நடுரோட்டில் பெண்ணின் ஹெல்மெட்டை உடைத்த போலீஸ்காரர்... காரணம் தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

இரு சக்கர வாகனத்தில் வந்த பெண்ணின் ஹெல்மெட்டை, போலீஸ்காரர் ஒருவர் நடுரோட்டில் சுக்குநூறாக உடைத்தார். இதற்கான காரணம் என்னவென்று தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடையக்கூடும்.

நடுரோட்டில் பெண்ணின் ஹெல்மெட்டை உடைத்த போலீஸ்காரர்... காரணம் தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

சாலை பாதுகாப்பு என்ற விஷயத்தை எடுத்து கொண்டால், உலகிலேயே மிகவும் அபாயகரமான நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இங்கு சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே வருவதே இதற்கு காரணம்.

நடுரோட்டில் பெண்ணின் ஹெல்மெட்டை உடைத்த போலீஸ்காரர்... காரணம் தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

இந்தியாவில் நடைபெறும் சாலை விபத்துக்களில் அதிகம் பாதிப்படைவது இரு சக்கர வாகன ஓட்டிகள்தான். எனவே இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இரண்டு பேரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நடுரோட்டில் பெண்ணின் ஹெல்மெட்டை உடைத்த போலீஸ்காரர்... காரணம் தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்கள் மற்றும் முக்கியமான நகரங்களில் இந்த உத்தரவு தற்போது அமலில் உள்ளது. ஆனால் அனைத்து வாகன ஓட்டிகளும் இந்த உத்தரவை முறையாக கடைபிடிக்கிறார்களா? என்றால், 'இல்லை' என்பதுதான் பதில்.

நடுரோட்டில் பெண்ணின் ஹெல்மெட்டை உடைத்த போலீஸ்காரர்... காரணம் தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

இங்குள்ள வாகன ஓட்டிகளை ஹெல்மெட் அணிய வைப்பது பெரும் பிரச்னையாக உள்ளது. புனே நகரில், நடைபெற்ற மாபெரும் போராட்டத்தை இதற்கு உதாரணமாக கூறலாம். கடந்த சில வாரங்களுக்கு முன் புனேவில், கட்டாய ஹெல்மெட் சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டது.

நடுரோட்டில் பெண்ணின் ஹெல்மெட்டை உடைத்த போலீஸ்காரர்... காரணம் தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

ஆனால் ஒரு தரப்பினர் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே கட்டாய ஹெல்மெட் சட்டத்திற்கு எதிராக, ஹெல்மெட் அணியாமல் பிரம்மாண்ட பைக் பேரணியை அவர்கள் நடத்தினர். நகர எல்லைக்குள் 20-30 கிமீ வேகத்தில் மட்டுமே பயணம் செய்வதால், ஹெல்மெட் தேவையில்லை என்பது அவர்களின் வாதம்.

நடுரோட்டில் பெண்ணின் ஹெல்மெட்டை உடைத்த போலீஸ்காரர்... காரணம் தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

எனினும் மெதுவாக பயணித்தாலும் கூட, ஹெல்மெட் இல்லாவிட்டால் ஆபத்துதான். இதற்கு உதாரணமாக பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதுதவிர வியர்க்கிறது, முடி கொட்டுகிறது என்பது போன்ற காரணங்களாலும் சிலர் ஹெல்மெட் அணிவதை தவிர்க்கின்றனர்.

நடுரோட்டில் பெண்ணின் ஹெல்மெட்டை உடைத்த போலீஸ்காரர்... காரணம் தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

இன்னும் சிலர் ஹெல்மெட் அணியும் பழக்கத்தை வாடிக்கையாக வைத்துள்ளனர். ஆனால் அவை தரமற்று இருப்பதால், சாலை விபத்துக்களின்போது உதவி செய்ய தவறி விடுகின்றன. எனவே ஐஎஸ்ஐ தரச்சான்று பெற்ற ஹெல்மெட்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என சமீபத்தில் உத்தரவிடப்பட்டது.

நடுரோட்டில் பெண்ணின் ஹெல்மெட்டை உடைத்த போலீஸ்காரர்... காரணம் தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

இருந்தபோதும் இன்னும் பலர் ஐஎஸ்ஐ தரச்சான்றிதழ் பெற்ற ஹெல்மெட்களுக்கு மாறவில்லை. இந்த சூழலில் தலைநகர் டெல்லியில் இரு சக்கர வாகனம் ஒன்றில் 2 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது வழியில் சிக்னல் இருந்ததால் வாகனத்தை நிறுத்தி விட்டு அவர்கள் காத்திருந்தனர்.

