டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்

இத்தாலி நாட்டை சேர்ந்த மோட்டார்சைக்கிள் நிறுவனமான டுகாட்டி, பைக்குகளின் டிசைன் செயல்பாடுகளுக்காக லினோவா நிறுவனத்துடன் கூட்டணி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் லினோவாவின் அதி தொழிற்நுட்ப கம்ப்யூட்டிங் க்ளஸ்ட்டரை இனி வரும் பைக்குகளின் டிசைன் வடிவமைப்பிற்கு டுகாட்டி நிறுவனம் பயன்படுத்தி கொள்ளும்.

டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்

லினோவா உடன் டுகாட்டியின் ட்ராக் மற்றும் சாலை பைக்குகளின் டிசைன் வடிவமைப்பிற்கு இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்த எச்பிசி அமைப்பும் உதவ உள்ளது. மேலும் இந்த நிறுவனம் புதியதாக கொண்டு வந்துள்ள இந்த டிசைன் மாற்றம் பைக்குகளில் வெவ்வேறான சூழ்நிலைகளில் எவ்வாறு பிரதிப்பலிக்கிறது என்பதை அளவிட ஏரோடைனமிக்ஸ் மற்றும் டைனமிக் மாடலிங் கருவிகளை பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்

இந்த டிசைன் வடிவமைப்பில் கொண்டு வரப்படும் மாற்றம் சூப்பர் பைக்குகள் மற்றும் ஜிபி பைக்குகளுக்காக மட்டுமல்ல, சாலையில் சாதாரண முறையில் ஓட்டக்கூடிய பைக்குகளுக்கும் சேர்த்து தான். இதன்மூலம் பொது பயன்பாட்டிற்காக பைக்கை வாங்குபவர்களும் சூப்பர் பைக் தரும் அனுபவத்தை பெறலாம்.

டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்

இதுகுறித்து டுகாட்டி நிறுவனத்தின் முதன்மை தொழிற்நுட்ப அதிகாரி கான்ஸ்டான்டின் கோஸ்டெனரோவ் கூறுகையில், சாலை மற்றும் ரேஸிங் மோட்டார் சைக்கிள்களின் டிசைன் மேம்பாட்டிற்கு எச்பிசி அமைப்பு தான் மிக முக்கிய பங்காற்றுகிறது. எங்களது நிறுவனம் எப்போதும் புதிய முறைகளில் வாகனங்களை இன்னும் வேகமாகவும், பாதுகாப்பாகவும் மற்றும் வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் தயாரிக்கவே முயற்சித்து வருகிறது.

டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்

இதுவரை டிசைன் செயல்பாடுகளில் பயன்படுத்தப்பட்டு வந்த எச்பிசி அமைப்பில் உள்ள உள்கட்டமைப்பின் செயல்திறன், நம்பகத்தன்மை மற்றும் வளைந்து கொடுக்க கூடிய தன்மை போன்றவை நீண்ட காலத்திற்கு புதிய டிசைன்களை உருவாக்கும் விதத்தில் இல்லை. இதனால் தான் லினோவாவின் எச்பிசி அமைப்பிற்கு எங்களது நிறுவனம் மாறியுள்ளது என்றார்.

டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்

டுகாட்டியின் ஐடி மேனஜர் ஸ்டெபனோ ரெண்டினா கூறுகையில், முன்னதாக எங்களது எச்பிசி அமைப்பால் மாடல்கள் மற்றும் சோதனை ஓட்டங்களின் முடிவுகள் வித்தியாசமாக கிடைக்க துவங்கின. இதனால் இப்போது நாங்கள் முழுவதும் மாறுபட்ட எளிதாக விளங்கக்கூடிய அமைப்பிற்கு மாறியுள்ளோம். இந்த தகவல் மாற்ற வேலைகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன என்றார்.

Most Read:சைக்கிளால் கூட நுழைய முடியாத பாதையில் புகுந்த ஹோண்டா பைக்.. அடுத்து நடந்தது என்ன? அதிர்ச்சி வீடியோ!

டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்

பெரும்பாலான சூப்பர் பைக்குகள் அனைத்தும் டிஜிட்டல் அமைப்பில் இருந்து தான் வந்தன. இதனால் தான் டுகாட்டி நிறுவனம் தனது டிசைன் வடிவமைப்பிற்கு லினோவா நிறுவனத்தை இணைத்து கொண்டுள்ளது.

இதனால் டுகாட்டி நிறுவனம் இனி அறிமுகம் செய்யும் பைக்குகள் அனைத்தும் மிக சிறந்த டிசைன்களில் வெளிவரும். அதேநேரம் இந்த டிசைன் மாற்றத்தால் பைக்குகளின் வேகமும் அதிகரிக்கும் என்பது உறுதி.

Most Read Articles

மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Ducati Partners With Lenovo To Design Superbikes
Story first published: Wednesday, October 23, 2019, 19:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X