ஹார்லி டேவிட்சன் பைக்குகள் மீது வரியை மேலும் குறைக்க டிரம்ப் வலியுறுத்தல்!

ஹார்லி டேவிட்சன் பைக்குகள் உள்பட அமெரிக்க தயாரிப்புகளுக்கு இந்தியாவில் விதிக்கப்படும் இறக்குமதி வரி ஏற்றுக்கொள்ள முடியாத அளவில் உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் குற்றம் சாட்டி உள்ளார்.

ஹார்லி டேவிட்சன் பைக்குகள் மீது வரியை மேலும் குறைக்க டிரம்ப் வலியுறுத்தல்!

அமெரிக்க பொருட்கள் மீது அதிக வரி விதிக்கும் நாடுகள் மீது வர்த்தக போரை தொடங்கி இருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். மேலும், சீனா, இந்தியா, ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்க தயாரிப்புகளுக்கு அதிக வரி விதிக்கப்படுவதற்கு கண்டனத்தையும், எதிர்ப்பையும் பதிவு செய்து வருகிறார்.

ஹார்லி டேவிட்சன் பைக்குகள் மீது வரியை மேலும் குறைக்க டிரம்ப் வலியுறுத்தல்!

மேலும், ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கு இந்தியாவில் 100 சதவீத வரி விதிக்கப்படுவதாகவும், இது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஏற்கனவே கூறி இருந்தார். வரியை குறைக்காவிடில், கடும் நடவடிக்கைகளை அமெரிக்கா எடுக்கும் என்றும் கூறி இருந்தார்.

ஹார்லி டேவிட்சன் பைக்குகள் மீது வரியை மேலும் குறைக்க டிரம்ப் வலியுறுத்தல்!

இந்த நிலையில், அமெரிக்க அதிபரின் கோரிக்கையை ஏற்று, அமெரிக்க தயாரிப்புகளுக்கான வரியை 100 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக குறைக்க நடவடிக்கை எடுப்பதாக மத்திய அரசு உறுதி தெரிவித்தது. இதையடுத்து, சில மாதங்கள் சாந்தமாக இருந்த அதிபர் டிரம்ப், மீண்டும் இந்தியா மீது காட்டமான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

ஹார்லி டேவிட்சன் பைக்குகள் மீது வரியை மேலும் குறைக்க டிரம்ப் வலியுறுத்தல்!

உலகிலேயே அதிகமான வரி விதிக்கும் நாடாக இந்தியா உள்ளது. வரிவிதிப்பில் மன்னன் என்றால் அது இந்தியாதான். ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கான வரியை 100 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக குறைப்பதாக இந்தியா அறிவித்தது. இது திருப்தி அளித்தாலும், போதாது.

ஹார்லி டேவிட்சன் பைக்குகள் மீது வரியை மேலும் குறைக்க டிரம்ப் வலியுறுத்தல்!

அவர்களிடமிருந்து (இந்தியா) வரும் தயாரிப்புகளுக்கு நாம் எந்த வரியையும் போடுவதில்லை. ஆனால், அவர்கள் கணிசமான வரியை விதிக்கின்றனர். இது ஏற்றுக் கொள்ள முடியாத விஷயம். 50 சதவீதமாக இறக்குமதி வரி குறைக்கப்பட்டதும் கூட போதாது," என்று கூறி இருக்கிறார்.

ஹார்லி டேவிட்சன் பைக்குகள் மீது வரியை மேலும் குறைக்க டிரம்ப் வலியுறுத்தல்!

இந்த விஷயம் மீண்டும் பிரச்னையை கிளப்பி இருப்பதால் இதுதொடர்பாக மத்திய அரசு மீண்டும் பரீசிலிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இல்லையெனில், இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீது கணிசமாக வரி விதிக்கும் வாய்ப்பு இருக்ககிறது.

ஹார்லி டேவிட்சன் பைக்குகள் மீது வரியை மேலும் குறைக்க டிரம்ப் வலியுறுத்தல்!

இதனிடையே, சீனாவுடனான வர்த்தக உறவில் ஏற்பட்ட விரிசல்கள் மறைய தொடங்கி இருக்கிறது. பேச்சுவார்த்தைகள் சுமூகமாக செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவிற்கு சீனாவே தேவலாம் என்ற அளவில் அவர் பேசி இருப்பதாக கருதப்படுகிறது.

Most Read Articles
English summary
Donald Trump calls India one of highest taxing nations in the world.
Story first published: Friday, April 5, 2019, 16:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X