நடுரோட்டில் பெண்ணின் ஹெல்மெட்டை உடைத்த போலீஸ்காரர்... காரணம் தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

அந்த நேரத்தில் அங்கு வந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர், இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த பெண்ணின் ஹெல்மெட்டை வாங்கினார். பின்னர் திடீரென அதனை சாலையில் போட்டு உடைத்தார். போலீஸ் கான்ஸ்டபிள் சாலையில் தட்டியதுமே அந்த ஹெல்மெட் சுக்குநூறாக உடைந்து விட்டது.

நடுரோட்டில் பெண்ணின் ஹெல்மெட்டை உடைத்த போலீஸ்காரர்... காரணம் தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

தரம் இல்லாத ஹெல்மெட்கள் எவ்வளவு அபாயகரமானது? என்பதை காட்டவே அவர் இப்படி செய்தார். பின்னர் தரமற்ற ஹெல்மெட்கள் பாதுகாப்பானவை அல்ல என்பதை அந்த பெண்ணுக்கு, போலீஸ் கான்ஸ்டபிள் விளக்கினார்.

நடுரோட்டில் பெண்ணின் ஹெல்மெட்டை உடைத்த போலீஸ்காரர்... காரணம் தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

சிறிய மோதலுக்கே ஹெல்மெட் நொறுங்கியது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. ஒரு சிலர் பெயருக்கு ஏதோ ஒரு ஹெல்மெட்டை அணிகின்றனர். இப்படிப்பட்ட ஹெல்மெட்கள் கைகொடுக்காது என்பதை உணர வேண்டிய நேரமிது. தரமற்ற ஹெல்மெட்களை அணிந்திருப்பதும், அணியாமல் இருப்பதும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.

நடுரோட்டில் பெண்ணின் ஹெல்மெட்டை உடைத்த போலீஸ்காரர்... காரணம் தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

இதனிடையே ஐஎஸ்ஐ முத்திரையுடன் கூடிய தரமான ஹெல்மெட் ஒன்றை அந்த பெண்ணுக்கு, போலீஸ் கான்ஸ்டபிள் வழங்கினார். நல்ல தரமான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தயாரிப்புகளை மட்டும் பயன்படுத்துங்கள் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

நடுரோட்டில் பெண்ணின் ஹெல்மெட்டை உடைத்த போலீஸ்காரர்... காரணம் தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

அத்துடன் அந்த பெண்ணுக்கு அபராதம் எதுவும் விதிக்கப்படவில்லை. இதுதவிர ஐஎஸ்ஐ ஹெல்மெட்டிற்கும் பணமும் வசூலிக்கப்படவில்லை. இலவசமாகவே கொடுக்கப்பட்டது. தற்போது சமூக வலை தளங்களில் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. அதனை நீங்கள் கீழே காணலாம்.

மேற்கண்ட வீடியோவின் இரண்டாவது பாதியில், டெல்லி போக்குவரத்து காவல் துறையை சேர்ந்த ரம்பிர் சங்வான் என்பவர் பேசுகிறார். தலையில் ஹெல்மெட்டை எப்படி முறையாக அணிய வேண்டும்? என்பதை அவர் விளக்குகிறார்.

நடுரோட்டில் பெண்ணின் ஹெல்மெட்டை உடைத்த போலீஸ்காரர்... காரணம் தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

ஹெல்மெட் எப்படியெல்லாம் தவறாக அணியப்படுகிறது? என்பதை விளக்குவதற்காக பல்வேறு வகையான ஹெல்மெட்களையும் அவர் பயன்படுத்துகிறார். அத்துடன் ஐஎஸ்ஐ தரச்சான்றிதழ் பெற்ற ஹெல்மெட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டு கொள்கிறார்.

நடுரோட்டில் பெண்ணின் ஹெல்மெட்டை உடைத்த போலீஸ்காரர்... காரணம் தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

இந்தியாவில் சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டுமென்றால், போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றி, அரசுக்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு வழங்குவது அவசியம்.

Most Read Articles
English summary
Delhi Police Constable Break Woman Pillion Rider's Helmet At A Traffic Signal-Video. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X