பாடல் கேட்டதற்காக லைசென்ஸ் பறிமுதல்: விலையுயர்ந்த பைக்கின் உரிமையாளர் வேதனை.. இதெல்லாம் ஓவரோ ஓவருங்க

பாடல் கேட்டதற்காக விலையுயர்ந்த பைக்கின் உரிமையாளருடைய லைசென்ஸைப் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

பைக்கில் பாடல் கேட்டதற்காக லைசென்ஸ் பறிமுதல்: விலையுயர்ந்த பைக்கின் உரிமையாளர் வேதனை... இதெல்லாம் ரொம்ப ஓவருங்க!

புதிய (திருத்தப்பட்ட) மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்ததில் இருந்து நாடே பெரும் பரபரப்பாக காணப்படுகின்றது. இதற்கு அண்மைக் காலங்களாக சமூக வலைதளம் மற்றும் செய்தி என திரும்பி பார்க்கும் அனைத்து பக்கங்களிலும் காணப்படும் அதிகபட்ச அபராத தொகை குறித்த தகவல்களே முக்கிய காரணமாக இருக்கின்றது.

பைக்கில் பாடல் கேட்டதற்காக லைசென்ஸ் பறிமுதல்: விலையுயர்ந்த பைக்கின் உரிமையாளர் வேதனை... இதெல்லாம் ரொம்ப ஓவருங்க!

புதிய சட்டம் நடைமுறைக்கு வந்ததில், குறிப்பிட்ட மாநில போலீஸார் தீவிர வேட்டையை நடத்தி வருகின்றனர். நாட்டில் போக்குவரத்து விதிமீறல்களே இல்லாத சூழலை உருவாக்கும் விதமாக மத்திய அரசு புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமலுக்குக் கொண்டு வந்தது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் சில மாநிலங்களின் போலீஸார் இத்தகைய செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

பைக்கில் பாடல் கேட்டதற்காக லைசென்ஸ் பறிமுதல்: விலையுயர்ந்த பைக்கின் உரிமையாளர் வேதனை... இதெல்லாம் ரொம்ப ஓவருங்க!

அந்தவகையில், இருசக்கர வாகன ஓட்டியொருவர் பைக்கில் இசையைக் கேட்டதற்காக போலீஸாரிடம் சிக்கியுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம், தலைநகர் டெல்லியில் அரங்கேறியுள்ளது. விஹார் பகுதியைச் சேர்ந்தவர் ராகவ் ப்ருதி. இவர், விலையுயர்ந்த சொகுசு ரக பைக்கான ஹார்லி டேவிட்சனின் ரோட்க்ளைட் பைக்கைப் பயன்படுத்தி வருகின்றார்.

பைக்கில் பாடல் கேட்டதற்காக லைசென்ஸ் பறிமுதல்: விலையுயர்ந்த பைக்கின் உரிமையாளர் வேதனை... இதெல்லாம் ரொம்ப ஓவருங்க!

இந்த பைக் பல்வேறு சிறப்பு வசதிகளைக் கொண்டதாக காணப்படுகின்றது. அந்த வகையில், சொகுசு கார்களில் இடம்பெறும் சில பிரிமியம் ரக வசதிகள் இந்த பைக்கில் இடம் பெற்றிருக்கின்றது. அதில் முக்கியமானதாக, இசையை ஒலக்கின்ற வகையிலான ஸ்பீக்கர் இருக்கின்றது.

இதுவே, ராகவைப் போலீஸார் மடக்கி செல்லாண் வழங்குவதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.

பைக்கில் பாடல் கேட்டதற்காக லைசென்ஸ் பறிமுதல்: விலையுயர்ந்த பைக்கின் உரிமையாளர் வேதனை... இதெல்லாம் ரொம்ப ஓவருங்க!

ராகவ் இந்த பைக்கை கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் தேதிதான் வாங்கியுள்ளார். எனவே இது கடந்த ஒரு மாத காலமாக பயன்பாட்டில் இருந்து வருகின்றது. இந்நிலையில், திலக் நகர் பகுதியில் அவர் சென்றுக் கொண்டிருந்தபோது, போலீஸர் அவரை மடக்கி ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, ராகவின் ஓட்டுநர் உரிமைத்தைப் போலீஸார் கேட்டுள்ளனர். அதற்கு, ஏன் என்னை மடக்கி ஓட்டுநர் உரிமத்தைக் கேட்கிறீர்கள் என்று போலீஸாரிடம் ராகவ் கேட்டுள்ளார்.

பைக்கில் பாடல் கேட்டதற்காக லைசென்ஸ் பறிமுதல்: விலையுயர்ந்த பைக்கின் உரிமையாளர் வேதனை... இதெல்லாம் ரொம்ப ஓவருங்க!

அதற்கு பதிலளித்த போலீஸார், பைக்கில் இருந்க ஸ்பீக்கர் மற்றும் சேடில் பேக்குகளை (saddlebags) கை காட்டி, அவற்றை ஆஃப்டர் மார்க்கெட் பொருட்களாக குறிப்பிட்டனர். இதற்காகவே தாங்கள் மடக்கியதாகவும் காரணம் தெரிவித்தனர். இதனால் அதிர்ந்துபோன ராகவ், அது மாடிஃபை பொருட்கள் அல்ல என்றும், ஹார்லி நிறுவத்தின் பைக்கிலேயே பொருத்தப்பட்டு விற்பனைக்கு வந்த வசதி என்றும் அவர் தெரிவித்தார்.

