவா வாடிக்கையாளர் ஒருவரின் சமூக வலை தள பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது. எதிர்பார்த்த நேரத்திற்கு முன்னதாகவே தனக்கு ஜாவா மோட்டார்சைக்கிள் கிடைத்து விட்டதாக அந்த வாடிக்கையாளர் சமூக வலை தளங்களில் தெரிவித்துள்ளார். அவரது பெயர் சவுரப் யாதவ். கடந்த மே மாதம் ஜாவா 42 பைக்கை புக்கிங் செய்ததாக அவர் பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

யாராலும் நம்ப முடியாத ஒரு பொய்யை சொன்ன வாடிக்கையாளர்... புக்கிங்கை அதிரடியாக கேன்சல் செய்தது ஜாவா

அதே சமயம் அவருக்கு நடப்பு அக்டோபர் மாதம் மோட்டார்சைக்கிள் டெலிவரி செய்யப்பட்டு விட்டதாகவும் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. இதுதவிர தான் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வேரியண்ட்டிற்கு மட்டுமே புக்கிங் செய்திருந்ததாகவும், ஆனால் தனக்கு ட்யூயல் சேனல் ஏபிஎஸ் வேரியண்ட் டெலிவரி செய்யப்பட்டுள்ளதாகவும் சவுரப் யாதவ் கூறியுள்ளார்.

யாராலும் நம்ப முடியாத ஒரு பொய்யை சொன்ன வாடிக்கையாளர்... புக்கிங்கை அதிரடியாக கேன்சல் செய்தது ஜாவா

ஜாவா மோட்டார்சைக்கிள்களுக்கு முன்பதிவு செய்துவிட்டு பலர் நீண்ட காலமாக காத்து கொண்டுள்ளனர். அப்படி இருக்கையில் குறுகிய காலத்திலேயே ஜாவா மோட்டார்சைக்கிளை டெலிவரி பெற்று விட்டதாக சவுரப் யாதவ் கூறியுள்ளார். இதன் காரணமாக சவுரப் யாதவின் பேஸ்புக் பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்தது.

MOST READ: டோல்கேட் விஷயத்தில் அதிரடி முடிவை எடுக்கிறது மத்திய அரசு... இதற்காகதான் நாடே காத்து கொண்டுள்ளது

யாராலும் நம்ப முடியாத ஒரு பொய்யை சொன்ன வாடிக்கையாளர்... புக்கிங்கை அதிரடியாக கேன்சல் செய்தது ஜாவா

ஆனால் இதுபோல் எதுவும் நடக்கவில்லை என ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனம் இதனை முற்றிலுமாக மறுத்துள்ளது. மேலும் இதுபோன்ற தகவல்களை நம்ப வேண்டாம் என வாடிக்கையாளர்களை எச்சரிக்கும் விதமாக தனது சமூக வலை தள பக்கங்களில் ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனம் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

MOST READ: மரண பயத்தை காட்டும் இந்த போட்டோக்களை பார்த்த பிறகும் சாலை விதிகளை மீறுவீங்க? கண்டிப்பா மாட்டீங்க

யாராலும் நம்ப முடியாத ஒரு பொய்யை சொன்ன வாடிக்கையாளர்... புக்கிங்கை அதிரடியாக கேன்சல் செய்தது ஜாவா

''வாடிக்கையாளர்கள் மத்தியில் பதற்றத்தையும், குழப்பத்தையும் உண்டாக்குவது மட்டுமே இதுபோன்ற பதிவுகளின் ஒரே நோக்கம்'' என ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்திய ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனம் சவுரப் யாதவால் மேற்கொள்ளப்பட்ட முன்பதிவை அதிரடியாக கேன்சல் செய்துள்ளது.

MOST READ: லைசென்ஸ், ஆர்சி புக் போன்று இனி இதுவும் முக்கியம்... அதிரடி நடவடிக்கையில் களமிறங்கும் காவல்துறை!

யாராலும் நம்ப முடியாத ஒரு பொய்யை சொன்ன வாடிக்கையாளர்... புக்கிங்கை அதிரடியாக கேன்சல் செய்தது ஜாவா

இது ஒரு போலியான பதிவு என்ற காரணத்தை கூறி புக்கிங்கை ரத்து செய்துள்ளது ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனம். ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனம் டெலிவரியை உரிய நேரத்தில் செய்திருந்தால் இதுபோன்ற போலி பதிவுகளுக்கு வேலையே இருந்திருக்காது. ஜாவா நிறுவனத்தை சுற்றி அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சை எழுந்து கொண்டேதான் இருக்கிறது.

யாராலும் நம்ப முடியாத ஒரு பொய்யை சொன்ன வாடிக்கையாளர்... புக்கிங்கை அதிரடியாக கேன்சல் செய்தது ஜாவா

சமீபத்தில் ஜாவா உரிமையாளர் ஒருவர் தனது பைக்கின் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். பைக்கின் பாகங்கள் துருப்பிடித்திருப்பதை இந்த புகைப்படங்கள் நமக்கு காட்டின. இது போலியான பதிவு அல்ல. உண்மையானதுதான். எனினும் சம்பந்தப்பட்ட ஜாவா டீலர்ஷிப் மூலமாக இந்த பிரச்னை தீர்க்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Jawa Owners & Lovers/Facebook

Most Read Articles

English summary
Customer Posted A Fake Post: Jawa Cancels His Booking. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X