பேட்டரியில் இயங்கும் டுகாட்டி சூப்பர் பைக் வருகை விபரம்!

இத்தாலியை சேர்ந்த டுகாட்டி நிறுவனம் சூப்பர் பைக் தயாரிப்பில் உலகப் புகழ்பெற்ற நிறுவனமாக விளங்குகிறது. இந்த நிலையில், எதிர்கால சந்தையை கவனத்தில் கொண்டு மின்சார பைக் மாடல் உருவாக்கத்திலும் அந்நிறுவனம்

பேட்டரியில் இயங்கும் மின்சார பைக்குகளை அறிமுகப்படுத்துவது குறித்து டுகாட்டி நிறுவனம் முக்கிய தகவலை வெளியிட்டு இருக்கிறது. அதன் விபரத்தை பார்க்கலாம்.

பேட்டரியில் இயங்கும் டுகாட்டி சூப்பர் பைக் வருகை விபரம்!

இத்தாலியை சேர்ந்த டுகாட்டி நிறுவனம் சூப்பர் பைக் தயாரிப்பில் உலகப் புகழ்பெற்ற நிறுவனமாக விளங்குகிறது. இந்த நிலையில், எதிர்கால சந்தையை கவனத்தில் கொண்டு பேட்டரியில் இயங்கும் மின்சார பைக் மாடல் உருவாக்கத்திலும் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

பேட்டரியில் இயங்கும் டுகாட்டி சூப்பர் பைக் வருகை விபரம்!

அதன்படி, முதல் மின்சார மாடலை வரும் 2021ம் ஆண்டு அறிமுகம் செய்வதற்கு அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த தகவலை டுகாட்டி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கிளவ்டியோ டோமினிகாலி தெரிவித்துள்ளார்.

பேட்டரியில் இயங்கும் டுகாட்டி சூப்பர் பைக் வருகை விபரம்!

இத்தாலியின் மிலன் நகரில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்ட டுகாட்டி ஹைப்பர்மோட்டார்டு கான்செப்ட்டை டோமினிகாலி ஓட்டி பார்த்தது குறித்த ஸ்பை படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்த எலெக்ட்ரிக் பைக் கான்செப்ட் மாடலில் ஸீரோ எஃப்எக்ஸ் பவர்ட்ரெயின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

பேட்டரியில் இயங்கும் டுகாட்டி சூப்பர் பைக் வருகை விபரம்!

எனினும், மேலும் பல புதிய மின் மோட்டார்கள், பேட்டரி மற்றும் டிரான்ஸ்மிஷன் அமைப்புகளுடன் தனது எலெக்ட்ரிக் பைக் மாடல்களை டுகாட்டி நிறுவனம் சோதித்து வருகிறது. எது சிறந்ததாக இருக்கும் என்ற ஆய்வுகள் நடந்து வருகின்றன. இந்த ஆய்வுகள் முடிந்து விரைவில் புரோட்டோடைப் மாடல்களுடன் சோதனை ஓட்டம் துவங்கும் என தெரிகிறது.

பேட்டரியில் இயங்கும் டுகாட்டி சூப்பர் பைக் வருகை விபரம்!

இதுதவிர, மோட்டோ இ வேர்ல்டு கப் என்ற மின்சார பைக்குகளுக்கான முதல் தர பைக் பந்தயத்தில் இத்தாலியை சேர்ந்த எனெர்ஜிக்கா என்ற மின்சார வாகன தயாரிப்பு நிறுவனத்துடன் கூட்டணி போட்டு, மின்சார ரேஸ் பைக்கையும் உருவாக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

பேட்டரியில் இயங்கும் டுகாட்டி சூப்பர் பைக் வருகை விபரம்!

மேலும், எனெர்ஜிக்கா ஈகோ கார்ஸா சூப்பர்ஸ்போர்ட் என்ற மின்சார ரேஸ் பைக்கும் மோட்டோ ஜீபி பைக் பந்தயங்களின்போது தொடர்ந்து ஓர் ஆண்டு சோதனை ஓட்டத்தில் வைக்கப்பபட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பேட்டரியில் இயங்கும் டுகாட்டி சூப்பர் பைக் வருகை விபரம்!

ஹார்லி டேவிட்சன் உள்ளிட்ட நிறுவனங்கள் மின்சார பைக் மாடல்களை களமிறக்குவதில் முனைப்பு காட்டி வரும் நிலையில், டுகாட்டி நிறுவனமும் இப்போது எலெக்ட்ரிக் சூப்பர் பைக் தயாரிப்பில் அதீத கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

பேட்டரியில் இயங்கும் டுகாட்டி சூப்பர் பைக் வருகை விபரம்!

அடுத்த 5 ஆண்டுகளுக்குள் மார்க்கெட்டில் பெட்ரோல் பைக்குகள் குறைந்து, மின்சார பைக் மாடல்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துவிடும் வாய்ப்பு இருக்கிறது. பட்ஜெட் விலையில் மட்டுமின்றி சூப்பர் பைக் ரகத்திலும் மின்சார பைக்குகள் வந்துவிடும் என்பதை இந்த தகவல்கள் உறுதிப்படுத்தி இருக்கின்றன.

Image Courtesy: Bart Heijt design

Most Read Articles
மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Ducati has confirmed the series production of its first electric motorcycle. According to Claudio Domenicali, CEO, Ducati, the company will introduce their electric motorcycle by 2021.
Story first published: Tuesday, January 29, 2019, 10:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X