டுகாட்டியின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: சிறப்பு தகவல்!

டுகாட்டி நிறுவனம் சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் விமோட்டோ நிறுவனத்துடன் இணைந்து எலக்ட்ரிக் ஸ்கூட்டரைத் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் விரிவாகக் காணலாம்.

டுகாட்டியின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: சிறப்பு தகவல்!

இத்தாலி நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் டுகாட்டி நிறுவனம், அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட ஸ்போர்ட்ஸ் ரக பைக்குகள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையில், இந்த நிறுவனம் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பிலும் ஈடுபட இருப்பதாக அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தது.

டுகாட்டியின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: சிறப்பு தகவல்!

இதற்காக, சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் விமோட்டோ என்ற எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனத்துடன் கை கோர்த்திருப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், இந்த இரு நிறுவனங்களும் இணைந்து முதலாவதாக சியூஎக்ஸ் என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை, டுகாட்டியின் பிராண்ட் பெயரில் தயாரிக்க இருக்கின்றன.

டுகாட்டியின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: சிறப்பு தகவல்!

சியுஎக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விமோட்டோ நிறுவனம் ஏற்கனவே சந்தையில் அறிமுகம் செய்து, அதனை விற்பனையும் செய்து வருன்கிறது. ஆனால், தற்போது இந்த நிறுவனங்களின் இணைப்பைத் தொடர்ந்து, இனி இந்த ஸ்கூட்டர் டுகாட்டியின் நிறுவனத்தின்கீழ் வெளியாக இருக்கின்றது. அதேசமயம், இந்த ஸ்கூட்டரின் தற்போதைய மாடலைக் காட்டிலும் சக்தி வாய்ந்ததாகவும், அதிக திறன் கொண்டதாகவும் உருவாக்க இந்த நிறுவனங்கள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.

டுகாட்டியின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: சிறப்பு தகவல்!

அவ்வாறு, தற்போது உருவாக இருக்கும் டுகாட்டியின் இந்த முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிக விலையைக் கொண்டதாக விற்பனைக்கு வரலாம் என கூறப்படுகிறது. மேலும், இந்த ஸ்கூட்டரின் விற்பனை மற்றும் விநியோகத்தை விமோட்டோ நிறுவனமும், மார்கெட்டிங் உள்ளிட்ட பணிகளை டுகாட்டி நிறுவனமும் மேற்கொள்ள இருக்கின்றது.

டுகாட்டியின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: சிறப்பு தகவல்!

தற்போது, விற்பனையில் இருக்கும் விமோட்டோவின் சியுஎக்ஸ் ஸ்கூட்டரில், 1.8kWH பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 75 கிமீ தூரம் வரைச் செல்லும். அந்த வகையில், இந்த ஸ்கூட்டரில் 2.8kW போஸ்ச் ஹப் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.

டுகாட்டியின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: சிறப்பு தகவல்!

இது 3.7 பிஎச்பி பவரை வழங்கும் திறன் கொண்டது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 45 கிமீட்டராக இருக்கின்றது. இந்த ஸ்கூட்டரின் முன்பக்கத்தில் பிரத்யேகமாக கேமிரா வழங்கப்பட்டுள்ளது. இது, வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க உதவுகிறது. இத்துடன் பல்வேறு தொழில்நுட்பங்களும் இணைக்கப்பட்டு உள்ளன.

டுகாட்டியின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: சிறப்பு தகவல்!

டுகாட்டி நிறுவனமும், சீன நிறுவனமான விமோட்டோவும், இந்த ஸ்கூட்டரை லிமிடெட் எடிஷனில் தயாரிக்க இருக்கின்றன.

இதுகுறித்து, விமோட்டோ நிறுவனம் கூறுகையில், "இந்த நிகழ்வினால், சீனாவை மட்டும் மையமாகக் கொண்டு இயங்கும் விமோட்டோ, உலகம் முழுவதும் பிரபலமடைய இருக்கின்றது. சர்வதேச சந்தையில் எங்களது ஆதிக்கத்தை செலுத்த இந்த இணைப்பு மிகப் பெரிய அளவில் உதவியாக இருக்கும். முக்கியமாக ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் மிகவும் பிரபலமடைய இருக்கின்றது" என தெரிவித்தது.

Most Read Articles
மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Ducati Introduce Electric Scooter With Chinese Brand Vmoto. Read In Tamil.
Story first published: Saturday, May 4, 2019, 10:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X