ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு இந்த வாகனங்களை வாங்காதீர்கள்... மக்களுக்கு அதிகாரிகள் பகிரங்க எச்சரிக்கை

ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு குறிப்பிட்ட வாகனங்களை வாங்க வேண்டாம் என பொது மக்களுக்கு ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு இந்த வாகனங்களை வாங்காதீர்கள்... மக்களுக்கு அதிகாரிகள் பகிரங்க எச்சரிக்கை

இந்தியாவில் சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இரு சக்கர வாகனங்களின் பிரேக்கிங் திறனை மேம்படுத்தும்படி வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு இந்த வாகனங்களை வாங்காதீர்கள்... மக்களுக்கு அதிகாரிகள் பகிரங்க எச்சரிக்கை

இதன்படி இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 125சிசிக்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட இரு சக்கர வாகனங்களில் சிபிஎஸ் எனப்படும் காம்பி பிரேக்கிங் சிஸ்டம் (CBS- Combi Braking System) இடம்பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 125 சிசிக்கும் அதிகமாக இன்ஜின் திறன் கொண்ட இரு சக்கர வாகனங்களில் ஏபிஎஸ் எனப்படும் ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS- Anti-lock Braking System) இடம்பெறுவது கட்டாயம்.

ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு இந்த வாகனங்களை வாங்காதீர்கள்... மக்களுக்கு அதிகாரிகள் பகிரங்க எச்சரிக்கை

மத்திய அரசு பிறப்பித்துள்ள இந்த அதிரடி உத்தரவானது வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. சிபிஎஸ் மற்றும் ஏபிஎஸ் ஆகிய இரண்டு பிரேக்கிங் சிஸ்டம்களும் இரு சக்கர வாகனங்களுக்கு தேவையான முக்கிய பாதுகாப்பு வசதியாகும். இதன் காரணமாகதான் மத்திய அரசு அவற்றை கட்டாயமாக்கி உத்தரவிட்டுள்ளது.

ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு இந்த வாகனங்களை வாங்காதீர்கள்... மக்களுக்கு அதிகாரிகள் பகிரங்க எச்சரிக்கை

இந்த சூழலில், சிபிஎஸ் மற்றும் ஏபிஎஸ் இல்லாத ஸ்கூட்டர் மற்றும் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட டூவீலர்களை ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு வாங்க வேண்டாம் என பொது மக்களுக்கு ஆர்டிஓ அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு வாங்கப்படும் இரு சக்கர வாகனங்களில் சிபிஎஸ், ஏபிஎஸ் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு இந்த வாகனங்களை வாங்காதீர்கள்... மக்களுக்கு அதிகாரிகள் பகிரங்க எச்சரிக்கை

ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு இது தொடர்பான சோதனைகளை நடத்தவும் ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து புனேவை சேர்ந்த ஆர்டிஓ அதிகாரிகள் கூறுகையில், ''புதிய மாடல் இரு சக்கர வாகனங்களில் சிபிஎஸ், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இருக்கும். மத்திய அரசு உத்தரவு பிறப்பித்ததையடுத்து வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் மாடல்களில் அவற்றை வழங்கி வருகின்றன.

ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு இந்த வாகனங்களை வாங்காதீர்கள்... மக்களுக்கு அதிகாரிகள் பகிரங்க எச்சரிக்கை

ஆனால் சிபிஎஸ், ஏபிஎஸ் இல்லாத பழைய மாடல் இரு சக்கர வாகனங்களை டீலர்கள் விற்பனை செய்து வருகின்றனர். வரும் ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு, டீலர்களிடம் உள்ள பழைய மாடல்களிலும் சிபிஎஸ், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இருப்பதை இரு சக்கர வாகன நிறுவனங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். விற்பனையாகாமல் டீலர்களிடம் உள்ள பழைய மாடல் இரு சக்கர வாகனங்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டக்கூடும்.

ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு இந்த வாகனங்களை வாங்காதீர்கள்... மக்களுக்கு அதிகாரிகள் பகிரங்க எச்சரிக்கை

ஆனால் பழைய மாடல்களிலும் சிபிஎஸ், ஏபிஎஸ் இருப்பதை டீலர்களும் உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். இது தொடர்பான சோதனைகளை நாங்கள் மேற்கொள்ளவுள்ளோம்'' என்றனர். புனே ஆர்டிஓ அதிகாரிகள் சோதனை செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள அதிகாரிகளும் இதே பாணியில் சோதனை செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு இந்த வாகனங்களை வாங்காதீர்கள்... மக்களுக்கு அதிகாரிகள் பகிரங்க எச்சரிக்கை

எனவே நீங்கள் ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு ஸ்கூட்டர் அல்லது மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட டூவீலர்களை வாங்கினால், அதில் விதிமுறைப்படி சிபிஎஸ், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இருக்கிறதா? என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். வாகன பதிவின்போது உங்கள் வாகனத்தின் மீது ஆர்டிஓ நடவடிக்கை எடுக்காமல் இருப்பதையும் இதன்மூலம் உறுதி செய்து கொள்ள முடியும்.

ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு இந்த வாகனங்களை வாங்காதீர்கள்... மக்களுக்கு அதிகாரிகள் பகிரங்க எச்சரிக்கை

ஏற்கனவே குறிப்பிட்டபடி இரு சக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பிற்கு சிபிஎஸ், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டங்கள் உதவி செய்யும். இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் இவற்றை வழங்குவதால், டூவீலர்களின் விலை சற்று அதிகரித்துள்ளது. ஆனால் பணத்தை காட்டிலும் பாதுகாப்பு முக்கியம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு இந்த வாகனங்களை வாங்காதீர்கள்... மக்களுக்கு அதிகாரிகள் பகிரங்க எச்சரிக்கை

இரு சக்கர வாகனங்கள் மட்டுமல்லாது கார்களிலும் இத்தகைய பாதுகாப்பு வசதிகள் இடம்பெறுவதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதன்படி வரும் ஜூலை மாதம் 1ம் தேதி முதல், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து கார்களிலும், டிரைவர் சைடு ஏர்பேக், ரியர் பார்க்கிங் சென்சார்கள், டிரைவர் மற்றும் கோ-டிரைவருக்கு சீட்பெல்ட் ரிமைண்டர், ஸ்பீட் வார்னிங் சிஸ்டம் ஆகிய பாதுகாப்பு வசதிகள் இடம்பெறுவது கட்டாயமாகிறது.

Source:ETAuto

Most Read Articles
English summary
DON’T Buy Two Wheelers Without CBS/ABS After April 1st. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X