வாவ்.. மின்சார பைக்கிற்கு இவ்ளோ திறனா: இந்தியாவின் முதல் சூப்பர் எலெக்ட்ரிக் பைக் டீசர் வீடியோ கசிவு

எதிர்காலத்தை ஆளுகின்ற வகையிலான பல திறன்களைக் கொண்ட மின்சார பைக்கின் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது. இதுகுறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

வாவ்... மின்சார பைக்கிற்கு இவ்ளோ திறனா: எதிர்காலத்தை ஆளவிருக்கும் எம்ஃப்ளக்ஸ் ஒன்... டீசர் வீடியோ!!

கர்நாடகா மாநிலம், பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் என்ஃப்ளக்ஸ். இது மின்சார வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றது.

இந்நிறுவனம், எம்ஃபிளக்ஸ் ஒன் என்ற மின்சார சூப்பர் பைக்கை உருவாக்கியுள்ளது. இந்த தரத்தில் இந்தியாவில் தயார் செய்யப்பட்டிருக்கும் முதல் மின்சார பைக் இதுவே ஆகும்.

வாவ்... மின்சார பைக்கிற்கு இவ்ளோ திறனா: எதிர்காலத்தை ஆளவிருக்கும் எம்ஃப்ளக்ஸ் ஒன்... டீசர் வீடியோ!!

இதனை என்ஃப்ளக்ஸ் நிறுவனம், கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற வாகன கண்காட்சியில்தான் முதல் முறையாக காட்சிப்படுத்தியிருந்தது. இது மிக விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. இருப்பினும் அந்நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வமான தகவல் இதுவரை வெளியாகவில்லை.

ஆனால், இந்த பைக் விற்பனைக்கு வரும்போது குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே வரும் என தகவல் தெரிவிக்கின்றன.

வாவ்... மின்சார பைக்கிற்கு இவ்ளோ திறனா: எதிர்காலத்தை ஆளவிருக்கும் எம்ஃப்ளக்ஸ் ஒன்... டீசர் வீடியோ!!

இந்நிலையில், எம்ஃப்ளக்ஸ் ஒன் பைக்கின் அதீத திறனை வெளிப்படுத்துகின்ற வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. மின்சார பைக்கில் இத்தகைய திறன் வெளிப்பாடா என்று முனுமுனுக்கின்ற வகையில் அந்த வீடியோ வெளியாகி இருக்கின்றது.

அதேசமயம், இதன் அதீத திறனைப் பார்த்த சிலர் இந்த பைக் எப்போது விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கும் வகையில் இருக்கின்றது. அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்....

தற்போது வெளியாகியிருக்கும் வீடியோ மூலம் பைக்கில் பெரிய அளவிலான பைரெல்லி டயர் இணைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது 17 இன்ச் அளவிலான அலாய் வீலில் இணைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, இந்த பைக் எடைக் குறைந்த ட்யூபுலர் ஸ்டீலினாலான ட்ரெல்லிஸ் ஃப்ரேம் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆகையால், இந்த பைக் சற்று எடை குறைவாக இருக்கும் என தெரிகின்றது. இது காற்றில் மிதந்தவாறு செல்வதற்கு ஏதுவாக இருக்கும்.

வாவ்... மின்சார பைக்கிற்கு இவ்ளோ திறனா: எதிர்காலத்தை ஆளவிருக்கும் எம்ஃப்ளக்ஸ் ஒன்... டீசர் வீடியோ!!

இதைத்தொடர்ந்து, எம்ஃப்ளக்ஸ் ஒன் மின்சார பைக்கில் பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகளும் இடம்பெற்றிருக்கின்றன. அந்தவகையில், 6.8 இன்சிலான டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் பேனல் வழங்கப்பட்டுள்ளது. இது, ஜிபிஎஸ் நேவிகேஷன், ப்ளூடூத், ஒய்-பை மற்றும் மொபைல் ஆப் உள்ளிட்ட அம்சங்களை அடக்கிக் கொண்டுள்ளது.

இதில் வழங்கப்படும் மொபைல் ஆப்பினை பயன்படுத்தி சில அம்சங்களை எளிதாக மாற்றியமைத்துக் கொள்ள முடியும்.

வாவ்... மின்சார பைக்கிற்கு இவ்ளோ திறனா: எதிர்காலத்தை ஆளவிருக்கும் எம்ஃப்ளக்ஸ் ஒன்... டீசர் வீடியோ!!

