டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 1260 பைக் என்டியூரோ பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 1260 என்டியூரோ ஆஃப்ரோடு பைக் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த பைக்கின் முக்கிய அம்சங்கள் மற்றும் விலை விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 1260 பைக் என்டியூரோ பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 1260 அட்வென்ச்சர் டூரர் பைக்கின் ஆஃப்ரோடு வெர்ஷனாக இந்த மல்டிஸ்ட்ரேடா 1260 என்டியூரோ பைக் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த பைக் முழுவதுமாக கட்டமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட இருக்கிறது.

டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 1260 பைக் என்டியூரோ பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

முந்தைய மாடலைவிட ஏராளமான கூடுதல் சிறப்பம்சங்களுடன் இந்த பைக் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 1260 என்டியூரோ பைக்கில் 1,262 சிசி எல் - ட்வின் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 3,500 ஆர்பிஎம் என்ற எஞ்சின் சுழல் வேகத்திலேயே 85 சதவீத டார்க்கை வழங்கும் திறன் கொண்டது.

டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 1260 பைக் என்டியூரோ பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

அதிகபட்சமாக 157.7 பிஎஸ் பவரையும், 128 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இரு திசை செயல்பாடு கொண்ட குயிக் ஷிஃப்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது.

டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 1260 பைக் என்டியூரோ பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த பைக்கில் 5 அங்குல டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஓட்டுபவர் எளிதாக தகவல்களை பெறுவதற்கும், எழுத்துக்களை படிப்பதற்கும் சிறப்பானதாாக இந்த திரை அமைப்பு உள்ளது.

டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 1260 பைக் என்டியூரோ பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

மேலும், டுகாட்டி மல்டிமீடியா சிஸ்டம் மூலமாக இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரை ஸ்மார்ட்ஃபோனுடன் இணைத்துக் கொள்ள இயலும். போன் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்களை அனுப்புவதற்கு எளிதான வசதியை வழங்கும்.

டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 1260 பைக் என்டியூரோ பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 1260 என்டியூரோ பைக்கில் முன்புறத்தில் டுகாட்டி ஸ்கைஹூக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சஸ்பென்ஷன் அமைப்பின் டிராவல் நீளம் 15 மிமீ குறைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 1260 பைக் என்டியூரோ பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

அதேபோன்று, இருக்கை உயரமும் 10 மிமீ குறைக்கப்பட்டு இருக்கிறது. ஹேண்டில்பார் மற்றும் ஃபுட் பெக்குகளின் வடிவமைப்பிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்புறத்தில் பிரெம்போ எம்4.32 ரேடியல் காலிபர்கள் கொண்ட 320 மிமீ டியூவல் டிஸ்க்குகள் கொண்ட பிரேக்கும், பின்புறத்தில் சிங்கிள் டிஸ்க் பிரேக்கும் உள்ளன.

டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 1260 பைக் என்டியூரோ பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 1260 என்டியூரோ பைக்கில் சாம்பல் வண்ணத்திற்கு பதிலாக புதிய மணல் வண்ணக் கலவையும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும், சிவப்பு வண்ணத்தைவிட இந்த விசேஷ வண்ணம் ரூ.24,000 கூடுதல் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 1260 பைக் என்டியூரோ பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

பாஷ் இனர்ஷியல் மெசர்மென்ட் சிஸ்டம், கார்னரிங் ஏபிஎஸ், டுகாட்டி வீலி கன்ட்ரோல், நான்குவிதமான ரைடிங் மோடுகள் ஆகியவை இதன் முக்கிய தொழில்நுட்ப அம்சங்களாக இடம்பெற்றுள்ளன.

டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 1260 பைக் என்டியூரோ பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 1260 என்டியூரோ பைக் ரூ.19.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ட்ரையம்ஃப் டைகர் 1200 எக்ஸ்சிஎக்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ ஆர் 1250 ஜிஎஸ் அட்வென்ச்சர் பைக் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles

மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Italian bike manufaturer, Ducati has launched its most hardcore adventure motorcycle, the Multistrada 1260 Enduro, in India at Rs 19.99 lakh (ex-showroom India).
Story first published: Tuesday, July 9, 2019, 15:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X