பைக்கில் பாடல் கேட்டதற்காக லைசென்ஸ் பறிமுதல்: விலையுயர்ந்த பைக்கின் உரிமையாளர் வேதனை... இதெல்லாம் ரொம்ப ஓவருங்க!

ஆனால், போலீஸார் அதனை ஏற்கவில்லை. இருப்பினும், தான் நிரபராதி என்பதை நிரூபிக்கும் வகையில், இந்தியாவில் விற்பனையாகும் ஹார்லி டேவிட்சன் ரோட்க்ளைட் பைக்கின் வீடியோ ஆதாரத்தையும் காண்பித்துள்ளார். ஆனால், இவையனைத்திற்கும் செவி சாய்க்காத திலக் நகர் போலீஸார், அதற்கான அபராத செல்லாணை வழங்கியுள்ளனர்.

பைக்கில் பாடல் கேட்டதற்காக லைசென்ஸ் பறிமுதல்: விலையுயர்ந்த பைக்கின் உரிமையாளர் வேதனை... இதெல்லாம் ரொம்ப ஓவருங்க!

இதனால், விரக்தியடைந்த ராகவ், இதுகுறித்து வெளியுலகிற்கு தெரியப்படுத்தும் வகையில், அவரது முகப்புத்தக பக்கத்தில் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதையடுத்து, அந்த இளைஞருக்கு திலக் நகர் போக்குவரத்து காவல்நிலைய அதிகாரியின் தொடர்பு எண் கிடைத்துள்ளது. ஆனால், ராகவின் அழைப்பிற்கு அவர் முறையாக பதிலளிக்கவில்லை என கூறப்படுகின்றது. இதற்கு முன்பாக பல முறை இ-மெயில் மற்றும் நேரடி வருகை என பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். அவையனைத்திற்கும் பலனில்லை என்று கூறப்படுகின்றது.

பைக்கில் பாடல் கேட்டதற்காக லைசென்ஸ் பறிமுதல்: விலையுயர்ந்த பைக்கின் உரிமையாளர் வேதனை... இதெல்லாம் ரொம்ப ஓவருங்க!

ஹார்லி டேவிட்சனின் 2019 ரோட்க்ளைட் மாடல் பைக்கை அவர் தனிப்பட்ட முறையில் இறக்குமதி செய்து பயன்படுத்தி வருகின்றார். இதற்காக அவர் ஆன்ரோடு விலையாக ரூ. 40 லட்சம் வரை செலுத்தியுள்ளார். இந்த மோட்டார்சைக்கிளில், பூம் பாக்ஸ் ஜிடிஎஸ் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 25 வாட் திறன் கொண்ட இரு ஸ்பீக்கற்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிமியம் வசதிகள் இடம்பெற்றிருக்கின்றன.

பைக்கில் பாடல் கேட்டதற்காக லைசென்ஸ் பறிமுதல்: விலையுயர்ந்த பைக்கின் உரிமையாளர் வேதனை... இதெல்லாம் ரொம்ப ஓவருங்க!

இதுபோன்ற அம்சத்தை ஹார்லி டேவிட்சனின் குறிப்பிட்ட மாடல்கள் மட்டுமே பெற்றிருக்கின்றன. மேலும், இந்தியன் நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் சிலவும் பெற்றுள்ளன.

ஆனால், மோட்டார்சைக்களில் இந்த சிறப்பம்சம் இடம்பெற்றிருக்கும் காரணத்திற்காக அபராதத்தை வழங்கும் சம்பவம் இதுவே முதல் முறையாகும்.

பைக்கில் பாடல் கேட்டதற்காக லைசென்ஸ் பறிமுதல்: விலையுயர்ந்த பைக்கின் உரிமையாளர் வேதனை... இதெல்லாம் ரொம்ப ஓவருங்க!

இதில், ராகவுக்கு மோட்டார் வாகன சட்டம் 102 மற்றும் 177 ஆகிய பிரிவுகளின்கீழ் அபராத செல்லாண் வழங்கப்பட்டுள்ளது. செல்லாண் வழங்கியது மட்டுமில்லாமல் அவரின் ஓட்டுநர் உரிமத்தையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இதற்கான அபராதமாக போலீஸார் ரூ. 500 விதித்துள்ளனர்.

பைக்கில் பாடல் கேட்டதற்காக லைசென்ஸ் பறிமுதல்: விலையுயர்ந்த பைக்கின் உரிமையாளர் வேதனை... இதெல்லாம் ரொம்ப ஓவருங்க!

அபராதம் சிறிதாக இருந்தாலும், ராகவை போலீஸார்கள் மிகவும் கீழ் தரம் தாழ்த்தி நடத்தியதாக கூறப்படுகின்றது. இதுபோன்ற ஒரு சில காரணங்களால் தற்போது தனது போராட்டத்தை சமூக வலைதளத்தில் அவர் தொடங்கியுள்ளார்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Driving License Seized For Playing Music. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X