ஐக்மா கண்காட்சியில் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கிற்கு கிடைத்த கௌரவம்...

2019ஆம் ஆண்டிற்கான ஐக்மா மோட்டார்சைக்கிள் கண்காட்சி இத்தாலியில் நடைபெற்று வருகிறது. இதில் வாடிக்கையாளர்களின் பார்வைக்காக வைக்கப்பட்ட டுகாட்டி நிறுவனத்தின் ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக் ஐக்மாவின் மிக அழகான பைக்கிற்கான விருதை பெற்றுள்ளது.

ஐக்மா கண்காட்சியில் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கிற்கு கிடைத்த கௌரவம்...

கண்காட்சியில் ஐந்து நாட்களாக கலந்துகொண்ட பார்வையாளர்களின் வாக்குக்களின்படியே டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 இந்த விருதை தட்டி சென்றுள்ளது. இது ஐக்மா கண்காட்சியில் டுகாட்டி நிறுவனம் பெறும் 10வது விருதாகும். இந்த விருதை பெற்றதால் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக் ஐக்மாவுடன் கூட்டணியில் உள்ள இத்தாலியன் மோட்டார்சைக்கிள் பத்திரிக்கையான மோட்டோசிசிலிஸ்மோவில் இடம்பெறவுள்ளது.

ஐக்மா கண்காட்சியில் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கிற்கு கிடைத்த கௌரவம்...

இந்த பத்திரிக்கையின் வாசிப்பாளர்கள் மற்றும் ஐக்மா கண்காட்சியின் பார்வையாளர்கள் என மொத்தம் 14,500 மோட்டார்சைக்கிள் பிரியர்கள் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கிற்கு வாக்களித்துள்ளனர். இதனால் இந்த பைக் மொத்த வாக்கு எண்ணிக்கையில் 36.7 சதவீத வாக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது.

ஐக்மா கண்காட்சியில் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கிற்கு கிடைத்த கௌரவம்...

இந்த வாக்கு எண்ணிக்கை முடிவை கண்காட்சியின் இறுதி நாளான நவம்பர் 10ஆம் தேதி தான் ஐக்மா நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அப்போது கலந்து கொண்டு பேசிய டுகாட்டி நிறுவனத்தின் டிசைன் மைய இயக்குனர் ஆண்ட்ரியா பெற்றாரேசி, ஐக்மாவில் தனது பிரபலமான மாடல்களுடன் கலந்துக்கொண்ட நிறுவனங்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு மத்தியில் இந்த விருதை பெறுவது பெருமையாக உள்ளது.

ஐக்மா கண்காட்சியில் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கிற்கு கிடைத்த கௌரவம்...

உலகில் மிக முக்கிய மோட்டார்சைக்கிளாக விளங்கும் ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4, மிக அழகான பைக்கிற்கான விருதையும் பெற்றுவிட்டது என்றார். ஒரு வாரம் முழுவதும் நடைபெற்ற இந்த மிக அழகான பைக்கை தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சியில் சுமார் 5 லட்ச பார்வையாளர்கள் கலந்துகொண்டனர். இது கடந்த ஆண்டை விட அதிகமாகும்.

ஐக்மா கண்காட்சியில் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கிற்கு கிடைத்த கௌரவம்...

டுகாட்டி நிறுவனம் இந்த ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக்கில் அகலமான ஹேண்டில்பார், 208 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட 1.2 லிட்டர் டெஸ்மோசெடிசி ஸ்ட்ராடேல் என்ஜின், பக்கவாட்டில் இரு றெக்கை போன்ற அமைப்பு மற்றும் மேலும் பல நவீன தொழிற்நுட்பங்களை வழங்கியுள்ளது.

ஐக்மா கண்காட்சியில் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கிற்கு கிடைத்த கௌரவம்...

இந்த ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்குடன், புதிய பணிகளே வி2, 2020 பணிகளே வி4, மல்டிஸ்ட்ராடா 1260 எஸ் கிராண்ட் டூர், கருமையான நிறத்தை கொண்ட டியாவெல் 1260, டுகாட்டி நிறுவனத்தின் வழக்கமான சிவப்பு நிறத்தில் உள்ள டியாவெல் 1260 எஸ் போன்றவையும் ஐக்மா கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஐக்மா கண்காட்சியில் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கிற்கு கிடைத்த கௌரவம்...

இந்த ஐக்மாவின் மிக அழகான பைக்கிற்கான விருதையே பெற்றுள்ளதால் ஸ்ட்ரீட்ஃபைட்டரின் தோற்றம் மற்றும் டிசைன் எப்படியான கண்கவரும் விதத்தில் இருக்கும் என்பதை நினைத்து பாருங்கள். எப்படி இருப்பினும் இந்த விருது கண்டிப்பாக ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கிற்கு மட்டுமல்லாமல் டுகாட்டியின் புதிய பைக்குகள் அனைத்திற்கும் சிறந்த இலவச விளம்பரத்தை பெற்று தரும் என்பது உறுதி.

Most Read Articles
மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Ducati Streetfighter V4 Wins Beauty Contest At EICMA 2019
Story first published: Wednesday, November 13, 2019, 12:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X