கேடிஎம் 250 ட்யூக்கிற்கும் ஹஸ்க்வர்ணா 250 பைக்கிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?

ஆஸ்திரியா நாட்டின் கேடிஎம் நிறுவனத்தில் இணையலாமா? அல்லது ஸ்வீடனின் ஹஸ்க்வர்னா நிறுவனத்துடன் இணையலாமா? என்ற குழப்பத்தில் உள்ளீர்களா? கவலை வேண்டாம், இந்த இரு நிறுவனங்களின் பைக்குகளும் இடையே உள்ள வித்தியாசத்தை இந்த செய்தியில் விரிவாக கூறியுள்ளோம். அவற்றை அறிந்துகொண்டு ஒரு முடிவை எடுங்கள்.

கேடிஎம் 250 ட்யூக்கிற்கும் ஹஸ்வர்ணா 250 பைக்கிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?

கேடிஎம் நிறுவனம் கடந்த 2012ல் ட்யூக் 200 பைக்குடன் இந்தியாவில் களமிறங்கியது. ஹஸ்க்வர்னா நிறுவனம் கடந்த 7ஆம் தேதி இந்திய பைக் வாரம் 2019 கண்காட்சியில் ஸவர்ட்பிளேன் 250 மற்றும் விட்பிளேன் 250 என்ற ட்வின்ஸ் பைக்குகளுடன் இந்தியாவில் பதித்தது. ஹஸ்க்வர்னா நிறுவனம் கேடிஎம்-ன் 250 ட்யூக் பைக்குடன் தான் இந்திய சந்தையில் போட்டியிட முடியும்.

கேடிஎம் 250 ட்யூக்கிற்கும் ஹஸ்வர்ணா 250 பைக்கிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?

டிசைன் வகையில் பார்த்தோமேயானால், இந்த மூன்று பைக்குகளும் வெவ்வேறான பயன்பாட்டிற்கென ப்ரேத்யகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அதாவது, கேடிஎம் 250 ட்யூக் பைக்கானது ஸ்ட்ரீட்ஃபைட்டராகவும், ஸவர்ட்பிளேன் 250 பைக் ஆப்-ரோட்டிற்கு ஏற்ற விதத்திலும் விட்பிளேன் 250 ரேசிங்கிற்கு உகந்த முறையிலும் தயாரிக்கப்பட்டுள்ளன.

கேடிஎம் 250 ட்யூக்கிற்கும் ஹஸ்வர்ணா 250 பைக்கிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?

ட்யூக் 250 பைக்கை அதன் ஆரஞ்ச் நிற ஏணி வடிவிலான ஃப்ரேம்களை வைத்து எளிதாக அடையாளம் கண்டுக்கொள்ளலாம். ஹஸ்க்வர்னாவின் ட்வின்ஸ் பைக்குகள் சில்வர் மற்றும் கருப்பு நிற பெயிண்ட் அமைப்பை கொண்டுள்ளன.

கேடிஎம் 250 ட்யூக்கிற்கும் ஹஸ்வர்ணா 250 பைக்கிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?

250 ட்யூக், உயரமாக பொருத்தப்பட்ட ஹேண்டில்பார்களையும் பைக்கிற்கு சிறிது பின்புறமாக பொருத்தப்பட்ட கால் வைக்கும் பகுதியையும் கொண்டுள்ளது. விட்பிளேன் 250 ரேசிங்கிற்காக குறைவான உயரத்தில் ஹேண்டில்பார்களையும் ஸவர்ட்பிளேன் 250 பைக் ஆப்-ரோட்டிற்கு ஏற்ற வகையில் சற்று அதிகமாக திருகக்கூடிய ஹேண்டில்பார்களையும் பெற்றுள்ளன.

கேடிஎம் 250 ட்யூக்கிற்கும் ஹஸ்வர்ணா 250 பைக்கிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?

என்ஜினை பொறுத்த வரையில் இந்த மூன்று பைக்கிலும் ஒரே 248.8சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 30 பிஎச்பி பவரையும் 24 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மூன்று பைக்கிலும் என்ஜினுடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

கேடிஎம் 250 ட்யூக்கிற்கும் ஹஸ்வர்ணா 250 பைக்கிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?

ஹஸ்க்வர்னா ட்வின்ஸ் பைக்குகளில் என்ஜின் 250 ட்யூக்கை காட்டிலும் எடை குறைவாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்தலாம். அதேபோல் மேற்கூறப்பட்ட அளவுகளில் தான் ஹஸ்க்வர்னாவின் ட்வின்ஸ் பைக்குகள் ஆற்றலை வெளியிடவுள்ளதா என்பது சரியாக தெரியவில்லை.

கேடிஎம் 250 ட்யூக்கிற்கும் ஹஸ்வர்ணா 250 பைக்கிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?

சஸ்பென்ஷன் மற்றும் ப்ரேக்கிங் அமைப்புகள் அனைத்தும் 250 ட்யூக்கில் உள்ளதை போன்று ஹஸ்க்வர்னா ட்வின்ஸ் பைக்குகளில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மூன்று பைக்குகளிலும் முன் சக்கரத்தில் 43 மிமீ யூஎஸ்டி ஃபோர்க்கும் பின் சக்கரத்தில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் தான் சஸ்பென்ஷன் அமைப்பாக இருக்கும்.

கேடிஎம் 250 ட்யூக்கிற்கும் ஹஸ்வர்ணா 250 பைக்கிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?

ப்ரேக்கிங்கிற்காக 300 மிமீ டிஸ்க் முன்புறத்திலும் 230 மிமீ டிஸ்க் பின்புறத்திலும் உள்ளது. கூடுதலாக ட்யூல்-சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் அமைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் இல்லாத நிலையில் ஸ்ட்ரீட்ஃபைட்டர் 250 ட்யூக் பைக் 146 கிலோ எடையை கொண்டிருக்கும். அதேபோல் ஸவர்ட்பிளேன் 250 மாடல் 153 கிலோவிலும் விட்பிளேன் 250 பைக் 154 கிலோவிலும் எடையை கொண்டுள்ளன.

கேடிஎம் 250 ட்யூக்கிற்கும் ஹஸ்வர்ணா 250 பைக்கிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?

விலையில் ஹஸ்க்வர்னா பைக்குகள் விலையுயர்ந்ததாக காணப்படுகின்றன. கேடிஎம் 250 ட்யூக்கின் விலை ரூ.1.97 லட்சமாகவும் ஸவர்ட்பிளேன் 250 பைக்கின் விலை ரூ.2.3 லட்சமாகவும் விட்பிளேன் 250 பைக்கின் விலை ரூ.2.5 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆட்டோ #auto news
English summary
Different Between The Husqvarna 250s And The KTM 250 Duke
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X