இந்த மின்சார பைக்கில் 60kW AC திறன் கொண்ட மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது 70 பிஎச்பி திறனை வெளிப்படுத்தும். இதற்கான சக்தியை சாம்சங் நிறுவனத்தின் 9.7 kWh பேட்டரி வழங்குகின்றது. இந்த பேட்டரியை பாஸ்ட் சார்ஜிங் முறையில் சார்ஜ் செய்யும்போது 80 சதவீதத்தை வெறும் அரை மணி நேரத்திலேயே அடைந்துவிடும்.

வாவ்... மின்சார பைக்கிற்கு இவ்ளோ திறனா: எதிர்காலத்தை ஆளவிருக்கும் எம்ஃப்ளக்ஸ் ஒன்... டீசர் வீடியோ!!

மேலும், இதனை முழுமையாக் சார்ஜ் செய்தால் எந்தவொரு பயமுமின்றி 200 கிமீ தூரம் வரை செல்லலாம். அதேபோன்று, இந்த பைக்கின் உச்சபட்ச வேகம் மணிக்கு 200 கிமீட்டராக இருக்கின்றது.

எம்ஃப்ளக்ஸ் ஒன் மின்சார பைக் எஞ்ஜின் திறன் மற்றும் தொழில்நுட்ப வசதிகளில் மட்டுமின்றி சொகுசு வசதியிலும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கின்றது.

வாவ்... மின்சார பைக்கிற்கு இவ்ளோ திறனா: எதிர்காலத்தை ஆளவிருக்கும் எம்ஃப்ளக்ஸ் ஒன்... டீசர் வீடியோ!!

அந்தவகையில், சிறப்பான சஸ்பென்ஷன் அமைப்பிற்காக 43மிமீ அளவுகொண்ட யுஎஸ்டி ஃபோர்க் முன்பக்கத்தில் நிறுவப்பட்டுள்ளது. இது விற்பனைக்கு வரும்போது ஓட்ட பந்தய பைக்குகளில் பயன்படுத்தப்படும் ஓஹ்லின்ஸ் யுஎஸ்டி ஃபோர்க் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேபோன்று, பின்பக்கத்தில் தற்போது கேஸ் சார்ஜ் மோனோஷாக் காணப்படுகின்றது. இதுவும், விற்பனைக்கு வரும்போது ஒஹ்லின்ஸ் 46மிமீ மோனோட்யூப் கேஸ் ஷாக்காக மாற்றமடையலாம் என கூறப்படுகின்றது.

வாவ்... மின்சார பைக்கிற்கு இவ்ளோ திறனா: எதிர்காலத்தை ஆளவிருக்கும் எம்ஃப்ளக்ஸ் ஒன்... டீசர் வீடியோ!!

தொடர்ந்து, பிரேக்கிங் வசதிக்காக பிரெம்போ 300மிமீ அளவுடைய ட்யூவல் டிஸ்க் பிரேக், பைக்கின் முன் புற வீலில் இடம்பெற இருக்கின்றது. மேலும், பின்புறத்தில் 200மிமீ அளவுடைய ஒரு டிஸ்க் பிரேக் இடம்பெற இருக்கின்றது. இத்துடன், ட்யூவல் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதியும் இந்த பைக்கில் இடம்பெறுகின்றது. இது ரைடரின் அதீத பாதுகாப்பிற்கு வழி வகுக்கும்.

வாவ்... மின்சார பைக்கிற்கு இவ்ளோ திறனா: எதிர்காலத்தை ஆளவிருக்கும் எம்ஃப்ளக்ஸ் ஒன்... டீசர் வீடியோ!!

இதுபோன்று, அனைத்து வசதிகளும் இந்த பைக்கின்மீது உள்ள எதிர்பார்ப்பை மேலும் தூண்டும் வகையில் அமைகின்றது. இது, இந்திய மதிப்பில் ரூ. 5.5 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த பைக்கின் அறிமுகத்தைத் தொடர்ந்து, எம்ஃப்ளக்ஸ் டூ மற்றும் டூ ப்ளஸ் ஆகிய மாடல்களும் களமிறக்கப்பட உள்ளன. இது விரைவில் அறிமுகமாக உள்ள எம்ஃப்ளக்ஸ் ஒன் மாடலைக் காட்டிலும் அதிக திறனைக் கொண்டதாக களமிறக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
English summary
Emflux One Electric Sports Bike Teaser - Video. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X